> என் ராஜபாட்டை : ajith

.....

.
Showing posts with label ajith. Show all posts
Showing posts with label ajith. Show all posts

Monday, October 7, 2013

ஆரம்பம்




இப்போ நாம பதிவில் பார்க்க போவது நம்ம தல நடித்து திபாவளி அன்று   வெளிவர இருக்கும் ஆரம்பம் படம் பற்றிய செய்திகள் அல்ல .(இதுக்கு இவ்வளவு பில்ட் அப்பா !!) . நமது ராஜபாட்டை வலைத்தளம் 500 பின்தொடர்பவர்களை நெருங்குகிறது (நல்ல எழுதுற ஆளுங்களை யாரும் கண்டுகிறது இல்லை . உன்னை போல வென்னையதான் தொடர்கிறார்கள் என நீங்கள் சொல்வது எனக்கு கேட்கவில்லை ). அத்துடன் 6,00,000 ஹிட்ஸ் தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது .

இந்த சந்தோஷமான நேரத்தில் இன்னொரு சந்தோஷமான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் .ராஜபாட்டை மூலம் நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள் . பல ஊருகளில் ,முகம் தெரியாதவர்கள் கூட நண்பர்களாக கிடைத்ததில் மிக்க மகிஷ்சி . ஆனால் அடுத்த படியாக என்ன செய்யலாம் என்று ஒன்றும் தோன்றவில்லை . இந்நிலையில் நண்பர் அப்துல் பாசித் ஆங்கில வலைத்தளம் ஆரம்பியுங்கள் விளம்பரம் மூலம் கொஞ்சம் பணம் கிடைக்க  உண்டு என்றார் .


தமிழே நமக்கு தத்துகுத்து , இதுல இங்கிலீஷ் வேறயா என்று தோன்றியது . இங்கிலீஷ் மீடியத்தில் வேலைபார்ப்பதால் இங்கிலீஷ் "மீடியமாகதான் " வரும் . இருந்தாலும் எதோ ஒரு தைரியத்தில் (உங்களை நம்பி ) ஆரம்பித்துவிட்டேன் .(அப்பாடி தலைப்பு வந்துட்டு ).

எனவே நல்ல உள்ளங்கள் , நண்பன் நல்ல இருக்கணும் என நினைப்பவர்கள் (எப்பூடி !!!) கண்டிப்பாக (தயவு செய்து ) உங்கள் ஆதரவை தரவும் . இந்த தளத்தில் இனைததுபோல அதிலும் இணையவும் .

உங்கள் ஆதரவால் கொஞ்சம் நல்ல பதிவுகள் போட முயற்சிக்கிறேன் .(அப்பவும் முயர்ச்சிதானா ???). ஆட்சென்ஸ் கிடைத்ததும் வரும் விளம்பரங்களை கண்டிப்பாக நீங்கள் கிளிக் செய்வீர்கள் என எனக்கு தெரியும் . ஏனென்றால் பதிவுலகில் நல்லவர்களே அதிகம் .(யாருப்பா அது ஐஸ் ...ஐஸ் ..ன்னு கத்துறது .)




அந்த தளத்தின் லிங்க் :






தல ரசிகர்கள் மன்னிச்சு :



Tuesday, October 9, 2012

அஜித் , சிம்பு இணையும் தர்மத்தின் தலைவன் ரீ - மேக்




தமிழ் சினிமாவில் சில நடிகர்களை மட்டும் தான் பிற நடிகர்கள் தங்கள் படங்களில் அவர்களின் ரசிகர்கள் என சொல்லி கொண்டாடுவார்கள் . அவர்களில் முதன்மையானவர் ரஜினி . அடுத்த இடத்தை பிடிப்பவர் நமது தா அஜித் தான் . பல படங்களில் பல நடிகர்கள் அஜித் ரசிகராக நடித்துள்ளனர் , இதில் பலர் நிஜமாகவே அவர் ரசிகர்கள் கூட . இப்படிபட்ட நடிகர்களில் முக்கியமானவர் , முதன்மையானவர் சிம்பு . இவர் அஜித்தின் ரசிகர் என்பதை விட வெறியர் என சொல்லலாம் . நண்பன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை அஜித் ரசிகர்களுக்காக வேண்டாம் என உதறிதள்ளியவர் .








இவர் அஜித்துடன் இணைந்து ஒரு படம் நடிக்க போகிறார் என்பதுதான் இப்போதைய ஹாட் நியூஸ் . அஜித் தற்பொழுது விஷ்ணு வர்த்தனுடன் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார் . அது முடிந்த உடன் இந்த படத்தில் நடிக்கலாம் என தெரிகிறது .

ஏற்கனவே ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீ மேக் இல் அஜித் நடித்து அது பெறும் வெற்றி பெற்றதால் மீண்டும் ஒரு ரஜினி படத்தை ரீ மேக்  பண்ணலாம் என சிம்பு நினைப்பதாக தகவல் . இதனால் ரஜினி பிரபு இணைந்து நடித்து பெறும் வெற்றி பெற்ற தர்மத்தின் தலைவன் படத்தை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளதாக கேள்வி.







சிம்பு கூட தனது டுவிட்டரில் நாங்கள் இணைந்து நடிப்போம் என சொல்லியுள்ளார் . இப்படத்தை சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்க உள்ளார் என புதிய தலைமுறை செய்தி சேனல சொல்லியுள்ளது .
இன்னும் சில நாட்களில் முழு விவரம் வரும் என எதிர்பார்க்கிறோம் .





டிஸ்கி : பி . வாசு இயக்கத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க அஜித்துடன் பேச்சு வார்த்தை நடப்பதாக ஆனந்த விகடன் செய்தி வெளியிட்டு உள்ளது .


 இதையும் படிக்கலாமே :


இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?



Wednesday, August 15, 2012

TOP 10


கடந்த மாதத்தில் அதிகம் வாசிக்க பட்ட பதிவுகள் உங்கள் பார்வைக்கு ..
இவை அனைத்தும் மே 7 முதல் ஜூன் 5 வரை வாங்கிய ஹிட்ஸ் அடிப்படையில் தொகுக்கபட்டது .












 டிஸ்கி : அப்பாடி ஒரு பதிவு தேத்தியாசு ...

Thursday, August 9, 2012

அஜித் ரசிகர்கள் Vs விஜய் ரசிகர்கள்


இன்றைய சினிமா உலகில் அசைக்க முடியாத இரண்டு சக்திகள் விஜய் மற்றும் அஜித் . படம் கதையுடன் இருந்தாலும் மொக்கையாக இருந்தாலும் இவர்கள் படம் முதல் வாரத்தில் வசூலை அள்ளிவிடும் . இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் இவர்களின் ரசிகர்கள் நண்பர்களாக இருகின்றார்களா என்றால் சந்தேகம் தான் . ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதும் facebook  இல் நக்கல் செய்வதும் என பயங்கர சண்டையே நடக்கும் . சில சமயங்களில் கிண்டல் வரம்பு மீறி போவதும் உண்டு . அதுபோல கிண்டல் செய்து வெளியிட்ட சில படங்கள் உங்கள் பார்வைக்கு .

அஜித் ரசிகர்கள் வைத்துள்ள facebook page  இல் 








விஜய் ரசிகர்கள் வைத்துள்ள  facebook page இல்





டிஸ்கி 1 :  இதைவிட பல கொடுமையான கிண்டலான புகைப்படங்கல் உள்ளது , 
                   இருவரது ரசிகர்கள் மனது புண்படகூடாது என போடவில்லை .

டிஸ்கி 2 : எனக்கு இருவரையும்  பிடிக்கும்

Sunday, May 6, 2012

கடந்த மாதத்தில் அதிகம் வாசிக்கபட்ட 5 பதிவுகள்



கடந்தமாதம் மொத்தம் 14 பதிவுகள் எழுதினேன். இவற்றில் அதிக வாசகர்களால் வாசிக்கப்பட்ட முதல் 5  பதிவுகளின் சாரத்தை இங்கே தருகின்றேன் .

1. அஜித் : தல போல வருமா ?

              இன்று தமிழ் சினிமாவின் முக்கிய எதிர்பார்ப்பு எது என்றால் அது கண்டிப்பாக பில்லா 2 தான். அஜித்தின் முந்தய பில்லா , மங்காத்தா இரண்டின் பிரமாண்ட வெற்றிக்கு பின் திரைக்கு வர இருக்கின்றது. நாம் இப்போது பார்க்கபோவது படத்தை பற்றி அல்ல அஜித்தின் உண்மையான சில குணங்களை ..

 மேலும் படிக்க :  அஜித் : தல போல வருமா ?

2.  அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

         
தமிழ் திரையுலகில் சிவாஜி - எம் ஜி யார் , ரஜினி - கமல் , விஜய் - அஜித் என எப்பொழுதுமே ஒரு போட்டி உண்டு . மற்ற நடிகர்கள் என்னதான் அருமையாக நடித்தாலும் , பல வெற்றிகளை குடுத்தாலும் அவர்களை விட இவர்களுக்குத்தான் மவுசு அதிகம். இன்ற நிலையில் அப்படி மாஸ் ஹீரோ என்று சொள்ளபடுபவர்கள் அஜித் விஜய் .

இவர்களை பின்னுக்கு தள்ளி மிக பெரிய மாஸ் ஹீரோவாக வர ஒருவர் இருக்கின்றார். இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தால் மற்ற ஹீரோக்கள் கதி என்ன ஆகபோகின்றது என தெரியவில்லை. அந்த ஹீரோவின் பெயர்

மேலும்  படிக்க : அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

3.  கண்றாவி கவுண்டவுன் – சிரிப்புக்கு நான் கேரண்டி

        இது விஜய் டிவியில் வந்த லொள்ளு சபா நிகழ்ச்சியின் வீடியோ. அவர்கள் நிகழ்ச்சியில் அவர்கள் கலாய்த்த படங்களின் தொகுப்பை அவர்களை வரிசை படுத்தி கிண்டல் செய்துள்ளனர். இதை முழுவதும் பாருங்கள் கண்டிப்பாக சிரிப்பு வரும் அப்படி சிரிக்கவில்லை எனில் எதாவது நல்ல டாக்டரை (பவர் ஸ்டார் அல்லது தளபதி ) பார்க்கவும் .

மேலும் படிக்க :  கண்றாவி கவுண்டவுன் – சிரிப்புக்கு நான் கேரண்டி

4. ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம்

  ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம். தனது இளமை காலத்தில் பல இன்னல்களைச் சந்தித்தவர்; கணக்கிலடங்கா போராட்டங்களை கடந்து வெற்றியை நிலை நாட்டியவர். ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினி, நடிப்புத் துறையில் கால் பதித்து, அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, உடல் வருத்தி உழைத்து, இன்று 'சூப்பர் ஸ்டார்’ என்கிற பெருமையோடு இருக்கிறார்.

மேலும் படிக்க :  ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம்


5. உங்களுக்கு வயதாகிவிட்டதா ? ஒரு டெஸ்ட்.

    
கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். இறுதியில் மதிப்பென்னை கனக்கிட்டு கொள்ளுங்கள்.  நீங்கள் தெரிவு செய்யும் பதில் அ எனில் 10 மதிபெண்  ஆ எனில் 5 மதிபெண் இ எனில் 1 மதிபெண்

1 . ஆன்/ பெண் இனைந்து சாலையில் நடக்கும் போது உங்களுக்கு 
    தோனுவது.

   அ) கடுப்பு                            ஆ) சந்தோஷம்                           இ) ஏதுமில்லை
 


டிஸ்கி : இது April 7 முதல் May 6  வரை எழுதிய பதிவுகளில் Google stat கணக்குப்படி ..



Thursday, March 22, 2012

அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ




தமிழ் திரையுலகில் சிவாஜி - எம் ஜி யார் , ரஜினி - கமல் , விஜய் - அஜித் என எப்பொழுதுமே ஒரு போட்டி உண்டு . மற்ற நடிகர்கள் என்னதான் அருமையாக நடித்தாலும் , பல வெற்றிகளை குடுத்தாலும் அவர்களை விட இவர்களுக்குத்தான் மவுசு அதிகம். இன்ற நிலையில் அப்படி மாஸ் ஹீரோ என்று சொள்ளபடுபவர்கள் அஜித் விஜய் .

இவர்களை பின்னுக்கு தள்ளி மிக பெரிய மாஸ் ஹீரோவாக வர ஒருவர் இருக்கின்றார். இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தால் மற்ற ஹீரோக்கள் கதி என்ன ஆகபோகின்றது என தெரியவில்லை. அந்த ஹீரோவின் பெயர் R.S.ண்

அவரின் சில புகைப்படங்கள் உங்களுக்காக ...

அவரின் ரொமாண்டிக் லுக்

பயம்

சோகம் அல்லது செண்டிமெண்ட்

பக்தி

கோவம் 

வெட்கம்





டிஸ்கி : இவரின் அப்பா இந்தியாவிலேயே நேர்மைக்கும் , அன்புக்கும் , பாசத்துக்கும்  பெயர் பெற்ற ஒருவர் .


டிஸ்கி 2 : இவரின் அப்பா வைத்துள்ள பிளாக்கின் பெயரரின் முதல் எழுத்து என் , கடைசி எழுத்து ராஜபாட்டை நடுவில் எழுத்தே கிடையாது.

இதையும் படிக்கலாமே :

உலக பிரபலங்கள் பற்றிய சில சுவையான தகவல்கள்.

நீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா ?

 


Wednesday, March 7, 2012

துப்பாக்கி Vs பில்லா 2





விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜம்வால், சத்யன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்காக தற்போது ஆக்ஷன் காட்சிகளை மும்பையில் படமாக்கி வருகிறார்கள். இச்சண்டை காட்சிக்காக புதுவிதமாக நிறைய விஷயங்களை கையாண்டு வருகிறாராம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

கெளதம் மேனன், இயக்குனர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மூவரின் படங்கள் என்றாலே படத்தின் எடிட்டர் ஆண்டனியாக தான் இருக்கும். ஆனால் '7ம் அறிவு' படத்தின் எடிட்டிங்கின் போது ஏ.ஆர்.முருகதாஸுக்கும் ஆண்டனிக்கும் இடையே சிறு பிரச்னையாம்.

ஆகையால் 'துப்பாக்கி' படத்தின் எடிட்டராக பணியாற்ற ஸ்ரீகர் பிரசாத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் முருகதாஸ்.  மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து', 'ராவணன்' உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் ஸ்ரீகர் பிரசாத்.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக தேசிய விருதினை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் பில்லா 2 இசை!



அஜீத் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் பில்லா 2. சக்ரி டோல்ட்டி இயக்க, யுவன் இசையமைத்து வருகிறார்.

படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இன்னும் இப்படத்தின் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இந்நிலையில் பில்லா 2 படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான Sunir Kheterpal கூறியிருப்பது :

" இசை வெளியீடு மார்ச் மாத கடைசியில் இருக்கும். டிரெய்லர்கள் தயாராகி வருகின்றன. மார்ச் 15க்குப் பிறகு தியேட்டர்களில் டிரெய்லர்கள் வெளியிடப்படும்.

மார்ச் மாதம் முதல் படத்திற்கான விளம்பரப் பணிகளை துவக்க இருக்கிறோம்."

நன்றி : விகடன்

இதையும் படிக்கலாமே :


தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...




பிரபுதேவாவுக்கு அடுத்து யார் ? நயன்தாரா பதில்

Tuesday, February 21, 2012

விஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா ? - விஜய் பரபரப்பு பேட்டி

 சினிமா செய்திகள் தொகுப்பு :




2011-ம் ஆண்டுக்கான தேசிய விருது பெறும் கலைஞர்கள் மற்றும் படங்​களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிறந்த படங்​களைத் தேர்வு செய்யும் ஜூரி​களில் ஒருவராக, நம்ம ஊர் டைரக்டர் ஜனநாதன் இருக்கிறார். இதுவரை பார்த்த படங்களில், தமிழுக்குத்தான் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.

''படங்கள் தயாரித்து​க்கொண்டு இருப்பவர்கள், தொழி​லாளர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்​கத் தயாராக இருக்கிறார்​கள். ஆனால், படமே எடுக்காத தயாரிப்​​​​பாளர்கள்​தான் சங்கத்தில்இருந்து​​கொண்டு சண்டை போடுகிறார்கள்'' என்று கொந்தளிக்கிறார் அமீர். இவருக்​குப் போட்டியாக, ''கேமராவைத் தொடாத சிவா, புரொடக்ஷன் வேலை பார்த்தே பல வருடங்​கள் ஆன சந்திரன் போன்ற​வர்கள்தான் பெப்ஸியில் பஞ்சாயத்​துப் பேச வர்றாங்க...'' என்று கடுப்பாகிறது தயாரிப்பாளர்கள் தரப்பு.
'துப்பாக்கி’ படம் ட்ராப் என்று கிளம்பி இருக்கும் செய்தியால் விஜய் படுஅப்செட். ஆளாளுக்கு  செல்போனில் துளைத்து எடுக்கிறார்​களாம். 'முதல் ஷெட்யூல் முடிஞ்​சிடுச்சு. விரைவில், அடுத்த ஷெட்யூல் ஆரம்பம்...’ என்று, ஒவ்வொருவருக்​கும் எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகிறார்.


கோலிவுட்டில் பெப்ஸி தொழிலா​ளர்கள் சம்பள உயர்வு கேட்டுப் போராடு​வதால், தமிழகத்தில் எங்கேயும் ஷூட்டிங் நடக்கவில்லை. ஆனால், 'மாற்றான்’ படத்தின் பாடல் காட்சியை தெலுங்கு டான்ஸர்களைக்கொண்டு ஆந்திராவில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் கூலாகப் படமாக்கி வருகிறார்கள். அதுபோலவே, 'பில்லா 2’ படப்பிடிப்பும் மும்பையில் கனஜோராக நடக்கிறது.

'மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படத்தின் இசையமைப்பாளர் அச்சு. மலையாள​த்தில் 1,000 படங்களுக்கு மேல் இசை​யமைத்த ராஜாமணியின் புதல்வர். படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதி இருப்பவர், நடிகை ரோகிணி.

நன்றி : ஆனந்த விகடன் 

இதையும் படிக்கலாமே :

உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...

விஜய்யின் துப்பாக்கி படத்தின் கதை வெளியானதா ? முருகதாஸ் அதிர்ச்சி

 

Friday, November 25, 2011

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..







இன்று நமது டுபாகூர் டி.வியில் சமைத்து பார் பகுதியில் நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் இணைந்து  “அப்பளம் சுடுவது எப்படி?” என செய்துகாட்டபோகின்றார்கள்.

தேவையான பொருள்: அப்பளம் சுட என்ன தேவையோ அதை
                    எடுத்துகொள்ளவும்.

விஜய் : நேயர்களே ! நாம் இன்று எப்படி அப்பளம் சுடுவது என கத்தி சாரி கத்துதரபோகிறார் நம்ம தல.

அஜித் : வாணக்கம்.

விஜய் : வாணக்கம் இல்லை, வனக்கம்,

அஜித் : முதலில் இடுப்பை பத்த வைக்கனும்.

விஜய்  : அடபாவி அது அடுப்பு.

அஜித் : அடுப்பில் ஜட்டியை போடனும்..

விஜய்  :  ஆமாம் அடுப்புல ஜட்டிய போடு, இடுப்புல நெருப்பை வை..

அஜித் : ஜட்டி, அடுப்புமேல வைப்பாங்கல அது..

விஜய்  : அய்யா .. அது ஜட்டி இல்லை சட்டி.

அஜித் : சட்டில என்னய ஊத்து..

விஜய்  : உன்னை ஏன் அதுல ஊத்தனும்?

அஜித் : என்னை இல்லை என்னெய் அதாவது ஆயில்..

விஜய்  : சரி..சரி.. அப்புறம்..

அஜித் : கொஞ்ச நேரம் ஆனதும் ஆயில் குதி குதினு குதிக்கும்..

விஜய்  : சனியனே அது கொதி, கொதினு கொதிக்கும்..

அஜித் : யெஸ்.. யெஸ்.. அதுல ஆப்பாளத்தை போடு.. அது கொர்ருனு பொரியும்..

விஜய்  : அது.. ஆப்பாளம் இல்லை.. அப்பளம், சொல்லு பார்போம்.

அஜித் : ஆப்பாளம்..

விஜய்  : உன் வாய்ல கொள்ளிவைக்க.. ஆப்பாளாம் இல்லை அப்பளம் சொல்லு..

அஜித் : ஆப்பாளம்..

விஜய்  :  டேய் ! நல்லா அழுத்தி சொல்லு அப்பளம்.

அஜித் : அழுத்துனா ஆப்பாளம் நொறுங்கிடும்.

விஜய்  : என்ன எழவாது சொல்லி தொலை..

அஜித் : இந்த ஆப்பாளத்தை பாய்சன்ல தொட்டு சாப்பிடலாம்.

விஜய்  : நீ சொன்ன படி செய்தா பாய்சன்லதான் தொட்டு சாப்பிடனும். நாதாரி   
           அது பாய்சன் இல்ல பாயசம்.

விஜய்  : என்ன நேயர்களே ! நிகழ்ச்சி எப்படி இருந்தது, ஹலோ யாருப்பா 
         அங்க  கல்லை எடுக்குறது..