> என் ராஜபாட்டை : எது மதசார்பின்மை ?

.....

.

Monday, January 6, 2014

எது மதசார்பின்மை ?

தேர்தல் வரும் சமயம் அரசியல்வாதிகளால் அதிகமாக உபயோகிக்கப்படும் வார்த்தை “மதசார்பின்மை “. இவர்கள் முழுமனதுடன் தன இதை சொல்கிறார்களா ? இல்லை அரசியல் நாடகமா என மக்களுக்கே தெரியும் . உண்மையில் எது மதசார்பின்மை , இவர்கள் சொல்லும் வாதங்கள் சரியா என பார்க்கலாம் வாங்க .

எனது கேள்விகள் :
1.       தனது கட்சி அல்லது இயக்கத்து பெயரில் சாதி / மத பெயரை இணைத்து கொண்ட இயக்கம் / கட்சி எப்படி மதசார்ப்பற்ற கட்சியாகும் .

உதாரணம் : இந்து மக்கள் முன்னணி , முஸ்லிம் முனேற்ற கழகம்

2.       ஒரு மதத்தின் பண்டிக்கைக்கு வாழ்த்து சொல்லுவது தவறு என சொல்லிவிட்டு மற்ற மத பந்திக்கு சாரி பண்டிக்கைக்கு முந்துவது (வாழ்த்து சொல்ல ) எப்படி மத சார்பின்மை யாகும் ?

உதாரணம் : திபாவளி, கிருஷ்ண ஜெயந்திக்கு “விடுமுறை தின “ சிறப்பு நிகழ்சி என போடும் கலைஞ்சர் டிவி மற்ற மத பண்டிக்கைக்கு அந்த பண்டிகை பெயரில் சிறப்பு நிகழ்சி போடுவது .

3.       ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளங்களை கிண்டல் செய்து விட்டு அடுத்த மதத்து அடையாளங்களை ஓட்டுக்காக மாட்டிகொள்வது எப்படி மதசார்ப்பின்மையாகும் ?

உதாரணம் : ஒரு M.L.A குங்குமம் வைத்ததை கிண்டல் செய்துவிட்டு ரம்ஜான் கஞ்சி குடிக்க குல்லா போடுவது .


4.       ஒரு மதத்தின் நம்பிக்கையை அல்லது அவர்கள் கடவுள்களை கிண்டல் செய்துவிட்டு மற்ற மதத்தினரிடம் நற்பெயர் வாங்க எந்த கேள்வியும் கேட்காமல் வாய்மூடி இருப்பது எப்படி மதசார்ப்பின்மையாகும் ?

“ராமன் என்ன இஞ்சினியரா ?” என புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்து கேள்வி கேட்பது . மற்ற மதத்தில் இது போல பல கேட்கலாம் ஆனால் மற்றவர்கள் நம்பிக்கை கெடுக்க நான் அரசியல்வாதியில்லை )

5.       ஒரு மதத்திற்கு எதிரான கலவரத்தை / பிரச்சனையை மட்டும் ஊதி பூதாகரமாகி , மற்ற பிரச்சனைகளை மறக்கடிப்பது எப்படி மதசார்ப்பின்மையாகும் ?

குஜராத் கலவரத்தை பற்றி வாய்கிழிய பேசும் காங்கிரஸ் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை பற்றி வாய்திறப்பதில்லை .காங்கிரஸ் மட்டுமல்ல குஜராத் கலவரத்தை பற்றி பேசும் பலர் வசதியாக சீக்கியர்களை மறந்துவிடுகின்றனர் . கலவரம் , உயிர் , கஷ்டம் ,நஷ்டம் எது என்றாலும் அது அனைவருக்கும் போது தானே ? இரண்டு கலவரத்திலும் பாதிக்கபட்ட மக்களுக்குத்தானே குரல் கொடுக்க வேண்டும் . பிரதமராக ஒரு சீக்கியர் இருந்தும் கூட அதைப்பற்றி வாய்திறக்காமல் குஜராத்தை பற்றி பேசுகிறார் .


கடைசியாக ஒரு வார்த்தை ..
“என் மதம் பெரிது என சொல்வது பிரச்சனை இல்லை
என் மதம் மட்டும்தான் பெரியது என சொல்வதுதான் பிரச்சனை “

 ==============================================================
மாணவர்களுக்காக ஒரு தளம் சென்று பாருங்கள் 

8 comments:

 1. அரசியல் வாதிகள் போடும் வேசங்கள் இவை! உண்மையான மதசார்பற்ற கட்சிகள் கிடையாது! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 2. நோன்புக் கஞ்சி குடிக்கப் போன ஓட்டுப் பொருக்கி நாய், மாரியாத்தாவுக்கு கூழ் ஊத்தினா ஏன் குடிக்க வருவதில்லை?

  ReplyDelete
 3. மதங்களைச் சாராத கட்சிகள் எதுவும் இந்தியாவில் உண்டா? மதங்களுக்கு பணத்தைக் காக்க அரசியல் துணை, அரசியலுக்கு அதிகாரத்தை காக்க மதம் துணை, இரண்டும் ஒட்டிப் பிறந்த ரட்டைக் குழந்தைகள் தானே.

  --- விவரணம். ---

  ReplyDelete
 4. this is nice from you because you chose to share this. if you want to watch free movies online check out onchannel.net website

  ReplyDelete
 5. தற்போதைய சூழலில் மதசார்பற்ற கூட்டணி எனில் அதில் மதவாத கட்சி உள்ளது என அர்த்தம்.

  ReplyDelete
 6. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

  நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
  Happy Friendship Day 2014 Images

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...