பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் மாணவர்கள் அதிகம் சேர்வது இன்ஜினியரிங் தான் . நல்ல காலேஜ் கிடைக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதில் சீட் கிடைக்கவேண்டும் என்பது . சீட்டுக்கு பல லட்சம் செலவாகும் . நான்கு வருடங்கள் படித்து முடிக்க இன்னும் சில லட்சங்கள் ஆகும் . படித்த பின் உடனே வேலை கிடைக்குமா என்றால் சந்தேகம்தான் . வருடம் தொடும் பல்லாயிரகணக்கான மாணவர்கள் வேலையின்றி சும்மா இருக்கிறார்கள் .
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் , படித்த மாணவர்கள் உங்களுக்கு இலவசமாக மேற்படிப்பு படிக்க ஒரு எளிதான வழி உள்ளது . அதுமட்டுமல்ல படித்து முடித்ததும் அரசு வேலை உறுதி . சந்தோகம் இல்லை இது உண்மைதான் .
நேஷனல்டிபென்ஸ் அக்கடமி ராணுவத்துக்கு ஆள் எடுக்கிறது . பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் , படித்த மாணவர்கள் இதுக்கு விண்ணப்பிக்கலாம் .
நன்மைகள் :
- தகுதி தேர்வுக்கு சென்று வர இலவச ரயில் டிக்கெட் .
- முழுவதும் இலவசம் . ஒரு பைசா கூட நீங்கள் செலவு செய்ய வேண்டாம் .
- படிக்கும் பொழுது உணவு , உடை , உறைவிடம் இலவசம்
- படிக்கும் காலத்தில் உங்கள் ஊருக்கு சென்று வர இலவசரயில் டிக்கெட் .
- படித்து முடித்ததும் உங்கள் மதிப்பென்க்கு ஏற்ப அரசு வேலை .
- குறைந்த பட்ச சம்பளம் 40000.
- எளிதான தேர்வு முறை .
- TNPSC GROUP I தேர்வுக்கு சமமான வேலைவாய்ப்பு .
மற்ற தகவல்கள் :
இந்த தேர்வுக்குஆன் லைனில் மட்டுமே விண்ணபிக்கலாம் .
விண்ணப்பிக்க : www.upsconline.nic.in
இந்த தேர்வுக்கான நடைமுறைகள் , தகுதிகள் இன்னும் பல விவரங்கள் அறிந்து கொள்ள : CLICK HERE
Tweet |
பகிர்வுக்கு நன்ரி ராஜா. இதை நான் இன்னும் 3 வருசம் கழிச்சு பார்க்குறென். என் பையன் அப்பு ஆர்மில சேரனும்ன்னு சொல்லிட்டு இருக்கான்.
ReplyDeleteபடிக்கும் மாணவர்களுக்கு உதவும்! நல்ல தகவல்! நன்றி!
ReplyDeleteநீங்கள் கேட்ட தொடர் பதிவு நேற்று எழுதிட்டேன்! லேட்டாயிருச்சு! கோச்சுக்காம படிச்சுப்பாருங்க! நன்றி!
ReplyDeleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteஉங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துகள். நன்றி.