> என் ராஜபாட்டை : ஆயிஷா

.....

.

Monday, January 27, 2014

ஆயிஷா

ஒரு கவிதை படித்து அழுகை வரலாம் , அல்லது ஒரு கதை அல்லது பாடலை கேட்டு அழுகை வரலாம் . ஆனால் ஒரு புத்தகத்தின் முன்னுரையை படித்து அழுகை வருமா ? கண்டிப்பாக வரும் . திரைப்படங்களில் சென்டிமென்ட் காட்சிகள் வந்தால் சிரிப்பை அடக்கமுடியாமல் பார்ப்பேன் . என் தங்கை திருமணமாகி கிளம்பும்போது அனைவரும் அழுவ , நான் கவலைபடாமல் தூங்கிவிட்டேன் . அப்படி பட்ட என்னை உலுக்கிய , இரவு தூக்கத்தை கெடுத்த ஒரு நூலின் முன்னுரையை தான் உங்களுடன் பகிரபோகிறேன் .


இதை எழுதியவர் யார் என தெரியவில்லை . எதோ ஒரு கிருத்துவ பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியை , அவர் இப்போது பல அறிவியல் கதைகள் எழுதுகிறார் . அவர் இப்படி எழுத தூண்டிய, காரணமான அவரது வாழ்கையை புரட்டிபோட்ட ஒரு மாணவியின் கதையை முன்னுரையாக சொல்லியுள்ளார் .
இன்றைய மதிப்பெண் உலகில் மதிப்பெண் மட்டுமே மாணவர்களின் அறிவை மற்றவர்களுக்கு பறைசாற்றுகிறது . புத்தகத்தில் , நோட்ஸில் உள்ளதை கரைத்து குடித்து தேர்வில் வாந்தி எடுபவர்களைதான் இந்த சமுதாயம் பாராட்டுகிறது . சொந்தமாக எழுத முயர்ச்சிபவர்களை முளையிலேயே கிள்ளி எறிகின்றது .


6 வகுப்பில் தமிழில் “கஷ்டபட்டு முன்னேறினார் “ என்பதை சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுத சொன்னார்கள் . ஒரு மாணவன் “என் தந்தை சொந்த தொழில் செய்து கஷ்டபட்டு முன்னேறினார் “ என எழுதியதை என் சக ஆசிரியர் தவறு போட்டார் . ஏன் என கேட்டதுக்கு புத்தகத்தில் “ஜி.டி நாயுடு கஷ்டபட்டு முன்னேறினார்” என புத்தத்தில் இருக்கு இவன் எப்படி மாத்தி எழுதலாம் என்றார். ரொம்ப நேரம் வாதிட்டும் ஒத்துக்கொள்ளவில்லை.

இன்றைய கல்விமுறையும் , சமுக பார்வையும் இப்படிதான் உள்ளது .     இதை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன் .

கிழே அந்த ஆசிரியை எழுதிய முன்னுரையை இணைத்துள்ளேன் .சாதாரண ஆசிரியரை எப்படி அறிவியல் நூல்கள் எழுதும் எழுத்தாளராக ஒரு மாணவி மாற்றினார் , ஆனால் அந்த மாணவியின் நிலை இப்போது என்ன ? என்ற கேள்விகளுக்கு பதில் இந்த முன்னுரையில் உள்ளது . தரவிறக்கி படித்து பாருங்கள் . மொபைலில் படிப்பவர்கள் எப்படியாவது தரவிறக்கி பிடிக்க முயற்சி செயுங்கள் . கண்டிப்பாக உங்கள் கண்ணில் கண்ணீர் வரும் . இதை படித்த பின் கண்டிப்பாக ஆசிரியர்கள் மனதில் மாணவர்கள் பற்றிய எண்ணத்தில் மாற்றம் வரும் .


(அனைத்தும் ஒரே கோப்புதான் , UPLOAD SITE மட்டும் வேறு வேறு ...)
9 comments:

 1. பதிவிறக்கம் செய்கிறேன்... நன்றி...

  ReplyDelete
 2. ஒஅகிர்வுக்கு நன்றி சகோ!

  ReplyDelete
 3. அருமையான பதிவு நண்பரே.... கணக்க செய்தது பதிவு !

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றி! தரவிறக்கி படிக்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 5. இந்த நூலை எழுதியவர் பெயர் நடராசன் .
  ஆய்ஷா நடராசன் என்ற பெயரில் பல அறிவியல் நூல்களையும், பல கல்வி நூல்களையும் எழுதி உள்ளார் . நான் அறிந்த வரை இவரது பல நூல்களை பாரதி புத்தகாலயமும் வாசல் பதிப்பகமும் வெளியிட்டுள்ளனர். கண்டிப்பாக அழ்ந்து படிக்க வேண்டிய நபர்.

  ReplyDelete
 6. இந்த நூலை எழுதியவர் பெயர் நடராசன் .
  ஆய்ஷா நடராசன் என்ற பெயரில் பல அறிவியல் நூல்களையும், பல கல்வி நூல்களையும் எழுதி உள்ளார் . நான் அறிந்த வரை இவரது பல நூல்களை பாரதி புத்தகாலயமும் வாசல் பதிப்பகமும் வெளியிட்டுள்ளனர். கண்டிப்பாக அழ்ந்து படிக்க வேண்டிய நபர்.

  ReplyDelete
 7. பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா ஆயிஷா புத்தக குறிப்பு பற்றி
  விஜயன் அண்ணாவும் எழதி வருகிரார் http://vijayandurai.blogspot.com/2013/11/pk2.html

  நன்றி

  ReplyDelete
 8. yes today education are like that. they only focused in marks not any practical
  and outside knowledge of society..it must be change..thank you for sharing this information...
  iIT job consultants in coimbatore

  ReplyDelete
 9. தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  அன்பு வாழ்த்துகள்.

  மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.

  வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...