> என் ராஜபாட்டை : விஜயகாந்த் மேல் என்ன தப்பு ?

.....

.

Saturday, January 4, 2014

விஜயகாந்த் மேல் என்ன தப்பு ?






தே . மு .தி .க தலைவர் விஜயகாந்தை நக்கல் செய்யாத பத்திரிக்கைகளே இல்லை . பத்திரிகைகள் மட்டும் இன்றி கட்சிகள் பலவும் கிண்டல் செய்கிறது . இது சரியா ? தவறா ? என அலசலாம் வாங்க .


 கட்சிகள் :


முன்பு :

சென்ற தேர்தலில் தனியாக நின்றால் ஜெய்போமா இல்லையோ என்ற பீதியை விட விஜயகாந்த் தி.மு.க பக்கம் போனால் நாம் ஜெய்க்க வாய்ப்பு குறைவு என உணர்ந்ததால்தான் ஜெயா அவரை தன பக்கம் அழைத்துகொண்டார் .

அவர் அந்த பக்கம் இணைந்ததால் விஜயகாந்தை அவர் நடத்தையை கிண்டல் செய்யும் வேலையை தி மு க ஆரம்பித்தது . விஜயகாந்த் ஒரு குடிகாரர் என பரப்ப ஆரம்பித்தது . அவர் தனது கட்சி நபர்களை கூட அடிப்பார் என காட்டியது .


இப்போ :

விஜயகாந்தை கை கழுவிய ஜெயா , அவர் கட்சி ஆட்களை தம் பக்கம்இழுத்துதான் அவரைஜெய்க்க நினைக்கிறார் .

கருணாநிதி தே மு தி க எங்களுடன் இணைந்தால் மகிழ்வோம் என்கிறார் . (இப்போ குடி பத்தி பேசுவதில்லை ) 

பா.ஜ . க விஜயகாந்தை இழுக்க முழு முயற்ச்சி செய்கிறது .

காங்கிரஸ் தன் பங்குக்கு அவரை சந்திக்க வாசனை அனுப்புகிறது .

இப்படி எல்லா கட்சிகளும் அவரையே மையம் கொண்டு வருகிறது .

ஆனால் குறை சொல்வது அவரை . இதில் விஜயகாந்த் மேல் என்ன தப்பு ?

ஊடகங்கள் :



விஜயகாந்த்பற்றி எழுதாத ஊடகங்களே இல்லை . ஆனால் அவரிடம் நியாயமான கேள்விகள் கேட்காமல் அவரை எப்படியாவது கோவபடுத்தி  பார்க்க தான் ஆசைபடுகிறது . கருணாநிதியிடம் அல்லது ஜெயாவிடம் கேள்வி கேட்க பம்முகின்ற இவர்கள் விஜயகாந்திடம் மடக்கி மடக்கி கேட்பார்கள் .

ஆனால் குறை சொல்வது அவரை . இதில் விஜயகாந்த் மேல் என்ன தப்பு ?

டெல்லி தேர்தல் :

டெல்லி தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட்டதை பலர் கிண்டல் செய்கின்றார்கள் . திருவள்ளுவர் கூட முயல் வேட்டையில் ஜெய்பதை விட யானை வேட்டையில் தோற்ப்பது நல்லது / பெருமை என்கிறார் . டெல்லியில் போட்டியிட இங்கு உள்ள எந்த கட்சிக்கும் தைரியம்  இல்லை . அப்படி போட்டியிட்டால் இதே நிலைதான் மற்றவர்களுக்கும் .

ஆனால் குறை சொல்வது அவரை . இதில் விஜயகாந்த் மேல் என்ன தப்பு ?


விஜயகாந்த் மாற்றி கொள்ள வேண்டிய விஷயங்கள் :

  • கருணாநிதியை போல ஜெயாவை போல வார்த்தை விளையாட்டை கற்றுக்கொள்ளவேண்டும் .

  • பொது இடத்தில் நடிக்க தெரிய வேண்டும் . நல்லவன் போல நடிப்பவர்களுக்குதான் நல்ல பெயர் கிடைக்கும் .


  • கட்சி கரைவதை தடுக்க வேண்டும் .


  • குடும்ப கட்சி என்ற பெயரை சரி செய்யவேண்டும் .


  • பா. ஜ .க வுடன் இணைவதே இபோதைக்கு நல்லது .


  • மக்கள் பிரச்சனைக்கு அடிகடி குரல்கொடுக்க வேண்டும் .



இவையனைத்தும் என் மன எண்ணங்கள் . உங்கள் கருத்தை சொல்லுங்கள் .

7 comments:

  1. முதலில் "தெளிய" வேண்டும்... அனுபவம் தெளிய வைத்து விடும் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  2. Ivar sonna comediyai vida modi vidum varalaatru thirippukal sema comedy..!

    ReplyDelete
  3. தாங்கள் சொல்வது சரிதான்

    ReplyDelete
  4. தங்களுடைய கருத்துக்கள் எனக்கும் உடன்பாடுதான்.அவரை பற்றி எனது மனதில் ஓடிய கருத்துக்களை அழகாக வடித்து இருக்கிறீர்கள்.
    திண்டுக்கல் தனபால் அவர்களே தாங்கள் மூன்றாம் தரமான
    கேள்விகளை கேட்காதீர்கள்.
    அவர் எப்போது குடித்துவிட்டு வந்து ரோட்டில் தகராறு செய்தார்.அல்லது எப்போது குடித்துவிட்டு வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பை சந்தித்தார்.
    அல்லது தாங்களும் அவரும் ஒன்றாகக் குடித்து இருக்கிறீர்களா?
    இவ்வளவு ஆன்மீக கட்டுரை எழுதுவது தங்களுக்கும் சேர்த்தில்லையா?
    படிப்பவர்களுக்கு மட்டுமா?

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. சரியாக கூறி உள்ளீர்கள். அவர் இன்னும் சற்று நெருங்க வேண்டும் மக்களுடன். அவருக்கு பாகை கூட்டணி தான் ஒத்துக் வரும்.

    ReplyDelete
  7. BJP கூட்டணி தான் ஒத்து வரும் என்பது தான் நான் எழுத வந்தது.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...