புத்தாண்டின் முதல் நாள் உங்கள் மனமும் உங்கள் குடும்பத்தினர் மனமும்
சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் . சந்தோஷம் என்றால் என்ன அது எப்படி எப்போது வரும்
? சந்தோஷத்தை அனுபவிப்பது எப்படி ? அடுத்தவரை சந்தோஷபடுத்துவது எப்படி ?
ü முதலில் வீட்டில் உள்ள மனைவி , குழந்தைகளுடன் நேரத்தை
செலவிடுங்கள் . உங்கள் அலுவலக கோபதாபங்களை அவர்களிடம் காட்டாதீர்கள் . உங்கள் மனதை
மாற்றும் அற்புத மருந்து குடும்பம் .
ü குழந்தைகளுடன் விளையாடுங்கள் . அந்த சமயத்தில் உங்களை
புத்திசாலியாக நினைக்காமல் நீங்களும் ஒரு குழந்தையாக மாறுங்கள் . சந்தோசம்
பொங்கும் .
ü வாழ்க்கைக்கு தேவையான பொருள்களை மட்டும் வாங்குங்கள் .
அடுத்தவரை பார்த்து தேவையில்லாத பொருளை வாங்கி கடனாளியாகாதீர் .
ü கோவில் செலும் போது உண்டியலில் பணம் போடுவதுக்கு பதில்
அங்கு உள்ள ஏழைக்கு போடுங்கள் . அவர்கள் உங்களை தெய்வமாக பார்ப்பார்கள் .
ü பழைய , பள்ளி, கல்லூரி கால நண்பர்களுடன் அடிகடி தொடரில்
இருங்கள் . ஒரு போன் , மெசேஜ் அனுப்புவதால் உறவுகள் தொடரும் .
ü நண்பர்களின், உறவினர்களின் பிறந்த தேதியை குறித்துவைத்து
கொள்ளுங்கள் . அன்று முடிந்தால் போன் அல்லது மெசேஜ் செய்யுங்கள் . அன்று அவர்கள்
அடையும் ஆனந்தம் , மகிஷ்சிக்கு அளவே இருக்காது .
ü குறைந்தபட்சம் மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள் . அது
உங்களை புத்துணர்வு பெற செய்யும் . சுஜாதா “தினமும் பத்து பக்கமாவது படியுங்கள் “
என சொல்கிறார் .
ü சிரித்த முகத்துடன் இருங்கள் . முகத்தை பார்த்தே பலர்
அடுத்தவர்களை எடை போடுகிறார்கள் .
ü அடுத்தவர் குறைகளை மென்மையாக சுட்டிகாட்டுங்கள் . வீண்
விவாதம் சண்டையில் அல்லது பிரிவில்தான் முடியும் .
ü நல்ல நகைசுவையான நிகழ்சிகளை பாருங்கள் . கண்டிப்பா சீரியல் பார்க்காதீங்க
. நீங்கள் ரசித்த நகைசுவைகளை நண்பர்களுடன் , குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
.
2013
இல் நடந்த நல்லவைகளை விட அதிகமான
நல்லவைகள் ங்கள் குடும்பத்தில் நடக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
HAPPY NEW YEAR 2014
Tweet |
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள், கடைபிடிப்போம்.
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள்.