> என் ராஜபாட்டை : தெரியுமா ??

.....

.

Tuesday, February 4, 2014

தெரியுமா ??







நமக்கு பல விஷயங்கள் தெரியும் ஆனால் அதனுடன் சம்பந்தபட்ட சில விஷயங்கள் தெரியாமல் இருக்கும் . கிழே சில செய்திகள் கொடுத்துள்ளேன் அவை உங்களுக்கு தெரியுமா என பாருங்கள் . பொறுமையாக படியுங்கள் கண்டிப்பாக 100% உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .

பெண்களைவிட ஆண்களுக்கு மூளையின் எடை அதிகம் என்பது தெரியும் ஆனால் நம்மைவிட எலிக்கு மூளையின் எடை அதிகம் என்பது தெரியுமா ?


இந்திய ஜனாதிபதி மாளிகையை கட்டியவர் எட்வின் லூட்யன்ஸ் எனபது தெரியும் ஆனால் அவர் மாளிகை திறப்புவிழா அன்றுதான் இறந்தார் என்பது தெரியுமா ?


பல்லிகளில் 2500 வகைகள் உள்ளது என்பது தெரியும் ஆனால் சோமாலியாவில்  பல்லிகளே கிடையாது  எனபது தெரியுமா ?


பாரதியார் “பாரதி “ என்ற பட்டம் பெற்ற போது அவர் வயது 11 என தெரியும் ஆனால் அவர் முதல் பாடல் எழுதியது 6 வயதில் என்பது தெரியுமா ?


கடிகார திசையில் சுற்றும் ஒரே கிரகம் வீனஸ் என்பது தெரியும் ஆனால் அதுக்கு 27 சந்திரன்கள் உண்டு என்பது தெரியுமா ?


சந்திரன் ஒவ்வொரு ஆண்டும் பூமியை விட்டு 3.8 CM cm நகர்ந்து செல்கிறது என்பது தெரியும் ஆனால் சந்திரனின் அளவு 5 வருடங்களுக்கு ஒருமுறை 1.23 CMcm குறைகிறது என்பது தெரியுமா ?


தேனிக்களுக்கு 4 கண்கள் உண்டு என்பது தெரியும் ஆனால் அதுக்கு காது கிடையாது என்பது தெரியுமா ?


ஸ்டெதஸ்கோப் கண்டுபிடித்தவர் டாக்டர் ரெணிலக் என்பது தெரியும் ஆனால் அவர் ஊமை என்பது தெரியுமா ?


சாக்கடல் , காஸ்பியன் கடல் எல்லாம் கடல் அல்ல ஏரிகள் என்பது தெரியும் ஆனால் அந்த ஏரிகளின் தண்ணீர் பச்சையாக இருக்கும் என்பது தெரியுமா ?


ஆத்திசுடியை எழுதியது அவ்வையார் என தெரியும் ஆனால் அதில் மொத்தம் 113 வரிகள் உள்ளன என்பது தெரியுமா ?





மேலே உள்ளவற்றில் கருப்பு எழுத்தில் உள்ளவை
 அனைத்தும் உண்மை என தெரியும் ஆனால்  
சிகப்பு நேரத்தில் உள்ள அனைத்தும் என் கற்பனை என்பது தெரியுமா ?


4 comments:

  1. இப்படி பெரிய பல்ப் கொடுத்த உங்களை மட்டும் எனக்கு நல்லாவே தெரியுது....
    ஆனாலும் உங்க கற்பனை வளத்திற்குப் பாராட்டுகள்

    ReplyDelete
  2. thank you for sharing this information..i know some information from this site
    Lechuza planters

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...