இது குறும்படமாக
வந்து பெரும் வரவேற்பையும் , பாராட்டையும் பெற்ற ஒரு காமெடி படம் , அதை முழுநீள
படமாக எடுத்துள்ளனர் . குறும்படத்தில் இருந்த வேகம் , காமெடி இதில் இருந்ததா,
இயக்குனர் ராம்குமார் வெற்றி பெற்றாரா என
பார்ப்போம் .
கதை 1982 வருடம் நடைபெறுகிறது , போட்டோ
எடுத்தாலே இறந்துவிடுவோம் என்ற மிகப்பெரிய நம்பிக்கையில் வாழும் மக்களை கொண்டது
“முண்டாசுபட்டி “. இறந்தவர்களை மட்டுமே போட்டோ எடுப்பது இவர்கள் வழக்கம் . அப்படி
போட்டோ எடுக்க வரும் ஹீரோ விஷ்ணு அங்கு உள்ள நந்திதாவை காதலிக்க இவர்கள் காதல்
என்ன ஆனது என்பதை சைட்டிஷ் வைத்துகொண்டு காமெடியை மெயின்ஆக வைத்து கொண்டு
விளையாடியுள்ளனர் .
விஷ்ணு காமெடியில்
நன்றாக நடிக்க முயர்சிசெய்துளார் . நந்திதா அந்த கணங்கள் மட்டுமே பல பாஷை பேசுது .
இவரின் நடிப்பில் பெரிய அளவில் சொல்ல ஒன்றும் இல்லை . படத்தில் இரண்டு துணை
நடிகர்கள் தான் பெரிய அளவில் பெயர் வாங்குகிறார்கள் , பெயர் மட்டுமல்ல
கைதட்டலுக்கும் இவர்கள்தான் காரணம் . ஒன்று காளி இவர் விஷ்ணுவின் நண்பராக படம்
முழுவதும் வருகிறார் . இவர் அடிக்கும் பல சந்தானம் ஸ்டைல் டயலாக்க்கு செம
ரெஸ்பான்ஸ் தியட்டரில்.
மற்றவர் முனிஸ் கான் என வரும் ராமதாஸ் . இவர்
வந்த பின்தான் படம் வேகம் பிடிகிறது . பல காட்சிகள் காமெடி சரவேடி . போட்டோவை
பார்த்து புலம்புவது நச் . ஆனந்த ராஜ் வருகிறார் , போகிறார் .
+ பாயிண்ட்ஸ் :
·
காமெடி காட்சிகள்
·
நகைசுவை வசனங்கள்
·
கலை இயக்குனரின்
உழைப்பு
·
குடும்பத்துடம்
பார்ப்பது போல அமைக்கபட்ட திரைகதை
·
ஓவர் சென்டிமென்ட்
போட்டு புழியாதது
·
காளி , ராமதாசின்
நடிப்பு
·
நந்திதா கண் (!!!)
பாயிண்ட்ஸ் :
·
பின்னணி இசையில்
இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்
·
படத்தின் நீளம் .
·
முதல் பாதியில்
ஆரம்பம் .
கடைசியாக :
ரொம்ப
எதிர்பார்க்காம போனா கண்டிப்பா சிரித்துவிட்டு வரலாம் . குடும்பத்துடன் பார்க்கலாம்
.
Tweet |
நன்றி நண்பரே
ReplyDeleteஅவசியம் பார்க்கிறேன்
// நந்திதா கண் //
ReplyDeleteஹலோ உண்மைய சொல்லுய்யா.. நீர் என்னைக்கு நடிகையோட கண்ண பார்த்து படம் பார்த்துருக்கீர்? ;-)
பகிர்வுக்கு நன்றி நண்பரே!
ReplyDelete