தமிழகத்தில் "நடக்கும்" போராட்டங்களில் அதிக அளவில் கலந்துகொண்டவர் வை .கோ அவர்கள் . கட்சி சார்பற்று , மக்களுக்காக களத்தில் இறங்கி போராட தயங்காதவர் இவர் . ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை முதல் முல்லை பெரியார் பிரச்சனை வரை மக்களுக்காக தெருவில் இரங்கி போராடியவர் . ஆனாலும் இவரை மக்கள் தேர்தலில் ஜெய்க்க வைபதில்லை என்பது கொடுமையான விஷயம் .
இவரின் போராட்டத்தின் போது பல வழக்குகளை சந்தித்துள்ளார் .24/09/2007 அன்று தஞ்சையில் வை கோ பேசிய இல்லை இல்லை ஆற்றிய உரையின் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டுள்ளனர் . அந்த புத்தகத்தின் மின் பதிப்பை (E-BOOK) உங்களுக்காக வழங்குகிறேன் .
தரவிறக்கம் செய்ய : வரலாறு சந்தித்த வழக்குகள்
============================================================================
வாலியின் “நினைவு நாடாக்கள் “
வாலிப கவிஞர் என அன்புடன் அழைக்கபட்ட மறைந்த பாடலாசிரியர் வாலி அவர்கள் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வந்தது “நினைவு நாட்கள் “ என்னும் தொடர் . தனது வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் , தான் கடந்து வந்த பாதையில் இருந்த நல்ல , கெட்ட சம்பங்கள் , தான் சந்தித்த பலதரபட்ட மனிதர்கள் , அவர்களின் குணநலன்கள் பற்றி விரிவாக , மிக அருமையான எழுத்து நடையில் எழுதியிருப்பார் வாலி அவர்கள் .
264 பக்கங்கள் உள்ள இந்த நூல் படிக்க படிக்க இன்னும் ஆவலை தூண்டும் நூல் ஆகும் . நமக்கு தெரிந்த மனிதர்களின் வித்தியாசமான முகங்களை பற்றி வாலி விவரித்து இருப்பார் .
தரவிறக்கம் செய்ய : “நினைவு நாடாக்கள் “
இதையும் படிக்கலாமே :
முண்டாசுபட்டி : திரைவிமர்சனம்
அலட்சியம்
Tweet |
பகிர்வுக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteசொல்கிறேன் என வருத்தப்படாதீர்கள், இப்படி நூல்களை இணையத்தில் பகிராதீர்கள் நண்பர்களே! அவை நூல் விற்பனையைப் பாதிப்பதோடு மட்டுமின்றிப் பதிப்பகங்கள், எழுத்தாளர்கள், அவர்களின் காப்புரிமைகள், அச்சகங்கள் இவர்களை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அவர்களின் குடும்பத்தினர், தமிழ் மொழி என அனைத்தையுமே பாதிக்கின்றன. எழுத்துத்துறையைப் பாதிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தால், நாளைக்கு நாம் படிப்பதற்குப் புதிதாக என்ன கிடைக்கும்? எங்கே போவோம்? நினைத்துப் பாருங்கள் ஒரு நிமிடம்! உலகில் அனைத்துக்குமே ஒரு விலை இருக்கிறது. அதைக் கொடுக்காமல் அதை நுகர நினைப்பது திருட்டுத்தனம் இல்லையா? படிக்கும் விருப்பம் உள்ளவர்கள் காசு கொடுத்து வாங்கிப் படிக்கட்டும்! முடியவில்லையா, ஊருக்கு ஊர் அரசு நூலகங்கள் இருக்கின்றன, அங்கே இலவசமாக வாங்கிப் படிக்கட்டும். பகிர்வதற்கு இணையத்தில் எத்தனையோ சுவையான, பயனுள்ள வலைப்பதிவுகள் இருக்கின்றன. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றன. அவற்றைப் பகிரலாமே! சிந்தித்துப் பாருங்கள்!
ReplyDeleteநீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை . நான் வாங்கியே படிக்கிறேன்
ReplyDelete