> என் ராஜபாட்டை : க

.....

.
Showing posts with label . Show all posts
Showing posts with label . Show all posts

Saturday, May 12, 2012

விஜய்யை எதிர்க்கும் பா.ம .க




இளைய தளபதி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி. A.R.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் இது. நண்பன் வெற்றியை தொடர்ந்து இந்த படம் வருவதால் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது . இந்நிலையில் சமிபத்தில் இந்த படத்தின் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது . இதில் விஜய் புகைபிடிப்பது போல இருந்தது . இதை பார்த்ததும் பா .ம .க வின் ரத்தம் கொதித்து இந்த புகைப்படம் வெளியிடக்கூடாது , படத்தில் அந்த காட்சி இருக்க கூடாது என கண்டன அறிக்கைகள் வெளியிட்டது .

என்னை போல சாதாரண ரசிகனுக்கு , சாதாரண குடிமகனுக்கு தோன்றும் சில சந்தேகங்கள்.

  1. மங்காத்தா படத்தில் பல காட்சியில் அஜித் குடிப்பது போலவும் , புகைபிடிப்பது போலவும் உள்ளது . அந்த படம் வந்த சமயத்தில் பா .ம. க என்னசெய்த்து கொண்டிருந்தது.?

  1. அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என சொல்லி விட்டதால் அவரை எதிர்ப்பது தேவையில்லாதது . அவரால் பா .ம .க ஓட்டு பிரிய வாய்ப்பில்லை என எதிர்க்க வில்லையா ?


  1. விஜய் ரசிகர்களில் பலர் இளைஜ்ர்கள் . இவர்கள் விஜயின் கட்சிக்கு சென்று விட்டால் ஏற்கனவே ஓடிங்கி போய் இருக்கும் கட்சியின் தொண்டர் எண்ணிக்கை இன்னும் குறையும் என்ற பயமா ?

  1. விஜய் படங்கள் தவிர சமிபத்தில் வந்த எந்த படத்திலும் யாரும் புகைபிடிக்கவில்லையா ?


  1. புகைபிடிக்கும் , குடிக்கும் யாரும் பா .ம .க வில் உறுப்பினராக இருக்க கூடாது என சொல்ல தைரியம் உண்டா ? ( அப்படி சொல்லிட்டா தொண்டர்களே இல்லாதே கட்சியா மாறிடும் )

  1. பல தொலைகாட்சி தொடர்களிலே புகை , மது பயன்படுத்தும் காட்சிகள் வருது அதை எதிர்பதில்லையே ஏன் ?

ஏற்கனவே விஜயகாந்தை சீண்டி விட்டு அவரை எதிர்கட்சி தலைவராக மாற்றி விட்டிர்கள் , இப்ப விஜய், இவரை என்னவாக மாற்ற போகின்றிகள் ?

இதையும் படிக்கலாமே :

விஜய் அஜித் இணைந்து நடிக்க கதைதயார் : அம்புலி 3D பட இயக்குனர்ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டிபகுதி - 2

 

கண்றாவி கவுண்டவுன் – சிரிப்புக்கு நான் கேரண்டி

 

"A" - Jokes