இளைய தளபதி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய்யின் அடுத்த படம் “ துப்பாக்கி”. A.R.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் இது. நண்பன் வெற்றியை தொடர்ந்து இந்த படம் வருவதால் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது . இந்நிலையில் சமிபத்தில் இந்த படத்தின் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது . இதில் விஜய் புகைபிடிப்பது போல இருந்தது . இதை பார்த்ததும் பா .ம .க வின் ரத்தம் கொதித்து இந்த புகைப்படம் வெளியிடக்கூடாது , படத்தில் அந்த காட்சி இருக்க கூடாது என கண்டன அறிக்கைகள் வெளியிட்டது .
என்னை போல சாதாரண ரசிகனுக்கு , சாதாரண குடிமகனுக்கு தோன்றும் சில சந்தேகங்கள்.
- மங்காத்தா படத்தில் பல காட்சியில் அஜித் குடிப்பது போலவும் , புகைபிடிப்பது போலவும் உள்ளது . அந்த படம் வந்த சமயத்தில் பா .ம. க என்னசெய்த்து கொண்டிருந்தது.?
- அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என சொல்லி விட்டதால் அவரை எதிர்ப்பது தேவையில்லாதது . அவரால் பா .ம .க ஓட்டு பிரிய வாய்ப்பில்லை என எதிர்க்க வில்லையா ?
- விஜய் ரசிகர்களில் பலர் இளைஜ்ர்கள் . இவர்கள் விஜயின் கட்சிக்கு சென்று விட்டால் ஏற்கனவே ஓடிங்கி போய் இருக்கும் கட்சியின் தொண்டர் எண்ணிக்கை இன்னும் குறையும் என்ற பயமா ?
- விஜய் படங்கள் தவிர சமிபத்தில் வந்த எந்த படத்திலும் யாரும் புகைபிடிக்கவில்லையா ?
- புகைபிடிக்கும் , குடிக்கும் யாரும் பா .ம .க வில் உறுப்பினராக இருக்க கூடாது என சொல்ல தைரியம் உண்டா ? ( அப்படி சொல்லிட்டா தொண்டர்களே இல்லாதே கட்சியா மாறிடும் )
- பல தொலைகாட்சி தொடர்களிலே புகை , மது பயன்படுத்தும் காட்சிகள் வருது அதை எதிர்பதில்லையே ஏன் ?
ஏற்கனவே விஜயகாந்தை சீண்டி விட்டு அவரை எதிர்கட்சி தலைவராக மாற்றி விட்டிர்கள் , இப்ப விஜய், இவரை என்னவாக மாற்ற போகின்றிகள் ?
இதையும் படிக்கலாமே :



