> என் ராஜபாட்டை : BLOG

.....

.
Showing posts with label BLOG. Show all posts
Showing posts with label BLOG. Show all posts

Friday, September 2, 2011

“ நி ஒரு பிரபல பதிவர்னு நினைத்து உன் பதிவை காப்பியடிச்சான் பாரு அவனை….”



கடந்த 30-8-2011 அன்று “மங்காத்தா – சுட சுட ஒரு விமர்சனம்” என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தேன்.  முன்பு அவன்-இவன் படத்திற்க்கு நான் எழுதிய விமர்சனத்திற்க்கு கிடைத்த வரவேற்ப்பை(5 முட்டை, 10 தக்காளி) பார்த்து அதுபோலவே இதையும் எழுதினேன்.

என்னை வருங்கால கேபிள் சங்கராகவும், தானை தலைவன் சி.பியாகவும் நினைத்து கொண்டு படம் வெளியாகும் முன்பே விமர்சனம் எழுதினேன். நான் போட்ட கோடிகனக்கான sorry லட்சகனக்கான sorry நூற்றுகனக்கான பதிவுகளில் அதிக ஹிட்ஸ் பெற்றது இதுதான்.

எனது பதிவை பார்க்க பல லட்சகனக்கான( லட்சத்துக்கு 2 சைபர்தானே?) வாசகர்கள் வருவதை பார்த்து, என் வலைதளம் வேகமாக முண்னேறுவதை( யோவ்.. யார்யா அது துப்புரது…)பார்த்து பொறாமைகொண்ட ஒரு இனையதளம் எனது பதிவை திருடிவிட்டது.

ஆம். “மங்காத்தா – சுட சுட ஒரு விமர்சனம்” என்ற ஒரு டுபாகூர் விமர்சனத்தை உன்மை என்று நம்பி அதை சுட்டு தலைப்பை மட்டும் “பட்டையை கிளப்பும் மங்காத்தா-” என மாற்றி அவர்கள் தளத்தில் போட்டுள்ளனர்.

சந்தோஷம் :

  1. என்னையும் ஒரு பதிவர்னு மதிச்சு, அதையும் ஒரு பதிவுனு சுட்டுருக்காங்களே..
  2. அது ஒரு டுபாகூர் விமர்சனம் என கண்டுபிடிக்காமல் இருந்தார்களே..


வருத்தம் :

  1. பதிவின் முடிவில் நன்றி : என் ராஜபாட்டைனு போட்டிருக்களாம்..
  2. விறுவிறுப்பு.காம் இனையதளத்தில் இருந்து “உங்கள் பதிவை எங்கள் தளத்தில் இனைத்துகொள்ளலாமா?” என கேட்டனர் . அது போல ஒருவார்தை கேட்டிருகலாம்.

கொடுமை :

1.       ஒரிஜினல் பதிவு எனக்கு 25 கமெண்ட்தான் விழுந்தது, அவர்களுக்கு 40 க்கு மேல்..

2.     Facebook Sharing 30 மேல்…

நன்றி :

 இந்த தகவலை எனக்கு தெரிவித்த நண்பர்  மதீஸ் அவர்களுக்கு.


டிஸ்கி : “ நி ஒரு பிரபல பதிவன்னு நினைத்து உன் பதிவை காப்பியடிச்சான் பாரு அவனை….” என திட்ட நினைப்பவர்கள் அவர்கள் தளம் சென்று திட்டலாம். நான் பாவம் குழந்தை, So என்னை எதும் சொல்லாதிங்க.

டிஸ்கி : இப்போ அந்த பதிவில் கடைசி பாதிமட்டும் என் பதிவு உள்ளது 

Wednesday, July 20, 2011

பிளாக்கர் வலைப்பூவை எளிதாக பேக்கப் செய்வது மீட்பது எப்படி?

இணைய உலகில் நமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளமாக இருப்பது கூகிளின் பிளாக்கர் தளமாகும் (Blogger). இங்கே தான் எல்லோரும் அவர்களின் கருத்துகளை எழுதி வலைப்பூவில் வெளியிடுகின்றனர். இது ஒரு இலவச சேவையாகும். கணிணியின் தகவல்களைப் பாதுகாப்புக்கு பேக்கப் செய்வது போல பிளாக்கர் வலைப்பூவையும் பேக்கப் செய்து கொண்டால் எதாவது பிரச்சினையின் போதும் தவறுதலாக அழிந்து விடும் போதும் மீட்டுக் கொள்ள முடியும்.
நமது வலைப்பூவை அவ்வப்போது காப்புநகல் எடுத்து வைத்துக் கொள்வது ஆபத்தின் போது நன்மை பயக்கும். இதற்கு பிளாக்கர் தளத்தில் நுழைந்து Blogger Settings -> Basic என்ற மெனுவிற்குச் செல்லவும். அதில் Export Blog என்பதைக் கொடுத்தால் உங்கள் வலைப்பூவின் நிரல்வரிகள் கணிணியில் சேமிக்கப்படும்.

பேக்கப் செய்யப்பட்ட கோப்பிலிருந்து வலைப்பூவை எப்படி மீட்பது?
Blogger Settings-> Basic என்ற மெனுவில் சென்று Import Blog என்பதைக் கிளிக் செய்து நீங்கள் ஏற்கனவே சேமித்துள்ள கோப்பைத் தேர்வு செய்து Import என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இந்த நேரத்தில் “Automatically publish all imported posts” என்பது டிக் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் அனைத்து பதிவுகளும் மீட்கப்படும்.

இந்த எளிய வசதியினைப் பயன்படுத்தி பிளாக்கர் வலைப்பூவை சேமிக்க முடியும். மீட்டுக் கொள்ள முடியும். மேலும் ஒவ்வொரு பதிவின் வகைகளும் கருத்துரைகளும் சேர்ந்தே மீட்கப்படும் என்பதால் இது பிளாக்கர் பயன்படுத்துவோருக்கு சிறப்பான வசதியாகும்.

Thanks: Vanakkamnet

Wednesday, March 2, 2011

ஒரு பதிவர் வட்டம்

ஆளாளுக்கு  ஒரு பதிவர் வட்டம் ஆரம்பித்து கடுப்பு ஏதுராக...
So,  நானும் என் பங்குக்கு சில வட்டம் அரம்பிகேன்றேன் .


1 .  பூம்புகார்(எங்கள் ஊரு )பதிவர் சங்கம் 
2 . அடுத்தவர் பதிவை திட்டி பதிவு போடுவோர் சங்கம் (தலைவர் தொப்பி , தொப்பி )
3. அடுத்தவர் பதிவை COPY பண்ணி பதிவு போடுவோர் சங்கம்
4.  18 +  என கூறி A Joke  எழுதுவோர் சங்கம்
5. இப்படி உருபடாத பதிவை மட்டும் எழுதுவோர் சங்கம் (தலைவர் : நான்தான்)