> என் ராஜபாட்டை : “ நி ஒரு பிரபல பதிவர்னு நினைத்து உன் பதிவை காப்பியடிச்சான் பாரு அவனை….”

.....

.

Friday, September 2, 2011

“ நி ஒரு பிரபல பதிவர்னு நினைத்து உன் பதிவை காப்பியடிச்சான் பாரு அவனை….”கடந்த 30-8-2011 அன்று “மங்காத்தா சுட சுட ஒரு விமர்சனம்” என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தேன்.  முன்பு அவன்-இவன் படத்திற்க்கு நான் எழுதிய விமர்சனத்திற்க்கு கிடைத்த வரவேற்ப்பை(5 முட்டை, 10 தக்காளி) பார்த்து அதுபோலவே இதையும் எழுதினேன்.

என்னை வருங்கால கேபிள் சங்கராகவும், தானை தலைவன் சி.பியாகவும் நினைத்து கொண்டு படம் வெளியாகும் முன்பே விமர்சனம் எழுதினேன். நான் போட்ட கோடிகனக்கான sorry லட்சகனக்கான sorry நூற்றுகனக்கான பதிவுகளில் அதிக ஹிட்ஸ் பெற்றது இதுதான்.

எனது பதிவை பார்க்க பல லட்சகனக்கான( லட்சத்துக்கு 2 சைபர்தானே?) வாசகர்கள் வருவதை பார்த்து, என் வலைதளம் வேகமாக முண்னேறுவதை( யோவ்.. யார்யா அது துப்புரது)பார்த்து பொறாமைகொண்ட ஒரு இனையதளம் எனது பதிவை திருடிவிட்டது.

ஆம். மங்காத்தா – சுட சுட ஒரு விமர்சனம்” என்ற ஒரு டுபாகூர் விமர்சனத்தை உன்மை என்று நம்பி அதை சுட்டு தலைப்பை மட்டும் பட்டையை கிளப்பும் மங்காத்தா-” என மாற்றி அவர்கள் தளத்தில் போட்டுள்ளனர்.

சந்தோஷம் :

 1. என்னையும் ஒரு பதிவர்னு மதிச்சு, அதையும் ஒரு பதிவுனு சுட்டுருக்காங்களே..
 2. அது ஒரு டுபாகூர் விமர்சனம் என கண்டுபிடிக்காமல் இருந்தார்களே..


வருத்தம் :

 1. பதிவின் முடிவில் நன்றி : என் ராஜபாட்டைனு போட்டிருக்களாம்..
 2. விறுவிறுப்பு.காம் இனையதளத்தில் இருந்து “உங்கள் பதிவை எங்கள் தளத்தில் இனைத்துகொள்ளலாமா?” என கேட்டனர் . அது போல ஒருவார்தை கேட்டிருகலாம்.

கொடுமை :

1.       ஒரிஜினல் பதிவு எனக்கு 25 கமெண்ட்தான் விழுந்தது, அவர்களுக்கு 40 க்கு மேல்..

2.     Facebook Sharing 30 மேல்

நன்றி :

 இந்த தகவலை எனக்கு தெரிவித்த நண்பர்  மதீஸ் அவர்களுக்கு.


டிஸ்கி : “ நி ஒரு பிரபல பதிவன்னு நினைத்து உன் பதிவை காப்பியடிச்சான் பாரு அவனை.” என திட்ட நினைப்பவர்கள் அவர்கள் தளம் சென்று திட்டலாம். நான் பாவம் குழந்தை, So என்னை எதும் சொல்லாதிங்க.

டிஸ்கி : இப்போ அந்த பதிவில் கடைசி பாதிமட்டும் என் பதிவு உள்ளது 

32 comments:

 1. மாப்ள என்ன கொடுமையா இது.....ஹிஹி!

  ReplyDelete
 2. மறுபடியும் டெம்பிளேட் மாத்தியிருக்கிறீங்க,
  சூப்பர் பாஸ்

  ReplyDelete
 3. //ஒரிஜினல் பதிவு எனக்கு 25 கமெண்ட்தான் விழுந்தது, அவர்களுக்கு 40 க்கு மேல்.//

  இதை என்னாலயே ஜீரணிக்க முடியல. பாதிக்கப்பட்ட உங்களுக்கு பாவம் எப்படி இருக்கும்.....

  ReplyDelete
 4. ஆஹா!இந்த வேலையெல்லாம் நடக்குதா?உங்க வளர்ச்சியை தடுக்கும் பொருட்டு எதிர் கட்சி செய்யும் சதி இது!இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!

  ReplyDelete
 5. இப்பவாவது தெரிஞ்சுக்கங்க...ஒரிஜினலுக்கு என்னைக்குமே மவுசு இல்லை. டுப்ளிக்கேட் தான் பட்டயக் கிளப்பும்னு...

  ReplyDelete
 6. ஹா....ஹா..
  இப்படியும் இருக்காங்களே?

  அவ்............

  ReplyDelete
 7. விடுங்க அண்ணா உங்கள் பதிவு ஹிட்டாச்சு என்று எடுத்துக்கொள்ளுங்கள்!

  ReplyDelete
 8. முதலில் உங்க விமர்சனம் படிக்க தொடங்கும்போதே எனக்கு உங்க அவன்-இவன் ஞாபகம் வந்து உண்மை புரிஞ்சுபோச்சு!!!! :-)
  முழுசா வாசிக்கக்கூட சோம்பல் பட்டு பேஸ்ட் பண்றாய்ங்களா?

  ReplyDelete
 9. இப்படியுமா???????
  ஐயோ ஐயோ

  ReplyDelete
 10. ஹிஹி! பரீட்சையிலே என்னைப் பார்த்துக் காப்பியடிச்சவன் பாஸ் ஆகி, நான் கோட்டை விட்டது ஞாபகத்துக்கு வருது! :-)

  ReplyDelete
 11. எதன நாளைக்கு அவங்களும் நல்லவநாயே நடிக்கிறது

  ReplyDelete
 12. எங்கயோ போயிடீங்க ராஜா வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. காபி பண்ணாமல் இருப்பதற்கு சிபி போல செட்டிங்க்ஸ்யை மாத்திடுங்க நண்பா.

  ReplyDelete
 14. பிரபல பதிவரானாலே பிரச்சினைதான்!!

  ReplyDelete
 15. ஹைய்யோ ....அய்யோ !

  ReplyDelete
 16. அட கொடுமையே

  காபி செய்யாம இருக்கிற கோட் செட் பண்ணுங்க

  ReplyDelete
 17. ஓ,ஓ,ஓ, இப்படில்லாம் கூட நடக்குதா??

  ReplyDelete
 18. //ஹிஹி! பரீட்சையிலே என்னைப் பார்த்துக் காப்பியடிச்சவன் பாஸ் ஆகி, நான் கோட்டை விட்டது ஞாபகத்துக்கு வருது! // எனக்கும்..

  பஜார் வித்தா நிஜார் பத்து ரூபாவ.. அதுவே பவிசான கடையில வித்தா நூறு ரூவா.. இப்படித்தான் இருக்கு நம்ம பதிவுலகம்..!!

  ReplyDelete
 19. நீங்க கொடுத்த காப்பி, பேஸ்ட் லிங்க் not found -னு வர்றது.. லிங்க் சரியா..?

  ReplyDelete
 20. உங்களுக்கும் என்னுடைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.


  யாரோ அனோனியா வந்து என்னோட ப்ளோக்ல திட்டிட்டு போறாங்க தயவு செஞ்சு எனோட ப்ளாக் லிங்க தூகிருங்க பாஸ்,

  மைதீஸ்

  ReplyDelete
 21. பரவா இல்லை பிழைத்து போகட்டும் விடுங்கள் பாஸ்.

  தமிழ் மணம்.....போட்டாச்சு.

  ReplyDelete
 22. அட பாவிங்களா இப்படியெல்லாம்கூட நடக்குதுங்களா? உங்க வேதனை புரிகிறது.இவனுங்களையெல்லாம் இப்படியே விட்டிடமுடியாது பாஸ் பதிவுலகில் காப்பியடிப்பதை நிறுத்தும்வரை காலவரையற்ற உண்ணாவிரதம் என்று நாமளும் ஆரம்பிச்சிடவேண்டியதுதான். அல்லது காப்பி அடிப்பவர்களுக்கு தேவையான மொக்கைப் பதிவுகள் இங்கே இலவசமாகக் கிடைக்குமென்று ஒரு Blog ஆரம்பிச்சிடலாமா?

  ReplyDelete
 23. ஹிஹி நாசமா போவானுகள்!!

  ReplyDelete
 24. ஹி ஹி யாருப்பா அது...

  ReplyDelete
 25. ராஜா........!

  இப்படியல்லாமா நடக்கிறது. இப்படி கொப்பி பண்ணுபவர்கள் பதிவை வாசிப்பதேயில்லையா?! ஹிஹிஹி அவர்களது கடமையுணர்ச்சி கண்ணைக் கட்ட வைக்கிறது.


  உங்களின் எளிதான எழுத்து நடை நல்லாயிருக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. இப்படியும் நடக்குதா...?
  நல்ல சுடுறாங்க

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...