> என் ராஜபாட்டை : மங்காத்தா – சுட சுட ஒரு விமர்சனம்

.....

.

Tuesday, August 30, 2011

மங்காத்தா – சுட சுட ஒரு விமர்சனம்
தலயின் 50 வது படம், தேர்தல் முடிவிற்க்கு பின் சன் பிக்சர்ஸ் வெளியிடும் முதல் படம். பல தோல்விகளூக்கு பின் வந்துள்ள அஜித் படம், என பல சிறப்புகளுடன் வந்துள்ளது மங்காத்தா.

கதை :

ஒரு திருட்டு குற்றத்திற்காக சிறையில் இருக்கும் அஜித். ஒரு பெரிய திருட்டை செய்துவிட்டு வாழ்கையில் செட்டில் ஆக நினைக்கிறார். அதற்க்கு துனையாக ப்ரேம்ஜி,வைபவ்  மற்றும் சிலரை கூட்டு சேர்த்து கொண்டு ஒரு சூதாட்டகிளப்பை குறிவைகின்றார். 500 கோடி சூதாட்டம் நடக்கும் நாளில் அதை கொள்ளையடிப்பது இவர்களின் திட்டம்.

அது நடந்ததா, அல்லது சி.பி.ஐ அதிகாரி அர்ஜீனிடம் சிக்கி கொண்டார்களா? வேறு ஒரு கூட்டத்தில் மாட்டி கொண்ட தனது காதலி திரிஷாவை காப்பாற்றினாரா? என்பதை வெள்ளிதிரையில் பாருங்கள்.


முதல் காட்சியில் போலிஸ் உடையில் வந்து இறங்கும் அஜித்தை பார்கையில் தீயேட்டரில் விசில் பறக்கிறது. அதும் அவர் சிக்ரெட் பிடித்து கொண்டே சண்டை போடுவது அருமை. ப்ரேம்ஜியுடன் தண்ணீ அடித்துவிட்டு அஜித் பண்ணும் அலம்பல் தீயேட்டரை அதிரவைகிறது.

“மச்சி ஓப்பந்த பாட்டில்” பாடலில் நடனம் கலக்கல். “நண்பனே..” பாடல் மெலடி டிராமா. திரிஷா சில காட்சிகள் மட்டும் வந்தாலும் பளிச்சினு இருக்கார்.( வார்த்தை உபயம் : சி.பி). அஞ்சலி , லட்சுமிராய், ஆட்ரியா வந்தார். போனார்.

கலக்கல் வசனங்கள் :

 1. எத்தனை நாளுக்குதான் நான் நல்லவனா நடிப்பது.
 2. கரன்ஸி வந்தால் காதலும் வரும், கருமாதியும் வரும்( இரண்டும் ஒன்றுதானே ?)
 3. வாழ்கையே ஒரு சூதாட்டம், எப்ப ஜெய்போம், எப்ப தோர்ப்போம் என யாருக்கும் தெரியாது ?
 4. நான் சீட்டு கட்டுல ராஜாவா இருக்க ஆசைபடுறேன், ஜோக்கரா இல்ல..
 5. ப்ரேம்ஜி : பாஸ் உங்கள பாத்துதான் டெய்லி வாக்கிங் போக கத்துகிட்டேன். (உள்குத்து)
 6. ப்ரேம்ஜி : என்ன பாஸ் .. அவன் அவன் 1 லட்சம் கோடி, 1 அரை லட்சம் கோடினு கொள்ளை அடிக்கிறான், நாம வேறும் 500 கோடிதான் அடிக்கபோறோம்.

இயக்குனர் பாராட்டு பெறும் இடங்கள் :

 1. அஜித்தின் அறிமுக சண்டைகாட்சி
 2. கடைசிவரை அஜித்தை வில்லனாகவே காட்டியது.
 3. இடைவேளைக்கு பின் வரும் அந்த கார் சேஃஸிங் காட்சி.
 4. அர்ஜீன் வரும் காட்சியில் அவருக்கு முக்கியதுவம் குடுத்தது.
 5. பாடல்களை சிறப்பாக படமாக்கியது.

இயக்குனரிடம் சில கேள்விகள் :

 1. நாளை கிளப்க்கு போகலாம் என சொல்லும் போது அஜித்துக்கு தாடி இல்லை, ஆனால் மறுனாள் கிளப்பில் இருக்கும் போது தாடி இருக்கே எப்படி ?
 2. இவ்வளவு பெரிய கொள்ளை திட்டத்தில் காமெடி திருடன் ப்ரேம்ஜீயை ஏன் செர்க்க வேண்டும் ?
 3. ஓஷன் லெவன் படத்தில் பல காட்சிகள் இதில் வருகிறதே ஏன்?
 4. 3 கதா நாயகிகள் இருந்தும் அவர்களை ஏன் சரியாக பயன்படுத்தவில்லை( ஹீ..ஹீ)


இது எல்லா சென்டர்களிலும் 35 நாள் ஓடும்.

எதிர்பார்கபடும் ஆனந்தவிகடன் மார்க் : 45

எதிர்பார்கபடும் குமுதம் ரேட்டிங் : நன்று

என் கமெண்ட் : “மங்காத்தா “ WINNING GAMEடிஸ்கி : நேற்று இரவு கனவில் இந்த படத்தை பார்தேன்.

26 comments:

 1. ஏன்யா ஏன் இந்த கொலைவெறி?

  ReplyDelete
 2. அப்படி போடுங்க
  நீங்க மட்டும் ஒசிலையே படத்த பார்த்துடீங்க....
  ம்ம்ம்

  தமிழ்மணம் 2

  ReplyDelete
 3. அடங்கொய்யால!
  அப்படியே கனவு டி.வி.டி ய எனக்கும் அனுப்புங்க!

  ReplyDelete
 4. அட யோவ் கனவு கினவு கண்டியா இல்ல மெய்யாலுமே அதுக்குள்ள திருட்டு விசிடி வந்துருச்சா...ஹி ஹி ஹி கலக்கல் நண்பா

  ReplyDelete
 5. நானும் பார்த்தேன். நல்லா இருந்தது. நீங்க அந்த ஆண்ட்ரியா கிஸ் பத்தி சொல்லவே இல்லையே?

  ReplyDelete
 6. //டிஸ்கி : நேற்று இரவு கனவில் இந்த படத்தை பார்தேன்.//
  விமர்சனத்தைவிட இது ரொம்ப நன்னாயிருக்கு.

  ReplyDelete
 7. Y.....Y......Y,,,,,,,YYYYYYYYYY
  KOLAI VERY

  ReplyDelete
 8. த.ம.8.

  இப்படித்தான் ஏதாவது இருக்கும்னு நினைத்தேன்!

  ReplyDelete
 9. யப்பா சாமி முடியலைங்கோ

  ReplyDelete
 10. மங்கத்தா விமர்சனம்`னு சொன்னதும் டைரக்ட்`ஆ கீழே வந்துட்டேன்.. அங்க டிஸ்கி போட்டிருப்பீங்கன்னு தெரியுமே!!!

  நாங்கெல்லாம் ஏழு ஊர் ரவுடிய பாத்தவனுங்க.... ஹா..ஹா..ஹாஅ

  ReplyDelete
 11. ஹா ஹா கனவா அல்லது கேசட் வந்துடுச்சா

  அருமையான விமர்சனம் பாஸ்

  த .ம.ஒன்பது

  ReplyDelete
 12. உங்க பதிவ திருடி போட்டு இருகாங்க,இத கண்டிக்க வேண்டியது உங்கள் விருப்பம்.  http://www.cineikons.com/manktha-movie-reviews/

  ReplyDelete
 13. /////டிஸ்கி : நேற்று இரவு கனவில் இந்த படத்தை பார்தேன்.///////

  அப்போ திரிஷாவ இன்னும் கொஞ்சம் நல்லா பாத்திருக்கலாமே? மிஸ் பண்ணிட்டீங்களேண்ணே....

  ReplyDelete
 14. //////நாளை கிளப்க்கு போகலாம் என சொல்லும் போது அஜித்துக்கு தாடி இல்லை, ஆனால் மறுனாள் கிளப்பில் இருக்கும் போது தாடி இருக்கே எப்படி ?//////

  என்ன பாஸ் இப்படி தெரியாத மாதிரியே கேள்வி கேக்குறீங்க?

  ReplyDelete
 15. //////3 கதா நாயகிகள் இருந்தும் அவர்களை ஏன் சரியாக பயன்படுத்தவில்லை( ஹீ..ஹீ…)
  ////////

  அதெல்லாம் நல்லாத்தான் பயன்படுத்தி இருப்பாரு, ஆனா அதையெல்லாம் படத்துல வெக்கிற மாதிரி சீன் இல்லையாம்............

  ReplyDelete
 16. யோவ் .. இது உணமையான விமர்சனம்னு நெனைச்சு, கதைய வாசிக்காம டிரெக்டா //கலக்கல் வசனங்கள் :// பகுதிக்கு வந்தேனே!! என்ன சொல்லனும்!!
  தெரியாதனமா ஓட்டு வேற போட்டுட்டேன்...

  ReplyDelete
 17. டிஸ்கி : நேற்று இரவு கனவில் இந்த படத்தை பார்தேன்.//

  பாராட்டுக்கள். செலவு மிச்சம்.

  ReplyDelete
 18. சீக்கிரமா படம் பார்த்துட்டு விமர்சனமும் போட்டாச்சா:)

  ReplyDelete
 19. என்னம்மா யோசிக்கிறாங்க பாருங்க.

  நானும் நெசமாவே படம் ரிலீஸ் ஆகிடுச்சு என்று ஓடோடி வந்தேன்..

  அவ்...
  ஆனாலும் செமையாக தல ரசிகர்களுக்கு முன்னாடி தலயை கலாய்ச்சிட்டீங்களே

  ReplyDelete
 20. தல எமாத்தீடிங்களே.. ஆனா தல எமாத்தாம இருந்தா சரி..

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...