> என் ராஜபாட்டை : CONGRESS

.....

.
Showing posts with label CONGRESS. Show all posts
Showing posts with label CONGRESS. Show all posts

Friday, March 16, 2012

நீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழினமும் , கையாலாகாத காங்கிரஸ்யும்


'உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியா யத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால், நாம் இருவரும் தோழர்களே’ - கியூபா விடுதலைக்குப் போராடிய சே குவேராவின் தோழமை வரி இது. ஆனால், சே குவேராவுடன் தோளோடு தோளாக நின்ற ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபா இன்று, இலங்கைக்கு ஆதரவாக நிற்கிறது. காரணம்... அமெரிக்கா, இலங்கைக்கு எதிரியாக இருக்கிறது. 
அமெரிக்கா எதை ஆதரிக்கிறதோ அதை எதிர்ப்பது என்று கியூபா முடிவெடுத்துவிட்டது. கியூபாவைப் போலவே அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள் எல்லாம் இன்று இலங்கைக்கு ஆதரவாக மாறிவிட்டன. உலக நாடுகளை இரண்டு அணி களாகப் பிரித்துவிட்டது, ஈழத் தமிழர் பிரச்னை.
இதற்கு மையப் புள்ளியாக இருக்கப் போகிறது ஜெனிவா.
ஐ.நா-வின் மனித உரிமைக் கூட்டத் தொடர் பிப்ரவரி 27-ம் தேதி தொடங்கியது. மார்ச் 23 வரை நடக்க இருக்கும் இந்தக் கூட்டத்தில்தான், இலங்கை இனப் படுகொலைகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இலங்கை இனப் படு கொலைகளுக்கு எதிராக இரண்டாவது முறை இந்தத் தீர்மானம் ஐ.நா. மன்றத்தில் வரப்போகிறது. 2009 மே மாதம் முதல் முறையாக அமெரிக்க நாட்டின் ஆதரவுடன், கனடா, இத்தகைய தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அப்போது, உறுப்பினர்களான 47 நாடுகளில் 29 நாடுகள் இலங் கைக்கு ஆதரவாக வாக்களித்தன. 12 நாடுகள் எதிராக வாக்களித்தன. ஆறு நாடுகள் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. அதனால், அந்தத் தீர்மானம் தோல்வியைக் கண்டது. இப்போது மீண்டும் இலங்கை இனப்படுகொலைகளுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிட அமெரிக்கா முனைப்புடன் செயல்படுகிறது.
ராஜபக்சே அரசின் தமிழ் இனப் படுகொலை களுக்கு  நீதி கேட்டு ஈழத் தமிழர்கள், ஜெனிவாவில் நடை பயணம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாடும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று அந்தந்த நாட்டில் வாழும் தமிழர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். ஆனால், ஈழத் தமிழர்களால் இலங்கையில் தங்கள் அரசியல் உரிமையை எடுத்துரைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் துரோகிகளாக மாறி விட்டனர் என்ற ஆவேசம் தமிழர்களிடையே இணையதளங்களில் பதியப்படுகிறது. இதற்குக் காரணம், ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா-வின் மனித உரிமைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்து இருப்பதுதான். உலகம் முழுவதும் தமிழர்களுக்கு ஆதரவாகத் திரண்டுவரும் நிலை யில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இதில் பங்கேற்காமல் தட்டிக்கழித்ததை, 'சந்தர்ப்பவாதப் பின்வாங்கல்’ என்று உலகத் தமிழர்கள் கொந்தளித்துச் சாடுகின்றனர்.
''ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் பங்கேற்க இசைவு தெரிவித்துவிட்டு, திடீர் விலகலுக்கு என்ன காரணம்?'' என்று சம்பந்தனிடம் கேட்டோம்.
''ஐ.நா. கூட்டம் தொடர்பாக என்ன  செய்ய வேண்டுமோ, அனைத்து செயல்களையும் செய்து விட்டோம். ஆனால், இப்பொழுது இதில் பங்கேற் காமல் பிரசங்கமாக (அமைதியாக) இருக்கும் முடிவை எடுத்துள்ளோம். இது தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்நாடு செல்லும் முன்னரே விவாதித்தோம். அதில், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று எடுத்த முடிவு அவருக்கும் தெரியும். மக்கள் சார்பாக அனைத்துப் பிரச்னைகளையும் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் திறமான நோக்கத்துடன் உள்ளோம். ஊடகங்களின் பிரசாரத்துக்காக நாங்கள் எதுவும் செய்ய முடியாது. இந்த முடிவு தொடர்பாக இனி ஊடகங்களிடம் பேச முடியாது'' என்று இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.
அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் பேசினோம். ''இது மொத்தக் கூட்டமைப்பின் கருத்து அல்ல. தனிப்பட்ட சம்பந்தனின் கருத்து. எங்கள் விவாதத்தில், ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்கும் என்று இறுதி முடிவு எடுக்காவிட்டாலும், எங்கள் உறுப்பினர்கள் பலரின் நிலைப்பாடு, 'இதில் பங்கேற்பது’ என்பதுதான். ஆனால் இல்லை என்று சம்பந்தன் சொன்னால், அது அவரே கூறிக்கொள்ளும் முற்றும் முழுதுமான பொய். நான் தமிழ்நாடு விரையும் முன் ஐ.நா.மனித உரிமைக் கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்கும் என்றே முடிவு எடுக்கப்பட்டது'' என்றார்.
அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற குரல், தமிழகத்தில் அனைத்துத் தரப்பினராலும் முன்மொழியப் பட் டுள்ளது. கருணாநிதியும் ஜெயலலிதாவும்கூட ஒரே குரலில், இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பிரதான எதிர்க்கட்சிகளும் இதே கோரிக்கையை வைத்துள்ளன. ஆனால், மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.
ஈழத்தமிழர்கள் மரணத்துக்கு சாட்சியாக இருந்த மத்திய அரசு, பாவத்தைக் கழுவிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

- ம.கா. தமிழ் பிரபாகரன் அவர்கள் விகடனில் எழுதிய கட்டுரை இது. நமது இன மக்களுக்காக இதை அனைவரிடமும் சென்று சேரும் அளவு பகிரவும் .

நண்பர் சி.பி யின் கட்டுரையை படிக்க இங்கே கிளிக்(

தமிழா! தமிழா! இருப்பாய் தமிழா நெருப்பாய்!ஈழத்தமிழனும் கலந்தான் நம் உயிர் உறுப்பாய்..

) செய்யவும்  



முந்தய பதிவுகள் :

"A" - Jokes

 

அஜீத் - ஆர்யா-விஷ்ணுவர்தன் 'ரேஸ்'!

 

கதம்பம்

 

 


Saturday, March 5, 2011

திமுக-காங்கிரஸ் கூட்டணி ????????

சென்னை: திமுக- காங்கிரஸ் கட்சி இடையிலான கூட்டணி உடைந்துவிடாமல் தடுக்க கடைசி கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 7 ஆண்டு காலமாக உள்ள இந்தக் கூட்டணி தொடர் வெற்றிகளைப் பெற்று வந்தது. 2004 மக்களவைத் தேர்தல், 2006 சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 11 இடைத் தேர்தல்கள், 2009 மக்களவைத் தேர்தல் என இந்தக் கூட்டணியின் தொடர் வெற்றியால் அதிமுக தான் பெரிதும் நிலை குலைந்தது. தனது கட்சியின் வாக்குகளை வேகமாக இழுத்து வரும் விஜய்காந்துடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலைமைக்கும், அவருக்காக பல மாதங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டிய நிலைமைக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தள்ளப்பட்டார். கடைசியில் விஜய்காந்த் கேட்ட இடங்களைத் தந்து அவருடன் கூட்டணி அமைத்தார்.

திமுக- காங்கிரஸ் கூட்டணி என்பது சோனியா காந்தி- கருணாநிதி என்ற இரு தலைவர்களின் பரஸ்பர நம்பிக்கை மூலம் உருவாக்கப்பட்டு நிலைத்து நின்றது. ஆனால், இதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் உருவில் சிக்கல் வந்தது. 1960களில் விரட்டியடிக்கப்பட்ட காங்கிரஸை மீண்டும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மூலம் அரியணையில் அமர்த்த ராகுல் தி்ட்டம் போட, புள்ள எப்படியெல்லாம் திங்க் பண்ணுது என்று சோனியாவை உசுப்பி விட்டது காங்கிரசின் ஒரு பிரிவு.

ராகுலை கையில் போட்டுக் கொண்டு அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டினால் தான் கட்சியில் எதிர்காலம் உண்டு என்பதை உணர்ந்த காங்கிரஸ் தலைகள், ராகுல் போடும் இந்தத் திட்டம் நிச்சயம் பலிக்கும் என சோனியாவை நம்ப வைத்து, திமுகவுக்கு நெருக்கடிகளை ஆரம்பித்தன. இதற்கு உதவியாக வந்து சேர்ந்தது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம். இதை வைத்தே திமுகவை நமது வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என நினைத்து கூட்டணி ஆட்சி, அமைச்சர் பதவிகள், ஒருங்கிணைப்புக் குழு, 90 சீட்கள், கேட்கும் தொகுதிகள், குறைந்தபட்ச செயல் திட்டம் என்று ராகுல் காந்தி சொல்லி அனுப்பியதை திமுகவிடம் வந்து அடுக்கியது காங்கிரஸ் குழு.

திமுக உருவானதன் அடிப்படை நோக்கமே காங்கிரஸை ஒழித்துக் கட்டி மாநில நலன்களை பேணுவது தான் என்றாலும், அரசியல் நிர்பந்தங்கள் காரணமாக அந்தக் கட்சியுடன் ரொம்பவே உறவாடியது திமுக. காங்கிரஸ் வைத்து அதிகாரம், பதவிகளை அனுபவித்தது.. இப்போது காங்கிரஸ் தனது உண்மையான முகத்தைக் காட்ட, திக்கித் திணறிப் போயுள்ளது திமுக.

திமுகவை தனது டியூனுக்கு ஆட வைக்க முயலும் ராகுல் காந்தியிடம் பணிந்துவிட்டால் திமுகவின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்பது நிச்சயம் என்பதை லேட்டாக புரிந்து கொண்ட திமுக, இப்போது திருப்பித் தாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் தான் 55 இடங்கள் என்பதை 60 வரை தருவதாக தனது உயர்த்திய திமுக, கூட்டணி ஆட்சி உள்ளிட்ட பிற நிபந்தனைகளை எல்லாம் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் உள்ள குப்பைத் தொட்டியிலேயே போட்டுவிட்டு வருமாறு கூறிவிட்டது. ஆனால், இதை ஒப்புக் கொண்டால் அது ராகுல் காந்திக்கு ஏற்படும் தோல்வி என நினைக்கும் காங்கிரஸ், அப்ப 63 சீட் குடுங்க என்று கேம் ஆரம்பித்துள்ளது. அதாவது 55 இடங்கள் தருவதாக சொன்ன திமுகவிடம் 63 இடங்களை வாங்கிக் காட்டிவிட்டோம்.. இது தான் ராகுல்ஜி பார்முலாவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று சொல்லிக் கொண்டு ராகுலின் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டிக் கொள்ள காங்கிரஸ் கருதுகிறது.

ஆனால், இது போன்ற வேலையை காங்கிரஸ் இதை நிச்சயம் செய்யும் என்பதை முன் கூட்டியே அறிந்தததால் தான் அவர்களுடன் ஆலோசனை நடத்தாமலேயே பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 31, 10 தொகுதிகளை ஒதுக்கினார் முதல்வர் கருணாநிதி. தமிழக காங்கிரஸ் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்திக்க வந்தபோது, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 தொகுதிகளை ஒதுக்கிவிட்டே அவரை சந்திக்க வந்தார் கருணாநிதி.

இதன்மூலம் மிச்சம் இருப்பது 182 தொகுதிகள் தான். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 55 தருகிறேன் என்று கருணாநிதி கூற, ஹை கமாண்டிடம் பேசிவிட்டு வருவதாக சொல்லிவிட்டுப் போனார் ஆசாத். பின்னர் டெல்லியில் நடந்த சில சந்திப்புகள், டெல்ல-சென்னை இடையே நடந்த சில போன் கால் சம்பாஷணைகளத் தொடர்ந்து காங்கிரசுக்கு 60 சீட் தருவதாகவும், அத்தோடு இழுபறியை நிறுத்துமாறும் திமுக திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

ஆனால், திமுக எதிர்பார்த்தது போலவே 63 வேண்டும், அதுவும் இந்த 63ம் நாங்கள் சொல்லும் தொகுதிகளாக இருக்க வேண்டும், உடன்பாட்டில் கையெழுத்து போடும்போதே தொகுதிப் பெயர்களையும் வெளியிட வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது. இது சரிப்பட்டு வராது என்பதால் தான், நேற்று நள்ளிரவில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளைக் கேட்பதாகவும், அதுவும் எந்தெந்த தொகுதிகள் என்று அவர்களே முடிவு செய்யப் போவதாக சொல்வதாகவும், இது நியாயமில்லாத கோரிக்கை என்றும் அறிக்கை வெளியிட்டார்.

மேலும் இந்த விஷயத்தில் இரண்டில் ஒன்று பார்த்துவிடும் வகையில் இன்று கூடும் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இரு கட்சிகளின் நலம் விரும்பிகளும் நேற்று நள்ளிரவில் இருந்தே இரு தரப்பினரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். காங்கிரசுக்கு மேலும் ஒரு இடம் தரலாம் என்றும் அதை பாமகவிடம் தந்த 31ல் இருந்து வாங்கித் தரலாம் என்றும் திமுகவுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், இப்படி ஒரு நிலை வரலாம் என்பதை நேற்றே உணர்ந்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக பொதுக் குழு கூட்டத்தில் பேசுகையி்ல், எங்களுக்கு 32 இடங்கள் கிடைத்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன் என்று கூறி, தனது சீட்டை விட்டுத் தர முடியாது என்பதை தெளிவுபடுத்திவிட்டார்.

பாமக, விடுதலை சிறுத்தைகள் (10 இடங்கள்), கொங்குநாடு முன்னேற்றக் கழகம் (7 இடங்கள்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3 இடங்கள்), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (1 இடம்) ஆகியவற்றுக்கு ஒதுக்கியதுபோக, திமுகவுக்கு எஞ்சியுள்ளது 122 இடங்கள் மட்டுமே. இதில் பாமகவோ அல்லது வேறு கட்சியோ விட்டுக் கொடுக்க மறுத்தால் திமுக தான் தனது இடத்தை விட்டுத் தந்து காங்கிரசுக்கு கூடுதல் தொகுதியை தந்தாக வேண்டும்.

திமுக இதற்குத் தயாராக இல்லை. இதனால் இன்று மாலை நடக்கும் திமுக உயர் மட்டக் குழுக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் ஏதாவது ஏடாகூடமான முடிவை திமுக எடுத்து நம்மை நடுத்தெருவில் நிறுத்திவிடும் என்ற பயம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் அமைச்சர்கள் வயலார் ரவி, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், வாசன் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சனையில் மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி அல்லது சோனியா காந்தி இன்று நேரடியாக தலையிடுவர் என்று தெரிகிறது.

சீக்கல் தீரும்-பிரணாப்:

இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ்-திமுக கூட்டணி சிக்கல் தீர்க்கப்படும். காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தவும் தெரியும் அதை தீர்க்கவும் தெரியும் என்றார்.

கருணாநிதி முக்கிய ஆலோசனை:

இந் நிலையில் காங்கிரசிடமிருந்து சில சமாதான சிக்னல்கள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர்கள் ஸ்டாலின், அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன், மூத்த எம்பி டி.ஆர்.பாலு ஆகியோருடன் இன்று காலை முதல் அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

நன்றி : thatstamil