> என் ராஜபாட்டை : ELECTION 2011

.....

.
Showing posts with label ELECTION 2011. Show all posts
Showing posts with label ELECTION 2011. Show all posts

Tuesday, April 12, 2011

கருணாநிதி நாட்டைப் பிடித்த சனி, ஸ்டாலின் ஒரு பிணி-விஜயகாந்த் கடும் தாக்கு

பண்ருட்டி: இந்த நாட்டைப் பிடித்த சனியன் கருணாநிதி. அவரது மகன் ஸ்டாலின் ஒரு பிணி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மிகக் கடுமையாக தாக்கியுள்ளார்.


பண்ருட்டியில் இன்று பிற்பகல் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்துப் பேசினார் விஜயகாந்த். மிகப் பெரிய அளவில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில், விஜயகாந்த் பேசுகையில் கூறியதாவது:

என்னைப் பற்றி விமர்சிக்கிறார் மு.க.ஸ்டாலின். உண்மையில், இந்த நாட்டைப் பிடித்த சனியன்தான் உங்க அப்பா. உங்க அப்பாதான் இந்த நாட்டின் சனியன். நீங்கள் இந்த நாட்டைப் பிடித்த பிணி.



எங்களது கூட்டணியை எண்ணெயும், தண்ணீரும் போல என்கிறார்கள். உண்மையில் உங்களது கூட்டணிதான் எண்ணெயும், தண்ணீரும் போல. எங்களது கூட்டணி, தேனும் பாலும் போல. எங்களது கூட்டணி மக்கள் கூட்டணி.

உங்களை சமூக நீதி காத்த கூட்டணி என்கிறீர்கள். ஆனால் உண்மையில் அது சமுதாய விரோத கூட்டணி. பாமக தலைவர் சொன்னாரே, கலைஞர் அலை வீசுகிறது என்று. ஆனால் அனல் காற்றுதான் வீசுகிறது.

என்னைக் காடுவெட்டி குரு பயமுறுத்துகிறார். எனக்குப் பயமெல்லாம் கிடையாது. உங்க தலைவர்தானே அன்று கலைஞர் ஆட்சிக்கு சைபர் மார்க் போட்டார். கருணாநிதி ஆட்சிக்கு அதிக சைபர்களைப் போட்டவர் ராமதாஸ்தான். இன்று அந்த சைபர் கூட்டணியில் போய்ச் சேர்ந்திருக்கிறார்.

தமிழினத் தலைவர் என்று கூறிக் கொள்கிறாரே கலைஞர், உண்மையில் அவர் தமிழினத்தை அழித்த தலைவர். அவரால் ஒரு இனமே அழிந்து போய் விட்டது. தமிழ் மக்களுக்காகப் போராடுவேன் என்று கூறுகிறார் கருணாநிதி, அவரை இலங்கைப் படையிடம் சிக்கி உயிரிழந்த 550 மீனவர்களின் ஆவி கூட மன்னிக்காது.

கருணாநிதி ஆட்சி சாதனை அல்ல, பெரும் வேதனைதான். மக்கள் அவர்களுக்கு தீர்ப்பளிக்கப் போகிறார்கள். நிச்சயம் அவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள்.

டெல்லியில் இன்று அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருக்கிறார். எதற்காக, ஊழலை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்பதற்காக. ஆனால் கலைஞரோ, அண்ணாவின் பெயரைச் சொல்லி நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

மே 13க்குப் பிறகு தெரியும், மானாடுதா, மயிலாடுதா என்பது. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். கலைஞர் வீடா, தமி்ழ்நாடா என்பதை வாக்களிக்கப் போகும் முன்பு நினைத்துப் பார்த்து முடிவு செய்து கொண்டு வாக்களியுங்கள் என்றார் விஜயகாந்த்.
Thanks : Thatstamil.com

Monday, April 11, 2011

என்ன செய்ய போகிறோம் ?


1.  எங்கள் சாதனைகளை பார்த்து விட்டு ஒட்டு போடுங்கள் என மேடையில் சொல்லிவிட்டு  வீடு வீடாக பணம் தரும் அரசியல்வாதிகளை என்ன செய்ய போகிறோம் ?

2. ஒட்டு பதிவு அன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்க சொல்லி ஆணை , ஆனால்  சரவணா ஸ்டோர் போன்ற பல நிறுவனங்கள் விடுமுறை அளிபதில்லை  அவர்களை என்ன செய்ய போகிறோம் ?

3. வடிவேலு , குஷ்பு , சிங்கம் முது சொன்னால்தான் நாம் கேட்போம் என நினைக்கும் அறிவில்லாத அரசியல்வாதியை என்ன செய்ய போகிறோம் ?

4. இலவச கல்வி அளிக்க முடியாத அரசு மற்றவற்றை இலவசமாக தருகிறேன் என கூறி காதில் பூ சுற்றுகிறதே அதை என்ன செய்ய போகிறோம் ?

5. தமிழக  மினவர்கள் காக்க படுவார்கள் என உறுதியளித்தனர்  சோனியா , கருணாநிதி. இன்று ஒருவர் பலி . இப்பவும் நம்மை ஏமாற்றும் இவர்களை என்ன செய்ய போகிறோம் ?

6. மேற்கு வங்கத்தில் ௮௭ வயதானவர் ஏன் முதலமைச்சர் ஆகவேண்டும் என ராகுல் கேட்டார் , அப்பா கருணாநிதிக்கு 
   15  வயசா ஆகுது 

7.  வக்கனையா அரசியல் பேசிவிட்டு , அரசியல் பதிவு போட்டுவிட்டு  ஒட்டு போடாமல் இருப்பவரை என்ன செய்ய போகிறோம் ?

Sunday, April 10, 2011

வடிவேலுவுக்கு என்ன அரசியல் தெரியும்-சிங்கமுத்து

கரடி கையில் சிக்கியவன் நிலைக்குப் போய் விட்டார் வடிவேலு என்று கூறியுள்ளார் காமெடி நடிகர் சிங்கமுத்து.

தாம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சின்னையாவை ஆதரித்து தாம்பரம் மார்க்கெட் பகுதியில் பேசினார் சிங்கமுத்து. அப்போது அவர் வடிவேலுவை விமர்சித்துப் பேசினார்.

சிங்கமுத்து பேசுகையில்.

ஒரு ஊரில் வெள்ளம் வந்தபோது அங்கு இருந்த பீரோ, கட்டில் என பல பொருட்கள் வெள்ளநீரில் அடித்து வரப்பட்டன. அந்த பொருட்களை எடுக்க ஊரார் திரண்டபோது ஒருவன் மட்டும் பெரிதாக எதிர்பார்க்கிறேன் எனக்கூறி விட்டான்.

அப்போது பெரிதாக கறுப்புநிறத்தில் ஒன்று வந்தது. அவன் அதை பிடித்துக்கொண்டான். அதை பிடித்தபடியே 3 ஊரை தாண்டி சென்று விட்டான்.

அப்போது ஊர்க்காரர்கள், அவனைப் பார்த்து, நீ பிடித்ததை இழுத்து வர முடியவில்லை என்றால், அதை விட்டுவிட்டு கரைக்கு வந்து சேர் என்று கூறினார்கள். கரடியை பிடித்த போது அதன்பிடியில் சிக்கிக்கொண்ட நிலை தான் வடிவேலுக்கு.

வடிவேலுவுக்கு என்ன அரசியல் தெரியும். நான் 1972-ல் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர். ஆனால் அவர் எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை என்கிறார். பொருளாதார மேதை மாதிரி பேசிக்கொண்டிருக்கிறார். விஜயகாந்தை பற்றி பேச வடிவேலுவுக்கு தகுதி இல்லை.

தமிழகத்தில் சினிமா துறையில் இருப்பவர்கள் பலருக்கு வாய்ப்பு தேடி வரும்போது தன் அலுவலகத்தில் சாப்பாடு போட்டு அவர்கள் சினிமா துறையில் முன்னேற உதவியவர் விஜயகாந்த். காசு கொடுக்கிறார்கள் என்பதற்காக வடிவேலு என்ன வேண்டுமானாலும் பேசலாமா?

விஜயகாந்தை திட்டுவாராம். ஜெயலலிதாவை ஏதும் பேசமாட்டாராம். தமிழக முதல்வராக ஜெயலலிதா வருவார் என்பது வடிவேலுவுக்கு தெரியும். வடிவேலு தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவிடம் வருவார் என்பதும் தி.மு.க.வினருக்கு தெரியும்.

இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு. அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போடாதீங்க என்று மக்களுக்கு சொல்லி தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்கிறார் வடிவேலு. தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர். அவர்களை எந்த காமெடி பீசாலும் ஏமாற்ற முடியாது.

வடிவேலு அரசியல் கட்சிக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார் என்றால் அந்த கட்சியின் பணிகளை சொல்லி ஓட்டு கேட்கலாம். அதை விட்டு தனிநபர் விமர்சனம் செய்வது நல்லதல்ல. வடிவேலு 6 மணிக்கு என்ன செய்வார். இரவு 11 மணிக்கு மேல் என்ன செய்வார் என்ற ரகசியம் எல்லாம் எனக்கு தெரியும் என்றார் சிங்கமுத்து.


Thanks :http://thedipaar.com

கற்பு குறித்துப் பேசி வாங்கிக் கட்டியபோது குஷ்புவைக் காத்தது ஜெயலலிதாதான்-சிங்கமுத்து

மதுரை : தமிழகப் பெண்களின் கற்பு குறித்துப் பேசி பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் போராட்டத்தால் தத்தளித்த நடிகை குஷ்புவை, காப்பாற்றி அவரை மீட்டது ஜெயலலிதாதான். ஆனால் அவர் நன்றி மறந்து பேசி வருகிறார் என்று நடிகர் சிங்கமுத்து கூறியுள்ளார்.


மதுரை மாவட்டம் திருமங்கலம், செக்கானூரணி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார் சிங்கமுத்து. அப்போது அவர் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை குறித்து விளக்கிப் பேசினார். திமுக அரசின் குறைகளையும் விளக்கிப் பேசினார்.

பின்னர் வடிவேலு, குஷ்புகுறித்தும் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

வடிவேலுவை குளிக்க வைத்து, முதன் முதலில் வேட்டி கட்டி நடிக்க வைத்ததே விஜயகாந்த் தான். நாங்கள் தான் அவரை உருவாக்கினோம். அதை மறந்து விட்டு, விஜயகாந்தை அவன், இவன் என்று பேசுகிறார்.

இந்த குஷ்பு. இவருக்கு ஜெயலலிதா குறித்து பேச என்ன தகுதி உள்ளது. முன்பு தமிழக பெண்களின் கற்பு குறித்துப் பேசி பெரும் சர்ச்சையைக் கிளப்பினார். இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள், பாமக மற்றும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து இவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின.

விளக்குமாறு உள்ளிட்டவற்றைக் கொண்டு குஷ்பு படத்தை அடித்து நொறுக்கிப் போராட்டம் நடத்தினர். கொடும்பாவிகளைக் கொளுத்தினர். இதனால் வெளியில் வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் குஷ்பு. ஆனால் அப்போது அவரைக் காப்பாற்றியவர் ஜெயலலிதாதான். சரி, நம்ம தமிழ்நாட்டை நம்பி வந்து விட்டார். தமிழ்நாட்டின் மருமகளாகப் போய் விட்டார் என்று கருதி அவரைக் காப்பாற்றி பிரச்சினையை அமைதிப்படுத்தினார். ஆனால் இன்று நன்றி மறந்து பேசி வருகிறார் இந்த செந்தமிழ்ச்செல்வி குஷ்பு.

மக்கள் இதையெல்லாம் சிந்தித்து்ப பார்க்க வேண்டும். பாமகவும் சரி, விடுதலைச் சிறுத்தைகளும் சரி குஷ்புவுக்கு எதிராக அவர்களை விட யாருமே மோசமாக போராட்டம் நடத்தியதில்லை. ஆனால் இன்று அவர்களுக்கு குஷ்புவின் ஆதரவு தேவைப்படுகிறது.

திமுககாரர்கள் அன்று இந்தியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். தார் பூசி அழித்தனர். ஆனால் இன்று இந்தி பேசும் குஷ்புவின் ஆதரவில், அவரது தயவில் அண்டியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்தையுமே ஜெயலலிதா செய்வார், நிறைவேற்றுவார்.

தமிழக மக்களை பாடாய்ப்படுத்தி வரும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல் ஆகியவற்றை சிந்தித்துப் பாருங்கள். இதை ஒழிக்க அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார் சிங்கமுத்து.

Saturday, April 9, 2011

அறியாமையால் பேசும் நடிகர் வடிவேலு அரசியல் வியாபாரம் செய்யும் கார்த்திக் : செந்தில்

தாங்க முடியாத அனல் வெயிலில் தீவிர பிரசாரம்...பசியுடன் முதுகு வலிக்கு இடையே நடிகர் செந்தில் அளித்த "விசேஷ' பேட்டி: தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி, நத்தம் பகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். நெல்லையை தொடர்ந்து விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சென்னை பகுதிகளில் பிரசாரம் செய்கிறேன். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நடுத் தெருவில்தான் நிற்க வேண்டும். மக்களிடமிருந்து மிச்ச சொத்தையும் பிடுங்கி விட்டு அனைவரையும் பக்கத்து மாநிலத்திற்கு விரட்டி விடுவர். இந்த தேர்தலுடன் கொள்ளை கூட்டணி விரட்டி அடிக்கப்பட வேண்டும்.

முதியோருக்கு ஓய்வூதியம் அளிக்கப்படும் என்று கருணாநிதி கூறி வருகிறார். இவர் என்ன குமரனா. வயதான இவரும் பென்ஷனை வாங்கி வீட்டில் உட்கார வேண்டியதுதானே. கருணாநிதி வீட்டில் உட்கார்ந்தால்தான் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது. அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கொடநாட்டிற்கு செல்வதாக ஸ்டாலின் கூறி வருகிறார். கொடநாடு தமிழகத்தில்தான் உள்ளது. வெளிநாட்டில் ஒன்றும் இல்லை. தேவையில்லாத விஷயங்களை பேசி அவர் மக்களை குழப்பி வருகிறார்.
விஜயகாந்த் ஹீரோ அல்ல, வில்லன் என்று ஸ்டாலின் கூறுகிறார். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என திமுகவினர் அனைவரும் வில்லன்கள்தான்.

கருணாநிதி தனது வாரிசுகளுக்காக கோடி, கோடியாக கொள்ளையடித்து வருகிறார். ஆனால் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு, மக்கள்தான் வாரிசுகள். அவர்களுக்காகத்தான் போராடி வருகிறார். எனவே, இத்தேர்தலில் கோபாலபுரம் கொள்ளை கூட்டத்தை விரட்ட வேண்டும். தேர்தலில் திமுகவினர் காசு, பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள். அது உங்களின் பணம், மக்களின் பணம். பால் ஊற்றி சத்தியம் செய்ய கூறினால் அவர்களையும் சத்தியம் செய்ய கூறுங்கள். அந்த பணம் எப்படி வந்தது என்பது அவர்களுக்கும் தெரியும்.

இயக்குனர் சீமான் கூறுவதை போல் திமுகவினர் கொடுக்கும் பணத்தில் சிறிது கோயில் உண்டியலில் போட்டால் சரியாகி விடும். நடிகர் வடிவேலு அறியாமையின் காரணமாக திமுகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். இதன் பின் விளைவுகள் என்ன என்பது அவருக்கு தெரியாது. கருணாநிதி அடுத்தவரை ஏவிவிட்டு மற்றவர்களை விமர்சனம் செய்வார். அதிமுகவுக்கு ஆதரவாக முதலில் குரலில் கொடுத்த கார்த்திக்கை, குஷ்பு திமுகவிடம் அழைத்து போய் அங்கு நன்கு கவனித்ததால் திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறார். தேர்தல் நேரத்திற்கு மட்டும் வந்து வியாபாரத்தை கவனித்து கார்த்திக் சென்று விடுவார். இவரை ரசிகர்கள் நம்ப வேண்டாம். உஷாராக இருக்க வேண்டும். தொடர்ந்து சாதி பிரச்னையை தூண்டி விட்டால் எந்த ஊருக்குள்ளும் அவரை மக்கள் வர விட மாட்டார்கள்.

இந்தி எதிர்ப்புக்கு போராட்டம் நடத்திய கருணாநிதி, இந்தி பெண்ணான குஷ்பு மூலம் ஆதரவு திரட்டுகிறார். ஜீப்பில் மைக்கை தவற விட்டு அதை கீழே குனிந்து எடுத்ததை வேட்பாளரை விஜயகாந்த் அடித்ததாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இப்படி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு திமுகவினர் வந்ததால் நாடே குட்டிச் சுவரானது. கேபிள் டிவியை அரசுடமையாக்கப்படும் என்று அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கூறிய போது ஓடோடி போய் கவர்னரை சந்தித்தார் கருணாநிதி. ஆனால் பின்னர் அவரே கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும் என்று கூறி இத்திட்டத்தை கிடப்பில் போட்டார். மக்கள் வரிப் பணத்தில் இருந்து டிவி கொடுத்த அவர் மாதம் தோறும் மக்களின் சொந்த பணத்தை கேபிள் கட்டணமாக பிடுங்கி வருகிறார்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ உளுத்து போன அரிசியை வழங்கினார். இதனை வேக வைக்க சிலிண்டர், மளிகை பொருட்கள், காய்கறிகள் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பத்திரிக்கை, டிவி, சினிமா, கேபிள், விமானம் உட்பட அனைத்து துறைகளிலும் கருணாநிதி குடும்பத்தினர் கோடி, கோடியாக லாபம் பார்த்த வருகினறனர். இந்த நிலை தொடராமல் இருக்க மக்கள் அனைவரும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மக்களுக்காக ஜெயலலிதா பாடுபட்டு வருகிறார். ஆனால் கருணாநிதியோ, தனது குடும்பத்தினருக்காக மட்டும் பாடுபடுகிறார். ஜெயலலிதாவால் எனது உயிருக்கு ஆபத்து என்று கனிமொழி பொய் பிரசாரம் செய்கிறார். எதையாவது அனுதாபத்தை ஏற்படுத்தி மக்களிடம் ஓட்டுகளை வாங்கி விடலாம் என திமுகவினர் கனவு காண்கின்றனர். இந்த கனவு ஒரு போதும் பலிக்காது.

இவ்வாறு நடிகர் செந்தில் கூறினார். தொடர்ந்து பசியை தணித்து விட்டு நெல்லை பகுதிகளில் அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு திரட்ட புறப்பட்டார் நடிகர் செந்தில்.

Thanks : Dhinamalar

காங்கிரசை இன்று ஆதரித்து பேசும் வடிவேலு ஈழத்தமிழருக்காக அன்று பேசியது நீலிக்கண்ணீரா? நடிகர் மன்சூர் அலிகான்

சென்னை, ஏப்.- 6 - ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க உதவிய காங்கிரசை இன்று ஆதரித்துப்பேசும் வடிவேலு, அன்று ஈழத்தமிழர்களுக்காக பேசியது நீலிக்கண்ணீரா என்று மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பினார். நடிகர் மன்சூர்அலிகான் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி  அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நடிகர் வடிவேலு அரசியல் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் நடிகர் விஜயகாந்தை தரக்குறைவாக பேசி வருகிறார். விஜயகாந்தின் குரல் எப்போதும் மெதுவாகத் தான் இருக்கும். அவர் மாதம் முழுவதும் வெளியில் அலைந்து மைக்கை பிடித்து பேசுவதால் அது போதையில் பேசுவது போல்தான் தெரியும். என்னுடைய குரலும் அப்படித்தான் இருக்கும். வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரால் ஏற்பட்ட பிரச்சினையை பேசி தீர்க்காமல் கோர்ட்டு வரை சென்று இப்போது அதனை வைத்து நடிகர் வடிவேல் அரசியல் மூலம் பழி வாங்குகிறார்.

வடிவேலுவிடம் 2 வருடத்திற்கு முன்பு இதுபற்றி பேசி இருக்கிறேன். நடிகர்கள் ஒரு தெருவில் வாழ்பவர்கள். அவர்கள் மற்றவர்களுக்கு பலியாகி விடக் கூடாது. தேர்தல் இன்னும் 4 நாட்களில் முடிந்து விடும். அதன் பின்னர் நாம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் நிலை வரும். அண்ணன் விஜயகாந்த் குடியரசு தலைவரால் சிறந்த குடிமகன் விருது வாங்கி உள்ளார். 32 இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்தவர். என்னை போன்ற பலரையும் அறிமுகம் செய்தவர். அவர் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த காலம் பொற்காலம். கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டு கொண்டு வந்தவர்.
ஒரு கலைஞனை சக கலைஞனான வடிவேலு கீழ்தரமாக விமர்சித்து பேசுவது வேதனையானது. அரசியலில் நடிகர்களை பயன்படுத்தி விட்டு துடைத்து போட்ட கல் போன்று தூக்கி எரிந்து விடுவார்கள்.

நடிகர் வடிவேலு காழ்ப்புணர்ச்சியை கைவிட வேண்டும். ஈழத்தமிழர்களுக்காக வடிவேலு ராமேசுவரத்தில் நடந்த கூட்டத்தில் உணர்ச்சி nullர்வமாக பேசினார். ஆனால் இப்போது நான் போட்டியிடும் ஆலந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்க உதவிய காங்கிரசை ஆதரித்து பேசுகிறார். அப்படியானால் ஈழத் தமிழர்களுக்காக வடிவேலு அன்று வடித்தது nullநீலிக் கண்ணீரா? நடிகர் விஜயகாந்தை 20 வருடங்களாக எனக்கு தெரியும். 18 படங்களில் அவருடன் நடித்து உள்ளேன். அவர் மது அருந்துவது இல்லை.
இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.

Thanks :Dhinaboomi

இதை பார்த்த பின்பும் காங்கிரஸ்க்கு ஒட்டு போடுவிகளா ?

உண்மையான தமிழண்ணா இருந்தா , மனசாட்சி உள்ள மனிதனா இருந்தா இதை பார்த்துவிட்டு  ஒட்டு  போடுங்கள்





Friday, April 8, 2011

வடிவேலுவின் ஆபாச பேச்சு பொதுமக்கள் முகம் சுளிப்பு: கல்வீச்சு

நடிகர் வடிவேலுவின் தேர்தல் பிரச்சாரத்தில் அவரது ஆபாச பேச்சைக் கேட்டு பொதுமக்கள் முகம் சுளிப்பதோடு ஆத்திரமடைந்து கல்வீச்சும் நடத்திவருகிறார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டதுவரை தி.மு.க. என்ற கட்சியோ, அ.தி.மு.க. என்ற கட்சியோ இருப்பதாக கூட தெரியாத நடிகர் வடிவேலு, திடீரென விஜயகாந்த்துடன் இருந்த முன்விரோதத்தில் அவரை வசைபாட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தி.மு.க.வில் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 
தேர்தல் பிரச்சாரம் செய்ய வரும் வடிவேலு, மேடைப்பேச்சு நாகரீகம் என்றால் என்னவென்றுகூட தெரியாமல் அநாகரீகமாக பேசிவருகிறார். நான்கு சுவற்றுக்குள் பேசவேண்டிய விஷயங்களை மக்கள் முன்னிலையில் பேசி ஆத்திரமடைய செய்வதோடு, அவமானப்பட்டும் திரும்புகிறார். கடந்த சில நாட்களாக மதுரையில் பல்வேறு இடங்களில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதாக கூறி, தி.மு.க.வைப் பற்றியோ, வேட்பாளர்கள் பற்றியோ எதுவுமே பேசாமல், விஜயகாந்த்தை வசைபாடுவதையே முழுமூச்சாக செய்துவருகிறார்.
 
மதுரையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் இவரது பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். வடிவேலை பார்ப்போம் என்று வரும் பெண்கள், இவர் பேச ஆரம்பித்ததும் முகத்தை சுளித்தபடி கலைந்து செல்ல துவங்கிவிடுகின்றனர். இதில் உச்சகட்டமாக மதுரையை அடுத்த அலங்காநல்லூரில் வடிவேலுவின் ஆபாச பேச்சைக் கேட்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்து கல்வீசி தாக்கினர். இதனால் தொடர்ந்து பேசமுடியாமல் வடிவேலு திரும்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.
 
வடிவேலுவின் கொமெடி என்றால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ரசித்த நிலை மாறி, தற்போதைய அவரின் அரசியல் பிரச்சாரம் அனைத்து தரப்பு மக்களிடமும் வெறுப்பையும், எதிர்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலி அவரது பிரச்சாரத்தின்போது மக்கள் நடந்துகொள்ளும் விதத்தை பார்க்கும்போதே தெரியவருகிறது.
 
Thanks : Kingtamil.com

Saturday, April 2, 2011

தேர்தல் களம்: இலவசங்கள் - எச்சில் இலை பிச்சை!

நடைபெற விருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை யொட்டி தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்திருக்கின்றன. சென்ற தேர்தலில் எல்லோருக்கும் கலர் தொலைக்காட்சி பெட்டி என்றனர். அதே போல ஒவ்வொரு வீட்டுக்கும் தி.மு.க. அவற்றை வழங்கியதும் மக்களுக்கு இலவச அறிவிப்புகளில் நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. ரூபாய்க்கு ஒரு படி அரிசி நியாய விலைக் கடைகளில் என்றதும் அனைவரும் ஓடிப்போய் அந்த அரிசியை வாங்கிச் செல்கின்றனர். கடைகளில் அவர்கள் அரிசியை அளக்கும் போது பத்து கிலோ எடை சரியாக அளப்பதில்லை. அவசரத்தில் எட்டு அல்லது அதற்கும் குறைவான எடைக்கே அரிசியை அளந்து நம் பைகளில் கொட்டிவிடுகிறார்கள். நமக்கும் சரிதான் பத்து ரூபாய்க்கு இவ்வளவு அரிசி கிடைத்ததே பெரிது என்று முகம் மலர வீடு வந்து விடுகிறோம்.
இந்த முறை மக்களுக்குக் குறிப்பாக பெண்மக்களுக்கு அடித்தது யோகம். ஒவ்வொரு குடும்பத்துப் பெண்ணுக்கும் ஒரு மிக்சி அல்லது கிரைண்டர் என்றார் கருணாநிதி. பொறியியல் கல்வி படிக்கும் மாணவர்களுக்குப் பிந்தங்கிய அல்லது மிகவும் பின்தங்கிய பிற்படுத்தப் பட்டோர் ஆகிய சமூக மாணவர்களுக்கு இலவச மடிக் கணினியாம். அடே அப்பா! சாதாரணமாக இருபத்தி ஐயாயிரம் ரூபாய் விலையில் பொறியியல் மாணவர்கள் வாங்கி வைத்திருக்கும் அந்த கணினி இனி இலவசமா? பரவாயில்லையே! இனி தமிழக மாணவர்களுக்கு யோகம் தான் என்ற வியப்பு ஏற்பட்டது. இந்த இலவசம் அறிவிப்பு வந்த உடனே கழக உடன்பிறப்புக்களுக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. அடடா! என்னே தமிழகத்தின் பொற்காலம். தமிழகத்தில் இலவச மழை வெள்ளமாக அல்ல, சுனாமியாக அல்லவா வந்து கொட்டப் போகிறது என்ற பூரிப்பு. கூட்டங்கள் தோறும் பெருமை பேச்சு. தொலைக் காட்சி ஊடகங்களில் முகம் காட்டும் அரசியல் வாதிகள் முடியுமா மற்றவர்களால் எத்தனை வகை இலவசங்கள் என்று பூரிக்கிறார்கள். எங்கள் இலவசங்களே இந்தத் தேர்தலில் வெற்றியைத் தரும் என்கிறார் ஒரு அமைச்சர்.
logic_magic
இதற்கிடையே ‘கூத்துக்கிடையே பீத்து வந்தது’ என்பார்களே அதுபோல ஒரு கூத்தாடி, திரைப்படங்களில் நடித்து பாமர மக்கள் மத்தியில் பெயர் வாங்கிவிட்ட ஒரு ஆளுக்கு ‘இதுதாண்டா சா¢யான சந்தர்ப்பம்’ தனது சொந்தப் பழியைத் தீர்த்துக் கொள்ள என்று விஜயகாந்த் மீதிருந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள களம் இறங்கி விட்டார். அவர் திருவாரூ¡¢ல் கருணாநிதி கலந்து கொண்ட கூட்டத்தில் பேசுகிறார், ‘தண்ணி மேல ஓடற கப்பலுக்குத் தாண்டா கேப்டன், தண்ணிலே மிதக்கிறவனுக்கு எதுக்குடா கேப்டன்னு பேரு’ என்கிறார். கூட்டத்தில் மந்திரிகள் அழகிரி, துரை முருகன், தயாநிதி மாறன் போன்றவர்கள் மட்டுமல்லாமல் முதலமைச்சர் பதவி வகிக்கும் கருணாநிதியும் இந்த நகைச்சுவையை (அல்லது தரமற்ற விமரிசனமா?) ரசித்து வயிறு குலுங்க சிரிக்கிறார்கள். அவர்கள் பாணியில் இதனைச் சொல்ல வேண்டுமென்றால், “அட கேடுகெட்ட தமிழகமே, உன் ரசனையும், தரமும் இத்தனை கீழாகப் போக வேண்டுமா? பாமரனும் சரி, உயர்ந்த பதவியில் இருப்பவனும் சரி, இப்படி கேடுகெட்டப் பேச்சை ரசித்து சிரிப்பதில் வருத்தமோ அவமானமோ இல்லையா?” என்று கேட்கத் தோன்றுகிறது. சரிதான், தேர்தல் என்றால் எப்போதும் இப்படித்தான், இதில் புதிதாக என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இல்லை, நாகாரிகத்தின் எல்லைக் கோட்டைத் தாண்டிவிட்ட அநாகரிகத்தின் உச்சம் இது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்ளே இருக்கிறார் ஒரு முன்னாள் மந்திரி. அவருடைய தேட்டையில் பங்கு பெற்ற பலர் இன்று ஆடம்பரமாக உலா வருகிறார்கள். எவராவது வாயைத் திறந்து விடாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்யப் படுகின்றன. ஆக மொத்தம் கவிஞர் கண்ணதாசன் தனது “வனவாசத்திலும்” “நானும் அரசியல் வாதிகளும்” போன்ற புத்தகங்களில் எழுதியிருப்பதைப் போல அடிப்படை இல்லாத கற்பனை கொள்கைகளிலும், வெறுப்பு, எதிர்ப்பு அரசியலிலுமே வளர்ந்து வந்திருக்கிற இந்த இயக்கங்களிடமிருந்த எந்த வகையான ஆக்க பூர்வ நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியும்?
ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று வாழையடி வாழையாக இவர்கள் குட்டி போட்டு வளர்ந்தாலும் அடிப்படையிலான வெறுப்புணர்ச்சியும், எதிர்ப்புணர்ச்சியும் காங்கிரசை அழிப்பதும், பிராமணர்களை எதிர்ப்பதும் என்பது தான். இந்தக் கொள்கை இவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கத் தொடங்கியதும் அதனையே இவர்கள் மிக உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சரி! தி.மு.க.வின் கதைதான் தெரிந்தது ஆயிற்றே. எம்.ஜி.ஆர். தொடங்கி ஜெயலலிதாவில் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க. வின் நிலைப்பாடு என்ன? தி.மு.க. மிக்சி அல்லது கிரைண்டர் என்றால் அத்தோடு மின்விசிறி ஒன்றும் இனாம் என்கிறார்கள். பொறியியல் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி என்றால், பதினொன்றாம் வகுப்புப் படிக்கும் மாணவர் முதல் அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரியில் படிக்கும் எல்லா துறை மாணவர்க்கும் கணினி இலவசம். 20 கிலோ அரிசி அட்டைதாரர்களுக்கு இலவசம், தாலிக்கு தங்கம் இலவசம், இன்னும் என்னென்னவோ? இப்படியே போய்க்கொண்டிருந்தால், திருமணமாகாத இளைஞர்களுக்கு புதிதாக ஏதாவது இலவசமாகக் கிடைக்குமோ என்னவோ தெரியவில்லை.
jcartoon
நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? இப்படி அள்ளி வீசப்படும் இலவசங்கள் எல்லாம் யார் வீட்டுப் பணம். இந்தக் கட்சிகள் கொள்ளை அடித்து வைத்திருக்கும் பணத்திலிருந்து கொடுக்கிறார்களா. இல்லையே! அரசாங்கம் மக்கள் நலப் பணிக்காகச் செலவு செய்ய வேண்டிய இந்தப் பணத்தை, கண்ணை மூடிக் கொண்டு வாரியிறைக்க இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இலவசங்கள் கொடுப்பதை தடுக்க முடியாது என்று ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வேறு அளித்திருக்கிறது. தேர்தல் அறிக்கை என்ற பெயரில் உங்களுக்கு எல்லாம் இலவசம் என்றால் அது லஞ்சம் கொடுப்பது ஆகாதா? இதை கேட்க தேர்தல் கமிஷனோ அல்லது நீதிமன்றங்களோ ஏன் முன்வருவதில்லை.
இப்படிக் கொடுக்கும் இலவசங்களால் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடுமா? மக்கள் பிரச்சினைகளின்றி வாழ்வார்களா. வேலையில்லா திண்டாட்டம் தீர்ந்து விடுமா? நாட்டில் புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டு விடுமா? உற்பத்தி பெருகி விடுமா? நாட்டில் பாலும் தேனும் பாய்ந்தோடுமா? நிச்சயமாக இல்லை. குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்பார்கள். இந்த இலவசங்கள் எத்தனை நாட்களுக்கு? இவர்கள் ஐந்து ஆண்டுகள் ஆளவேண்டுமென்பதற்காக மக்கள் வரிப்பணத்தை எடுத்து வாரி இறைத்து, “ஆற்றோடு போகிற தண்ணியை ஐயா குடி! அம்மா குடி!” என்று வீசுகிறார்களே, இதைத் தடுக்க வழியே இல்லையா? இந்த நாட்டில் நியாயம் உணர்ந்தவர்களே இல்லையா?
இந்தக் கும்பலோடு கும்பலாக காங்கிரஸ் கட்சி வேறு கூட்டுச் சேர்ந்து கொண்டு இலவசத்துக்கு இலவசமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு மத்திய அமைச்சர் வந்து இலவசங்கள் ‘கொடுக்க முடியும்’, அதற்கு போதிய நிதி வசதி இருக்கிறது என்று தூண்டிவிட்டுப் போகிறார். பொருளாதார நிபுணர்கள் இந்த மா நிலத்தின் பொருளாதார நிலைமை, வருமானம், செலவு இவை போக இதுபோன்ற இலவசங்களை வாரி இறைக்கப் போதிய நிதிவசதி உண்டா என்பதையெல்லாம் ஆராய மாட்டார்களா?
மக்கள் நல அரசு என்பது ஒரு சித்தாந்தம் உண்டு. அது எப்போது? இப்போது ஜப்பானில் நிகழ்ந்த பேரழிவு போன்ற நேரங்களில் மக்கள் ஒன்றுமே இல்லாமல் வெறுங்கையோடு தெருவில் நிற்கும் போது, இருக்க இடம், உடை, உணவு கொடுத்து அவர்களைக் குடியமர்த்துதல் ஒரு மக்கள் நல அரசின் கடமை. வேலை எதுவும் இல்லாமல் வீட்டில் தண்ட சோறு தின்று கொண்டு பெட்டிக் கடை வாயிலில் சிங்கிள் டீ கடனுக்கு வாங்கி உறிஞ்சிவிட்டு, ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு ஆற்றங்கரை அரசமரத்தடியில் அமர்ந்து பத்திரிக்கையொன்றை விரித்து வைத்துக் கொண்டு வீண்கதை பேசும் வீணர்கள் கூட்டத்துக்கு இலவசங்களைக் கொடுத்தால் என்ன விளைவுகள் ஏற்படும்.
dinamali_madhi_cartoon_tn_election_freebies
நன்றி: தினமணி ‘மதி கார்ட்டூன்’
இதையெல்லாம் ஒருவரும் கவனிப்பதாகத் தெரியவில்லை. இவர்களால்தான் இலவசங்களைத் தர முடியும். இந்த இலவசத் திட்டங்களைப் பார்த்து காப்பி அடித்தது மற்றோன்று. அவரிடம் நம்பகத் தன்மை கிடையாது. என்றெல்லாம் பேசுவது தான் இந்த தேர்தலில் பிரச்சாரம். நாட்டின் தேவை, பொருளாதார நிலை, ஊழல்களால் நாட்டின் செல்வம் கொள்ளை அடிக்கப்பட்டது, அரசாங்கப் பதவிகளில் இருந்து கொண்டு ஊரை அடித்து உலையில் போடுவது, நியாயம் தவறிய அரசு நிர்வாகம், கொள்ளைகளைக் காப்பாற்ற உரிய இடத்தில் தங்களுக்கு வேண்டியவர்களைப் பதவி அமர்த்துதல், இவற்றைப் பற்றி, படித்தவர்களும் சரி, அரசியல் வாதிகளும் சரி, அதிகாரிகளும் சரி, நம்மைப் போன்ற மக்களும் சரி கவலைப் படுவதாகத் தெரியவில்லை. ஐயகோ! தமிழ் நாடே, உன்னைப் பார்த்து நாடே சிரிக்கிறது. என்று மாறும் இந்த அவல நிலைமை? மாறுமா? மாறாதா? மாற வழி உண்டா. உண்டு என்றால் அது என்ன வழி? நல்ல உள்ளம் படைத்த நேர்மையாளர்கள் தயை கூர்ந்து இவற்றுக்கு விடையளியுங்கள்.

Thanks : http://www.tamilhindu.com

Saturday, March 5, 2011

திமுக-காங்கிரஸ் கூட்டணி ????????

சென்னை: திமுக- காங்கிரஸ் கட்சி இடையிலான கூட்டணி உடைந்துவிடாமல் தடுக்க கடைசி கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 7 ஆண்டு காலமாக உள்ள இந்தக் கூட்டணி தொடர் வெற்றிகளைப் பெற்று வந்தது. 2004 மக்களவைத் தேர்தல், 2006 சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 11 இடைத் தேர்தல்கள், 2009 மக்களவைத் தேர்தல் என இந்தக் கூட்டணியின் தொடர் வெற்றியால் அதிமுக தான் பெரிதும் நிலை குலைந்தது. தனது கட்சியின் வாக்குகளை வேகமாக இழுத்து வரும் விஜய்காந்துடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலைமைக்கும், அவருக்காக பல மாதங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டிய நிலைமைக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தள்ளப்பட்டார். கடைசியில் விஜய்காந்த் கேட்ட இடங்களைத் தந்து அவருடன் கூட்டணி அமைத்தார்.

திமுக- காங்கிரஸ் கூட்டணி என்பது சோனியா காந்தி- கருணாநிதி என்ற இரு தலைவர்களின் பரஸ்பர நம்பிக்கை மூலம் உருவாக்கப்பட்டு நிலைத்து நின்றது. ஆனால், இதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் உருவில் சிக்கல் வந்தது. 1960களில் விரட்டியடிக்கப்பட்ட காங்கிரஸை மீண்டும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மூலம் அரியணையில் அமர்த்த ராகுல் தி்ட்டம் போட, புள்ள எப்படியெல்லாம் திங்க் பண்ணுது என்று சோனியாவை உசுப்பி விட்டது காங்கிரசின் ஒரு பிரிவு.

ராகுலை கையில் போட்டுக் கொண்டு அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டினால் தான் கட்சியில் எதிர்காலம் உண்டு என்பதை உணர்ந்த காங்கிரஸ் தலைகள், ராகுல் போடும் இந்தத் திட்டம் நிச்சயம் பலிக்கும் என சோனியாவை நம்ப வைத்து, திமுகவுக்கு நெருக்கடிகளை ஆரம்பித்தன. இதற்கு உதவியாக வந்து சேர்ந்தது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம். இதை வைத்தே திமுகவை நமது வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என நினைத்து கூட்டணி ஆட்சி, அமைச்சர் பதவிகள், ஒருங்கிணைப்புக் குழு, 90 சீட்கள், கேட்கும் தொகுதிகள், குறைந்தபட்ச செயல் திட்டம் என்று ராகுல் காந்தி சொல்லி அனுப்பியதை திமுகவிடம் வந்து அடுக்கியது காங்கிரஸ் குழு.

திமுக உருவானதன் அடிப்படை நோக்கமே காங்கிரஸை ஒழித்துக் கட்டி மாநில நலன்களை பேணுவது தான் என்றாலும், அரசியல் நிர்பந்தங்கள் காரணமாக அந்தக் கட்சியுடன் ரொம்பவே உறவாடியது திமுக. காங்கிரஸ் வைத்து அதிகாரம், பதவிகளை அனுபவித்தது.. இப்போது காங்கிரஸ் தனது உண்மையான முகத்தைக் காட்ட, திக்கித் திணறிப் போயுள்ளது திமுக.

திமுகவை தனது டியூனுக்கு ஆட வைக்க முயலும் ராகுல் காந்தியிடம் பணிந்துவிட்டால் திமுகவின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்பது நிச்சயம் என்பதை லேட்டாக புரிந்து கொண்ட திமுக, இப்போது திருப்பித் தாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் தான் 55 இடங்கள் என்பதை 60 வரை தருவதாக தனது உயர்த்திய திமுக, கூட்டணி ஆட்சி உள்ளிட்ட பிற நிபந்தனைகளை எல்லாம் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் உள்ள குப்பைத் தொட்டியிலேயே போட்டுவிட்டு வருமாறு கூறிவிட்டது. ஆனால், இதை ஒப்புக் கொண்டால் அது ராகுல் காந்திக்கு ஏற்படும் தோல்வி என நினைக்கும் காங்கிரஸ், அப்ப 63 சீட் குடுங்க என்று கேம் ஆரம்பித்துள்ளது. அதாவது 55 இடங்கள் தருவதாக சொன்ன திமுகவிடம் 63 இடங்களை வாங்கிக் காட்டிவிட்டோம்.. இது தான் ராகுல்ஜி பார்முலாவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று சொல்லிக் கொண்டு ராகுலின் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டிக் கொள்ள காங்கிரஸ் கருதுகிறது.

ஆனால், இது போன்ற வேலையை காங்கிரஸ் இதை நிச்சயம் செய்யும் என்பதை முன் கூட்டியே அறிந்தததால் தான் அவர்களுடன் ஆலோசனை நடத்தாமலேயே பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 31, 10 தொகுதிகளை ஒதுக்கினார் முதல்வர் கருணாநிதி. தமிழக காங்கிரஸ் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்திக்க வந்தபோது, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 தொகுதிகளை ஒதுக்கிவிட்டே அவரை சந்திக்க வந்தார் கருணாநிதி.

இதன்மூலம் மிச்சம் இருப்பது 182 தொகுதிகள் தான். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 55 தருகிறேன் என்று கருணாநிதி கூற, ஹை கமாண்டிடம் பேசிவிட்டு வருவதாக சொல்லிவிட்டுப் போனார் ஆசாத். பின்னர் டெல்லியில் நடந்த சில சந்திப்புகள், டெல்ல-சென்னை இடையே நடந்த சில போன் கால் சம்பாஷணைகளத் தொடர்ந்து காங்கிரசுக்கு 60 சீட் தருவதாகவும், அத்தோடு இழுபறியை நிறுத்துமாறும் திமுக திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

ஆனால், திமுக எதிர்பார்த்தது போலவே 63 வேண்டும், அதுவும் இந்த 63ம் நாங்கள் சொல்லும் தொகுதிகளாக இருக்க வேண்டும், உடன்பாட்டில் கையெழுத்து போடும்போதே தொகுதிப் பெயர்களையும் வெளியிட வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது. இது சரிப்பட்டு வராது என்பதால் தான், நேற்று நள்ளிரவில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளைக் கேட்பதாகவும், அதுவும் எந்தெந்த தொகுதிகள் என்று அவர்களே முடிவு செய்யப் போவதாக சொல்வதாகவும், இது நியாயமில்லாத கோரிக்கை என்றும் அறிக்கை வெளியிட்டார்.

மேலும் இந்த விஷயத்தில் இரண்டில் ஒன்று பார்த்துவிடும் வகையில் இன்று கூடும் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இரு கட்சிகளின் நலம் விரும்பிகளும் நேற்று நள்ளிரவில் இருந்தே இரு தரப்பினரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். காங்கிரசுக்கு மேலும் ஒரு இடம் தரலாம் என்றும் அதை பாமகவிடம் தந்த 31ல் இருந்து வாங்கித் தரலாம் என்றும் திமுகவுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், இப்படி ஒரு நிலை வரலாம் என்பதை நேற்றே உணர்ந்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக பொதுக் குழு கூட்டத்தில் பேசுகையி்ல், எங்களுக்கு 32 இடங்கள் கிடைத்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன் என்று கூறி, தனது சீட்டை விட்டுத் தர முடியாது என்பதை தெளிவுபடுத்திவிட்டார்.

பாமக, விடுதலை சிறுத்தைகள் (10 இடங்கள்), கொங்குநாடு முன்னேற்றக் கழகம் (7 இடங்கள்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3 இடங்கள்), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (1 இடம்) ஆகியவற்றுக்கு ஒதுக்கியதுபோக, திமுகவுக்கு எஞ்சியுள்ளது 122 இடங்கள் மட்டுமே. இதில் பாமகவோ அல்லது வேறு கட்சியோ விட்டுக் கொடுக்க மறுத்தால் திமுக தான் தனது இடத்தை விட்டுத் தந்து காங்கிரசுக்கு கூடுதல் தொகுதியை தந்தாக வேண்டும்.

திமுக இதற்குத் தயாராக இல்லை. இதனால் இன்று மாலை நடக்கும் திமுக உயர் மட்டக் குழுக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் ஏதாவது ஏடாகூடமான முடிவை திமுக எடுத்து நம்மை நடுத்தெருவில் நிறுத்திவிடும் என்ற பயம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் அமைச்சர்கள் வயலார் ரவி, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், வாசன் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சனையில் மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி அல்லது சோனியா காந்தி இன்று நேரடியாக தலையிடுவர் என்று தெரிகிறது.

சீக்கல் தீரும்-பிரணாப்:

இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ்-திமுக கூட்டணி சிக்கல் தீர்க்கப்படும். காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தவும் தெரியும் அதை தீர்க்கவும் தெரியும் என்றார்.

கருணாநிதி முக்கிய ஆலோசனை:

இந் நிலையில் காங்கிரசிடமிருந்து சில சமாதான சிக்னல்கள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர்கள் ஸ்டாலின், அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன், மூத்த எம்பி டி.ஆர்.பாலு ஆகியோருடன் இன்று காலை முதல் அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

நன்றி : thatstamil