ஆஸ்கர் மூவிஸ் வழங்கும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படன் தான் மரியான் . நீண்ட இடைவெளிக்கு பின் ரகுமானும் , இயக்குனர் பரத் பாலாவும் இணைந்த படம் . வந்தே மாதரம் ஆல்பம் இயக்கிய பரத் பாலாதான் இயக்குனர் . பார்வதி மேனேன் கதாநாயகியாக நடித்துள்ளார் .
கதை :
ஒரு கடலோர கிராமத்தில் வசிக்கும் தனுஷ் , பார்வதி இவர்கள் காதலில் ஏற்படும் சிக்கல்களும் , அதற்காக தனுஷ் சூடான் நாட்டிற்கு வேலைக்கு செல்ல அங்கிருந்து மீண்டும் வரும் பொழுது சில தீவிரவாதிகளால் கடத்த படுகிறார் . அதன் பிறகு தனுஷ் தப்பித்தாரா , தனது காதலியை கரம் பிடித்தாரா என்பதுதான் கதை .
+ பாயின்ட் :
தனுஷின் நடிப்பு . வரவர அனைத்து படங்களிலும் தனுஷின் நடிப்பு மெருகு ஏறி வருகிறது . இதில் அவரின் உடல் மொழி அருமை .
கதாநாயகி பார்வதியின் அழகான நடிப்பு .
இருவரின் காதல் எபிசொட் .
A.R. ரஹ்மான் இசை படத்திற்கு மிக பெரிய பலம் .
பின்னணி இசையில் கலக்கி உள்ளார் . கிராமத்தில் நடக்கும் ஒரு சண்டைகாட்சியில் பின்னணி இசை பிரமாதமாக இருக்கும் . அது போல கிளைமாக்ஸ் காட்சியில் பின்னணி இசையில் பின்னி எடுத்து இருக்கிறார் .
பாடல்கள் ஏற்கனவே ஹிட் . அதிலும் நெஞ்சே எழு பாடல் படமாக்கபட்ட விதம் அருமை .
ஒளிபதிவு கண்ணை உறுத்தாத வண்ணம் உள்ளது .
- பாயின்ட் :
ஆரம்பத்தில் வரும் தனுஷின் காதல் காட்சிகள் நீட்டி முழங்கபட்டு இருக்கு .
இருவர்குள்ளும் காதல் வருவது மிகவும் செயற்கையாக உள்ளது ( ரவுடியை அடிச்சா காதல் வரும்னு எவன் கண்டுபிடிச்சான்னு தெரியல .)
ஹிட் ஆன பாடல்கள் திரையில் சில சரியில்லை .
மீனவர் பிரச்சனை பற்றிய படம்னு பேப்பர்ல சொன்னாங்க ஆனால் அது பற்றி இதில் மூச்சு விட வில்லை .
தீவிரவாதிங்க என்னமோ லோக்கல் ரவுடி போல உள்ளனர் .
திவிரவாதிங்களிடம் மொத்தமே 3 அல்லது 4 ஜீப் தான் இருக்கு போல , பாவம் எதிர்கட்சி தீவிரவாதியோ ?
படத்தின் ஆரம்பம் மிக மெதுவாக உள்ளது .
ஆனந்த விகடன் மார்க் : 42
குமுதம் : பார்க்கலாம்
ராஜபாட்டை மார்க் : 5/10
குறிப்பு : சிங்கம் 2 நன்றாக ஓடுவதால் மரியான் ஓடுவது கொஞ்சம் சிக்கல்தான் . ஆனாலும் படம் பார்க்கும் வகையில் தான் உள்ளது .












