> என் ராஜபாட்டை

.....

.

Friday, July 19, 2013

மரியான் : விமர்சனம்








ஆஸ்கர் மூவிஸ் வழங்கும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படன் தான் மரியான் . நீண்ட இடைவெளிக்கு பின் ரகுமானும் , இயக்குனர் பரத் பாலாவும் இணைந்த படம் . வந்தே மாதரம் ஆல்பம் இயக்கிய பரத் பாலாதான் இயக்குனர் . பார்வதி மேனேன் கதாநாயகியாக நடித்துள்ளார் .

கதை :

ஒரு கடலோர கிராமத்தில் வசிக்கும் தனுஷ் , பார்வதி இவர்கள் காதலில் ஏற்படும் சிக்கல்களும் , அதற்காக தனுஷ் சூடான் நாட்டிற்கு வேலைக்கு செல்ல அங்கிருந்து மீண்டும் வரும் பொழுது சில தீவிரவாதிகளால் கடத்த படுகிறார் . அதன் பிறகு தனுஷ் தப்பித்தாரா , தனது காதலியை கரம் பிடித்தாரா என்பதுதான் கதை .


+ பாயின்ட் :

தனுஷின் நடிப்பு . வரவர அனைத்து படங்களிலும்  தனுஷின் நடிப்பு மெருகு ஏறி வருகிறது . இதில் அவரின் உடல் மொழி அருமை .

கதாநாயகி பார்வதியின் அழகான நடிப்பு .

இருவரின் காதல் எபிசொட் .

A.R. ரஹ்மான் இசை படத்திற்கு மிக பெரிய பலம் .

பின்னணி இசையில் கலக்கி உள்ளார் . கிராமத்தில் நடக்கும் ஒரு சண்டைகாட்சியில் பின்னணி இசை பிரமாதமாக இருக்கும் . அது போல கிளைமாக்ஸ் காட்சியில் பின்னணி இசையில் பின்னி எடுத்து இருக்கிறார் .

பாடல்கள் ஏற்கனவே ஹிட் . அதிலும் நெஞ்சே எழு பாடல் படமாக்கபட்ட விதம் அருமை .

ஒளிபதிவு கண்ணை உறுத்தாத வண்ணம் உள்ளது .


- பாயின்ட் :

ஆரம்பத்தில் வரும் தனுஷின் காதல் காட்சிகள் நீட்டி முழங்கபட்டு இருக்கு .

இருவர்குள்ளும் காதல் வருவது மிகவும் செயற்கையாக உள்ளது ( ரவுடியை அடிச்சா காதல் வரும்னு எவன் கண்டுபிடிச்சான்னு தெரியல .)

ஹிட் ஆன பாடல்கள் திரையில் சில சரியில்லை .

மீனவர் பிரச்சனை பற்றிய படம்னு பேப்பர்ல சொன்னாங்க ஆனால் அது பற்றி இதில் மூச்சு விட வில்லை .

தீவிரவாதிங்க என்னமோ லோக்கல் ரவுடி போல உள்ளனர் .

திவிரவாதிங்களிடம் மொத்தமே 3 அல்லது 4 ஜீப் தான் இருக்கு போல , பாவம் எதிர்கட்சி தீவிரவாதியோ ?

படத்தின் ஆரம்பம் மிக மெதுவாக உள்ளது .


ஆனந்த விகடன் மார்க் : 42

குமுதம் : பார்க்கலாம் 

ராஜபாட்டை மார்க் : 5/10

குறிப்பு : சிங்கம் 2  நன்றாக ஓடுவதால் மரியான் ஓடுவது கொஞ்சம் சிக்கல்தான் . ஆனாலும் படம் பார்க்கும் வகையில் தான் உள்ளது .


Wednesday, July 17, 2013

விஜய் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாமா ?





தமிழ் சினிமா உலகில் ரஜினி , கமலுக்கு பிறகு அதிக ரசிகர்களையும் , அதிக எதிர்பார்ப்பையும் , அதிக வசூலையும் கொண்ட நடிகர்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜித் தான் . விஜயின் கடந்த படம் துப்பாக்கி 100 கோடியை தாண்டி வசூல் செய்தததாக சொல்கின்றனர் . இந்நிலையில் அவரின் அடுத்த படம் தலைவா பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது .

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இயைமைத்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். இவர்களுடன், சத்யராஜ், சந்தானம், ராகினி நந்த்வானி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். படத்தின் வெளியீட்டு உரிமையை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

படபிடிப்பு முடிந்து சென்சார் சென்ற படத்தை பார்த்த குழுவினர் , படம் அருமையாக உள்ளது என்றும் , இது அனைவரும் குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் என்றும் சொல்லி " யூ " சான்றிதழ் வழங்கி உள்ளனர் . இதனால் பட குழுவினர் மிகவும் சந்தோஷமாக உள்ளனர் .


குறிப்பு : படம் ஆகஸ்டு 15  அன்று வெளியிடலாம் என எதிர்பார்க்க படுகிறது .


இதையும் படிக்கலாமே :


Tuesday, July 16, 2013

FACEBOOK பிரபலங்கள்





FACEBOOK இல் கலக்கலாக எழுதும் சில நண்பர்களின் status உங்களுக்காக இங்கே . நீங்களும் படித்து ரசியுங்கள் .


அப்ப கழுதை கெட்டா குட்டி செவரு...
இப்ப கழுதை கெட்டா பேஸ்புக் செவரு ....
இனிய காலை வணக்கம் ...
 
 
 ==============================================
 
நாம எந்த ஊருக்கு போறோமோ...அந்த பஸ் ஸ்டாப்க்கு எதிர்த்த பஸ் ஸ்டாப் போய் நின்னம்னா
..நம்ம ஊருக்கு போற பஸ் சீக்கிரம் வந்துரும்
#அவதானிப்பு #
 
 
 
 ==============================================
 
சிலருக்கு எல்லா நாட்களும் முதல் போராட்டம் பஸ்ல சீட்டு பிடிக்கிறதுல தான் ஆரம்பிக்குது.
 
 
 ==============================================
 
படித்ததில் பிடித்தது :

ஒரு பெண்ணின் சாமர்த்தியம்

ஒரு ஹெலிகாப்டரில் இருந்து வந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு 9 ஆண்களும், 1 பெண்ணும் தொங்கிக் கொண்டிருந்தனர்.

இதில் யாராவது ஒருவர் கையிறை விட்டால் மட்டுமே ஹெலிகாப்டர் மேற்கொண்டு பறக்க முடியும். இல்லை என்றால் கயிறு அறுந்துவிடும்.

இந்த நிலையில், ஹெலிகாப்டரில் இருந்து யாராவது ஒருவர் தனது உயிரை தியாகம் செய்யுமாறு கோரிக்கை குரல் வருகிறது.

ஆனால், ஆண்களில் யாருமே உயிரை தியாகம் செய்ய முன்வரவில்லை.

அந்த சமயத்தில், அவர்களைக் காப்பாற்ற அந்த பெண் தானே முன் வந்து கயிறை விடுவதாகக் கூறுகிறாள்.

அவள் கயிறை விடுவதற்கு முன்பு, என் குடும்பத்துக்காக நிறைய தியாகம் செய்துள்ளேன். அதுபோல் இன்று உங்களுக்காக இந்த தியாகத்தைச் செய்கிறேன் என்று கூறினாள். இதைக் கேட்ட அனைத்து ஆண்களும், தங்களை மறந்து கைதட்டினர்.

பிறகென்ன... அந்த பெண் மட்டும் மீட்கப்பட்டு தனது இடத்தை அடைந்தாள்.
 
 
 
 ==============================================
 
ஆண்கள் பொய் சொல்லமாட்டார்கள்... பெண்கள் அநாவசிய கேள்விகள் நிறைய கேள்விகள் கேட்காமல் இருந்தால்...



 
 ==============================================


நமக்கு நன்கு தெரிந்த விஷயத்தில்

ஒருத்தன் குப்பையை வச்சுக்கிட்டு
ஆட்டிக்கிட்டு இருந்தான்னா

அவசியமில்லாமல்

நாம நம்ம பார்வையால கூட அலட்சியப்படுத்திடாம

ஜாக்கிரதையா இருக்கணும்



 
 ==============================================

#பள்ளிகாலத்தில் வரும் முதல் காதலை மட்டும் வாழ்வில் மறக்கவே முடியாது.
.
.
.
.
.
.
இப்பவாச்சும் விஷயம் தெரிஞ்சா பொண்ணோட அண்ணன்,அப்பா தான் அடிப்பாங்கே,அப்போ ஸ்கூலில் விஷயம் தெரிஞ்சா போறவாற வாத்தியார் எல்லாம் போட்டு வெளுப்பாங்கே :-(


 
 ==============================================
 
 
மஞ்சள் நீராட்டு நிகழ்வுகளுக்கு...

#மாசி மாசம் ஆளான பொண்ணு..

திருமண நிகழ்வுகளுக்கு...

#நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்...

வரவேற்பு நிகழ்வுகளுக்கு..

#மருமகளே மருமகளே வாராய்..

இந்த வரிசையில...

எழவு வீட்டுக்கு...

555 படத்துல கருத்தா ஒரு பாட்டு வெச்சிருக்காங்க..

#என்ன பெத்த ராசா புட்டுக்கினு பொய்ட்ட...
 
 
 
 ==============================================
 
பெட்ரோல் விலை ஏழைகளை
பெரிதும் பாதிக்கும்-ஜெ

அடுத்து மலிவுவிலை பெட்ரோல்
ஃபங்க் தொறந்தா நல்லாத்தான்
இருக்கும்.
 
 
 
 ==============================================
 
பனிவுடனும், அன்புடனும் நடந்துக்கொள்வது எந்த காலத்திற்கும் நன்று....

அட கருத்தெல்லாம் ஒன்னுமில்ல....

## காலையில் காலண்டர் கிழிக்கையில் கண்ணில் பட்டது...!


 
 ==============================================
 

மிஸ்டு கால் கொடுப்பதில்
இந்தியாவுக்கு 2வது இடம்.

# இந்த வெற்றியை பெண்களுக்கு சமர்ப்பிபோம். ;)
 
 

இதையும் படிக்கலாமே ?

 

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்..

 

 
 

Friday, July 12, 2013

சூர்யா - கார்த்தி மோதல் , நடந்தது என்ன ?



முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி இருவரும் அண்ணன் - தம்பி என்பது ஊரறிந்த விஷயம். இருவருமே சினிமாவில் கொடிகட்டிப் பறந்தாலும், இருவருக்கும் சண்டை, சச்சரவு ஏற்பட்டது கிடையாது.

இருவருமே தனக்கென தனி பாதையை ஏற்படுத்திக் கொண்டு அதன் வழியில் பயணித்து வருகின்றனர். ஆனால், யார் கண்பட்டதோ தெரியவில்லை. சமீப காலமாக இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள்.

சூர்யா - கார்த்தியின் உறவுக்காரரான ஞானவேல்ராஜா 'ஸ்டுடியோ க்ரீன்' என்னும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் படங்களை மட்டுமே நேரடியாகத் தயாரிக்கிறது. மற்ற படங்களை வாங்கி வெளியிடுகிறார்கள்.

அண்ணன் - தம்பியாக இருந்தாலும், சூர்யாவைவிட கார்த்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தருகிறாராம் ஞானவேல்ராஜா. குறிப்பாக, சூர்யாவைத் தேடி வரும் வாய்ப்புகளை கார்த்திற்கு மாற்றி விடுகிறார்களாம்.

வெங்கட்பிரபு முதலில் சூர்யாவின் தேதிகள் கேட்டு தான் சென்றார். ஆனால், தற்போது கார்த்தியை வைத்து 'பிரியாணி' சமைத்து வருகிறார். அதுபோலவே ராஜேஷும் சூர்யா தேதிகள் கேட்டார். தற்போது கார்த்தியை வைத்து 'ஆல் இன் ஆல் அழகுராஜா' இயக்கி வருகிறார்.

'சிங்கம்-2' முடிந்த கையோடு ஹரியை வளைத்துப் போட்டு விட்டார்கள். ஹரி அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி தான் நாயகன். இப்படி தனக்கு வரும் வாய்ப்புகள் பறிபோவதைக் கண்டு வருத்தத்தில் இருக்கிறாராம் சூர்யா.

வாய்ப்புகள் பறிபோனாலும் பரவாயில்லை, திறமையான சில இயக்குநர்களின் படங்களில் நடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் மனம்வெதும்பிப் புலம்புகிறாராம் சூர்யா.

இதை இப்படியே விட்டால் நன்றாக இருக்காது என்று கருதித்தான், சொந்தமாகவே ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார் சூர்யா. D - Diya, D - Dev என தனது இரண்டு குழந்தைகளின் முதல் எழுத்தையும் வைத்து '2D Entertainment' என்று பெயரிட்டு இருக்கிறார்.

சினிமா தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்த கையோடு, தான் நடித்த 'சிங்கம்-2' படத்தை பெரும்பாலான இடங்களில் சொந்தமாகவே ரிலீஸ் செய்திருக்கிறார் சூர்யா.

தற்போது 'சிங்கம்-2' படத்திற்கு செய்த விளம்பரத்தைப் பார்த்து, தான் நடிக்கும் 'பிரியாணி' படத்துக்கும் அதுபோலவே பப்ளிசிட்டி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம் கார்த்தி.


நன்றி : விகடன் 

Saturday, July 6, 2013

சன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி




கடந்தமுறை ஜெ. முதல்வராக இருந்த போதே அரசு கேபிள் கொண்டு வந்து மூலைமுடுக்கேல்லாம் அரசு கேபிள் வர முயர்சி செய்தார், ஆனால் முடியவில்லை. பின் வந்த கருணாநிதி அந்த திட்டதையே முடக்கிவைத்தார்.

2011 தேர்தலில் ஜெ. அமோக வெற்றி வெற்று ஆட்சி அமைத்ததும் அந்த திட்டத்திற்க்கு உயிர் குடுத்தார். அரசு கேபிள் நன்றாக செயல்பட துவங்கியது. தமிழ் நாடு முழுவதும் ஓளிபரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டது, மக்களும் ஆர்வமுடன் சேர்ந்தனர்.

ஆனால் அரசு கேபிளில் சன் நெட் ஓர்க் சேனல்கள் தெரியாது போனதால் மக்களிடம் பெரிய அதிர்ச்சி எற்ப்பட்டது. தமிழகத்தில் அசைக்க முடியாத வளர்ச்சி பெற்று உள்ளது சன் டி.வி. குடும்ப பெண்களின் முக்கிய பொழுதுபோக்கே சன் டி.வி சீரியல்கள் என்றால் அது மிகையல்ல.

சன் டி.வி இல்லாதது அரசு கேபிள்க்கு பெரிய அடியாக இருகின்றது. அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் மற்ற கட்டண சேனல்களான STAR SPORTS, TEN SOPRTS, SONY, DISCOVERY, ANIMAL PLANET, SONY MAX, AXN, HBO, ESPN போன்ற முன்னனி நிருவனங்கள் தங்கள் சேனலை ஒளிப்பரப்ப அனுமதி தந்தன. ஆனால் சன் டி.வி பிடிவாதமாக மறுத்து வருகின்றது.

சன் டி.விக்கு செக் வைக்கும் விதமாக அதை அரசுடமை ஆக்கிவிடலாம் என ஜெ . எண்னுகின்றார். அப்ப்டி செய்யும் பட்சத்தில் சன் டி.வியை அடக்கி வைத்த மாதிரியும் இருக்கும், அரசு கேபிள்லும் நன்றாக வரும் என எண்ணுகின்றார். அப்படி செய்தால் சன் நிருவாகம் வழக்கு தொடரும் அபாயம் உள்ளது. இதற்க்கும் ஒரு வழிவைத்துள்ளார் ஜெ.

முன்பு இந்திராகாந்தி தனியார் விமானங்களை அரசுடமை ஆக்கினார், நேரு கூட தனியார் வங்கிகளை அரசுடமை ஆக்கினார். இந்த வாதங்களை முன் வைத்து வழக்கில் வெற்றி பெறலாம் என ஜெ. நினைக்கிறார். இந்த விவகாரம் மாறன் குருப்க்கு தெரியவந்ததால்தான் இப்போது சன் டி.வியில் அர்சு பற்றி அதிகமாக விமர்சனம் செய்து செய்திகள் வருவதில்லை.

சன் டி.வி அரசுடமை ஆகுமா? இல்லையா? என இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.




இது போல இன்னும் பல அரசுடமை ஆக்கும் சீன்கள் நடக்கும் என நமது DND நிருபர் தெரிவிக்கின்றார்.

DND பற்றி தெரியாதவர்களுக்கு “DUPAKKUR NEWS DEVELOPERS
உரிமை : ராசா, ராசா (ராக்கெட் ராசா)

இது ஒரு மீள் பதிவு