> என் ராஜபாட்டை : இந்த மாத SUPER BLOGGER விருது

.....

.

Monday, October 10, 2011

இந்த மாத SUPER BLOGGER விருது


பதிவுலகில் அடியடுத்து வைத்த நாள் முதல் இன்று வரை தனது எழுத்துகளால் அனைவரையும் கட்டி போடும் அருமையான பதிவர் இவர் . இவரது எழுத்து நடை , நகைசுவை உணர்வு , சமுகத்தின் மேல் இவருக்கு உள்ள அக்கறை இவற்றால் இவர் தொடர்ந்து தமிழ்மணத்தில் முதலிடத்தில் இருக்கிறார் . 

தனது பதிவுகள் மட்டுமே அதிக வாக்கு பெற்று முன்னிலை பெறுவதை விரும்பாமல் , 18 வாக்குக்கு மேல் தமிழ்மணத்தில் போடவேண்டாம் என தானே விரும்பி ஓட்டை வேண்டாம் என்றது பலரின் பாராட்டை பெற்றது .

சில பதிவுகள் ஆபாசமாக இருகின்றன என குற்றாட்டுகள் இருந்தாலும் இவருக்கு பெண்கள் மத்தியில் ஆதரவு அதிகம் . பதிவுலகில் நண்பர்களும் அதிகம் . அப்படி பட்ட பதிவர்தான்          "   நாற்று  "  நிரூன்.

அவருக்கு இந்த விருதை அளிப்பதில் ராஜபாட்டை பெருமை அடைகிறது .

45 comments:

 1. ரைட்டு,,, வாழ்த்துக்கள் சகோ நிரூபன்

  ReplyDelete
 2. பல தலைப்புளை எடுத்துக் கொண்டு அலசும் நிரூபன் பாராட்டுக்குறியவர். நகைச்சுவையும் அவசியமே...!

  ReplyDelete
 3. நாற்று நிரூபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்


  'இந்த பதிவை காதலிக்கதவர்களும் படிக்கலாம் '  இது என் இன்றைய பதிவு

  ReplyDelete
 4. உண்மைதான்..அலெக்ஸாவில் வெகுவேகமாக முன்னேறியவர்.

  ReplyDelete
 5. விருதுக்கே விருது குடுத்து இருக்கீங்க ஹா ஹா ஹா வாழ்த்துக்கள் நிரூபன்

  ReplyDelete
 6. அன்பரே, ஒரு க்ரூப்பை உருவாக்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் ஆகா ஒகோ என்று புகழ்ந்து தள்ளும் மனப்பான்மையில் இருந்து
  வெளியே வாருங்கள்

  ReplyDelete
 7. எழுத்து நடை , நகைசுவை உணர்வு , சமுகத்தின் மேல் இவருக்கு உள்ள அக்கறை இவற்றால் இவர் தொடர்ந்து தமிழ்மணத்தில் முதலிடத்தில் இருக்கிறார் .

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. நிரூபனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் ராஜா.:)

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் உங்களுக்கும் , நிருபனுக்கும்..

  ReplyDelete
 10. கொடுத்தவருக்கு வாழ்த்துகளும் வாங்கியவருக்குப் பாராட்டுகளும்!

  ReplyDelete
 11. //
  தனது பதிவுகள் மட்டுமே அதிக வாக்கு பெற்று முன்னிலை பெறுவதை விரும்பாமல் , 18 வாக்குக்கு மேல் தமிழ்மணத்தில் போடவேண்டாம் என தானே விரும்பி ஓட்டை வேண்டாம் என்றது பலரின் பாராட்டை பெற்றது///

  அரசியல் அரசியல்

  ReplyDelete
 12. சரியான தேர்வு...

  வாழ்த்துக்கள்...
  விருது கெர்டுத்த உங்களுக்கும்..
  விருது பெற்ற நிருபனுக்கும்...

  ReplyDelete
 13. தகுந்தவருக்கு தகுந்த வேளையில் கொடுக்கப்படும் விருது இது என்பதில், நாஞ்சில் மனோ வலைத்தளம் பெருமை கொள்கிறது, வாழ்த்தையும் தெரிவிக்கிறது....

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள்
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

  ReplyDelete
 15. நிருபனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. தகுதியான நபருக்கு கிடைத்த விருது

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் நிரு...

  ReplyDelete
 18. இருக்கிற கூட்டத்துக்கு ஒரு விருதெல்லாம் பத்தாது.
  சேர்த்து கொடுங்க! Top 10 மாதிரி.

  ReplyDelete
 19. நிருபனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. நிருபனுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. சரியான நபருக்கு தான் சென்றிருக்கிறது... இவ்வளவு வேலை பளுவிலும் பலரின் தொலைந்து போன பதிவை தோண்டி எடுத்துக் கொடுப்பதையும் குறிப்பிடுகிறேன்...

  ReplyDelete
 22. நீருபனுக்கு அண்ணனுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 23. நிருபனுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 24. புதிய பதிவர்களை தினமும் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு புதிய வாசகர் வட்டங்களை உருவாக்கும் இவரது பணிக்கு பல விருதுகள் தரலாம்!

  ReplyDelete
 25. நண்பர் நிரூபனுக்கு நல்வாழ்த்துக்கள்... சரியான பதிவரை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. இனிய காலை வணக்கம் நண்பா.
  தேகமெல்லாம் புல்லரிக்கிறது, ஆனாலும் விருது வாங்குமளவிற்கு நான் ஏதும் சாதித்தேனா என்பது கேள்விக் குறி!
  ஏதோ என் மனதில் தோன்றியதை எழுதுகின்றேன், விருது ட்ரேங் என்பவற்றை மனதில் வைத்து எழுதுவது கிடையாது.
  நான் வாழும் சமூகத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் நிலை, என் சமூகத்தில் வெளி வராத விடயங்கள், இவை எல்லாவற்றையும் தாண்டி நண்பர்களின் தொடர்புகள் மூலமான தமிழக சம கால அரசியல் அலசல்கள்
  இவற்றினை என்னால் முடிந்தளவில் எழுதுகின்றேன்.

  விருது தந்து மெய்சிலிர்க்க வைச்சிட்டீங்க.
  மிக்க நன்றி நண்பா.

  விருதிற்காக நான் எழுதவில்லை என்பதனையும் இங்கே குறிப்பிடுவதில் அகம் மகிழ்கின்றேன் நண்பா.

  ReplyDelete
 27. சமுகத்தின் மேல் இவருக்கு உள்ள அக்கறை இவற்றால் இவர் தொடர்ந்து தமிழ்மணத்தில் முதலிடத்தில் இருக்கிறார் . //

  அண்ணே...ஏன் இந்த வம்பு,
  எனக்குத் தான் தமிழ்மணத்தில் ட்ரேங்கே கிடையாதே..
  இதில உள் குத்து எதுவும் இல்லையே.

  ஹே...ஹே..
  யோ நல்லா இருக்கிற என் ப்ளாக்கில நம்பர் ஒன் அது இது என்று சொல்லி கலவரத்தை உண்டாக்கிட வேணாம்யா

  நான் எப்பவுமே சாதா பதிவர்! சாதா ஆள் தான்யா

  ReplyDelete
 28. கருத்துரை வழங்கிய, வாழ்த்துக்கள் மூலம் என்னை மேலும் மேலும் சிறப்பாக எழுதத் தூண்டிய அத்தனை உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 29. சமுத்ரா said... [Reply to comment]
  அன்பரே, ஒரு க்ரூப்பை உருவாக்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் ஆகா ஒகோ என்று புகழ்ந்து தள்ளும் மனப்பான்மையில் இருந்து
  வெளியே வாருங்கள்//

  ஏன்னே...நான் ஏதோ விருது விரும்பி கேட்டு கொடுக்கிற மாதிரி பீலா வுடுறீங்க;-)))

  ReplyDelete
 30. ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் said... [Reply to comment]
  //
  தனது பதிவுகள் மட்டுமே அதிக வாக்கு பெற்று முன்னிலை பெறுவதை விரும்பாமல் , 18 வாக்குக்கு மேல் தமிழ்மணத்தில் போடவேண்டாம் என தானே விரும்பி ஓட்டை வேண்டாம் என்றது பலரின் பாராட்டை பெற்றது///

  அரசியல் அரசியல்//

  கிழிஞ்சுது போங்க.
  எங்க போனாலும் என்னையை வாரித் தூற்ற வேண்டும் என்பதில குறியா இருக்கிறீங்களே.

  உங்களின் இந்த குணத்தை ரசிக்கிறேன்.
  தொடருங்கள்.

  ஆமா நீங்க எல்லாம் என்னையை தூற்றி கமெண்ட் எழுதவா ப்ளாக் தொடங்கினீங்க.

  சும்மா ஒரு டவுட்டு

  ReplyDelete
 31. நிரூபனுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 32. தகுதி வாய்ந்தவருக்கு வழங்கப்பட்ட தரமான விருது.வாழ்த்துக்கள் நிரூ.

  ReplyDelete
 33. அட நிரூபன் பாஸுக்கா விருது வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
 34. நிருபனுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 35. ennku eppo kidaikkum...?!!!! hi..hi..hi..!!!

  ReplyDelete
 36. விருது வழங்கிய உங்களுக்கும் விருதைப் பெற்றும் தன்னடக்கத்துடன் இருக்கும் நிரூபன் சாருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 37. @நிரூபன்
  வாழ்த்து நிரூபனுக்னு....

  பாராட்டுக்கள்..அந்த விருதை வழங்கிய நல்ல உள்ளத்திற்கு

  ReplyDelete
 38. வணக்கம் பாஸ்
  சக பதிவருக்கு விருது கொடுத்த நீங்கள் உண்மையில் "ராஜபாட்டை"தான்

  நிரூபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 39. வாழ்த்துக்கள் நிருபன் அண்ணா...

  ReplyDelete
 40. //ஏன்னே...நான் ஏதோ விருது விரும்பி கேட்டு கொடுக்கிற மாதிரி பீலா வுடுறீங்க;-))) //Mr.நிரூபன், நீங்கள் தமிழில் சிறப்பாக எழுதி தேசிய விருது வாங்குங்கள்.அப்போது மனமுவந்து பாராட்டுகிறேன்.. எல்லாரையும் போல ஜால்ரா அடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...