> என் ராஜபாட்டை : 2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?

.....

.

Thursday, December 22, 2011

2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?



2011 ஆண்டு முடிய இன்னும் சில தினங்களே உள்ளன. இந்த வருடத்தில் பல திரைபட்ங்கள் வந்தன. எதிர்பார்க்காத சில படங்கள் வெற்றிபெற, மிகவும் எதிர்பார்க்க பட்ட படங்கள் மன்னைகவ்வியது. வருடத்தில் ஆரம்பத்தில் எதிர்பார்க்காத வெற்றி என்றால் அது சிறுத்தை படம் பெற்ற வெற்றிதான். காவலன் நன்றாக ஓடியது.

பாடல் பிரபலம் ஆனாலும் எதிர்பார்த்த வெற்றி இல்லாமல் போனது ஈசன். சத்திமின்றி சம்பாதித்து கொடுத்தது தூங்கா நகரம். சில மாதங்களுக்கு முன் வந்து சக்கைபோடு போட்டது “தல”யின் மங்காத்தா. பின்புவந்த விஜயின் “வேலாயுதம்” சூர்யாவின் “7 ஆம் அறிவு” இரண்டும் வெற்றிகொடினாட்டியது.
சிம்புவின் ஓஸ்தி , வானம் போலவே ஆட்டம் கண்டது. தனுஷின் “மயக்கம் என்ன..” லாப-நஷ்டமின்றி போனது. பாலாவின் “அவன்-இவன்” தோற்றாலும் விஷால் நடிப்பு பேசப்பட்டது. ஆனால் அடுத்து வந்த “வெடி” புஃஸ்வாணம் ஆனது தனிகதை.

கீழே சில படங்கள் உள்ளன. உங்களுக்கு பிடித்த படம் எது என்பதை sidebar இல் உள்ள poll box இல் ஓட்டு போடவும். நீங்கள் விரும்பும் படம் இதில் இல்லை எனில் பின்னுடத்தில் குறிப்பிடவும்.

  1. மங்காத்தா
  2. வேலாயுதம்
  3. 7 ஆம் அறிவு
  4. தூங்கா நகரம்
  5. சிறுத்தை
  6. காவலன்
  7. தெய்வதிருமகள்
  8. பாஸ் (எ) பாஸ்கரன்
  9. யுத்தம் செய்
  10. எங்கேயும் எப்போதும்

25 comments:

  1. இந்த போல் லிஸ்ட்ல கில்மா படம் இல்லையே என வருத்தப்படுகிறார் ஒரு பிரபல பதிவர்..ஹீ.ஹீ..

    ReplyDelete
  2. முயற்சிக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. இதனால யாருக்கு என்ன பயன் சொல்லுய்யா ஹி ஹி...!!!

    ReplyDelete
  4. அருமை. தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை எங்கே சகோ.?

    ReplyDelete
  5. என்னைப் பொறுத்தவரை என்னை ஆழமாய் இழுத்தது...

    தெய்வத்திருமகள்..

    எங்கேயும் எப்போதும் தான்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

    ReplyDelete
  6. பாஸ் ...கம்மென் பாக்ஸ் தனி விண்டோ ஓபன் ஆகுற
    மாதிரி வைய்ங்க....

    ReplyDelete
  7. பேஜ் புல்-லா லோடு ஆகுது ...ரொம்ப சிரமமா இருக்கு

    ReplyDelete
  8. இந்த லிஸ்டில் இந்த ஆண்டின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சித்திரமான பொன்னர் சங்கர் இல்லாததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.ஹி...ஹி....

    ReplyDelete
  9. இதுல என்ன கருத்தைங்க சொல்றது.அதான் காவலனுக்கு ஓட்டுப்போட்டுத்தள்ளியிருக்காய்ங்களே..

    ReplyDelete
  10. எது சிறந்த படம்னா.. பக்க பட்டையிலிருக்கிற ராஜபாட்டையோட படத்தான் சொல்வேன்..!!!

    கணிப்பொறி ஆசிரியர் அல்லவா? அதான் கணிப்பு எடுக்கிறீர்களோ...ஹா..ஹா...!!!

    ReplyDelete
  11. இதுல பாஸ் எ பாஸ்கரன் செப்டம்பர் 2010 வந்த படம் பாஸ்

    ReplyDelete
  12. எனக்குச் சம்பந்தமேயில்லாத விஷயம்!

    ReplyDelete
  13. வாகைசூடவான்னு ஒரு படம் இருக்கு ராஜா,ஆடுகளம் எங்கே?

    ReplyDelete
  14. 7 ஆம் அறிவு
    தெய்வதிருமகள்
    மங்காத்தா
    வேலாயுதம்
    பாஸ் (எ) பாஸ்கரன்

    தூங்கா நகரம்
    சிறுத்தை
    காவலன்


    யுத்தம் செய்
    எங்கேயும் எப்போதும்

    ReplyDelete
  15. "எங்கேயும் எப்போதும்" தான் சிறந்த படம் அன்பரே

    ReplyDelete
  16. ஒரு ஓட்டுக்கு எவ்வளவுண்ணே கொடுப்பீங்க?

    ReplyDelete
  17. என்னோட சாய்ஸ்:

    இரசனை வரிசை :
    1.வாகை சூட வா
    2.ஆடுகளம்
    3.மயக்கம் என்ன
    4.எங்கேயும் எப்போதும்
    5.தெய்வதிருமகள்

    பொழுதுபோக்கு வரிசை:
    1.மங்காத்தா
    2.கோ
    3.காவலன்
    4.காஞ்சனா
    5.மௌனகுரு

    கண்டுகொள்ளபடாத இரண்டு:
    1.ஆரண்ய காண்டம்
    2.பாலை

    கடுப்பேத்திய இரண்டு:
    1.அவன் இவன்
    2.நடுநிசி நாய்கள்

    அதீத கமர்ஷியல் நெடியால் தலைவலி வந்தது:
    1.வெடி
    2.சிறுத்தை
    3.வேலாயுதம்

    ReplyDelete
  18. ஹா ஹா அய்யோ அய்யோ...படம் பார்த்து தானேய்யா பதில் சொல்ல முடியும் ஹிஹி!

    ReplyDelete
  19. வசூலில் நீங்கள் சொன்னது ஏற்புடையது நண்பரே.

    ReplyDelete
  20. அலோ லத்திகா எங்கப்பா லிஸ்ட்டிலேயே காணும், இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.

    ReplyDelete
  21. பவர் ஸ்டாரோட லத்திகா இல்லாத லிஸ்ட் வேஸ்ட் ..

    ReplyDelete
  22. என் ஓட்டு வெங்காயம் படத்துக்கு, ஆனா லிஸ்ட்ல இல்ல என்ன பண்றது?

    ReplyDelete
  23. சுவாரசியமான கண்ணோட்டம்.. ராஜபாட்டை..
    பட்டய கிளப்புங்க..

    ReplyDelete
  24. அருமையான தொகுப்பு!

    பகிர்விற்கு நன்றி!
    சிந்திக்க :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...