> என் ராஜபாட்டை : துப்பாக்கி Vs பில்லா 2

.....

.

Wednesday, March 7, 2012

துப்பாக்கி Vs பில்லா 2

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜம்வால், சத்யன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்காக தற்போது ஆக்ஷன் காட்சிகளை மும்பையில் படமாக்கி வருகிறார்கள். இச்சண்டை காட்சிக்காக புதுவிதமாக நிறைய விஷயங்களை கையாண்டு வருகிறாராம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

கெளதம் மேனன், இயக்குனர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மூவரின் படங்கள் என்றாலே படத்தின் எடிட்டர் ஆண்டனியாக தான் இருக்கும். ஆனால் '7ம் அறிவு' படத்தின் எடிட்டிங்கின் போது ஏ.ஆர்.முருகதாஸுக்கும் ஆண்டனிக்கும் இடையே சிறு பிரச்னையாம்.

ஆகையால் 'துப்பாக்கி' படத்தின் எடிட்டராக பணியாற்ற ஸ்ரீகர் பிரசாத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் முருகதாஸ்.  மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து', 'ராவணன்' உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் ஸ்ரீகர் பிரசாத்.

'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக தேசிய விருதினை வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் பில்லா 2 இசை!அஜீத் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் பில்லா 2. சக்ரி டோல்ட்டி இயக்க, யுவன் இசையமைத்து வருகிறார்.

படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இன்னும் இப்படத்தின் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இந்நிலையில் பில்லா 2 படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான Sunir Kheterpal கூறியிருப்பது :

" இசை வெளியீடு மார்ச் மாத கடைசியில் இருக்கும். டிரெய்லர்கள் தயாராகி வருகின்றன. மார்ச் 15க்குப் பிறகு தியேட்டர்களில் டிரெய்லர்கள் வெளியிடப்படும்.

மார்ச் மாதம் முதல் படத்திற்கான விளம்பரப் பணிகளை துவக்க இருக்கிறோம்."

நன்றி : விகடன்

இதையும் படிக்கலாமே :


தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...
பிரபுதேவாவுக்கு அடுத்து யார் ? நயன்தாரா பதில்

8 comments:

 1. பில்லா 2க்காக வெயிட்டிங்க். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. விஜய்யோட துப்பாக்கி படத்தயாரிப்பாளரை சுடுதா இல்லை படம் பார்க்க வரும் ஆடியன்ஸ சுடுதான்னு பொறுத்திருந்து பார்ப்போம் ...!

  ReplyDelete
 3. அடுத்த போட்டி ஆரம்பம்....

  ReplyDelete
 4. யாரோ...யாருக்கு பின் யாரோ!

  ReplyDelete
 5. நன்றி

  ReplyDelete
 6. பகிர்வுக்கு நன்றி தோழரே

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...