> என் ராஜபாட்டை : அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்

.....

.

Monday, October 22, 2012

அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்



இணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம்.நிங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத ஆனால் அறிந்து இருக்கவேண்டிய ஒன்பது தளங்களை கீழே பார்ப்போம்.

1 . http://www.printwhatyoulike.com/

நீங்கள் சில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான வ
ிஷயங்கள் மட்டு மன்றி உங்களுக்கு தேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட் ஆகும்.ஆனால் சில செக்கன்களில்(SECTION) உங்களுக்கு வேண்டியதை மட்டும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு இந்த தளம் உதவி செய்யும்.

2 . http://www.alertful.com/

உங்களுக்கு வேண்டிய ஒன்றை நினைவூட்ட வேண்டுமா?உதாரணமாக ஒருவரின் பிறந்த நாள்.நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இந்த தளத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய விபரத்தையும் வழங்கினீர்கள் என்றால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எப்போது உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டுமோ அந்த நேரம் நினைவூட்டலை வழங்கும்

3 . http://www.pdfunlock.com/

சில PDF files களை நீங்கள் பார்த்தால் சில கட்டுப்பாடுகள் கொண்டதாக இருக்கும்.உதாரணமாக கொப்பி, பிரிண்ட், எடிட் பண்ண முடியாதிருக்கும் .கவலையை விடுங்கள் இந்த தளத்துக்கு சென்று குறித்த PDF file ஐ கொடுத்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்து உங்களுக்கு விரும் பியவாறு அதாவது உங்கள் கோப்பு போன்று எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.

4 . http://www.daileez.com/

இது ஒரு நினைவுக்குறிப்பு போன்றது.அதாவது இன்றைய நாள் முடிவில் நீங்கள் செய்ததை டயரி இல் எழுதுவீர்கள். அதை ஒரு ஒரு சின்னமாக அதாவது Icon ஆக காட்டினால் எப்படி இருக்கும். இத்தளம் மூலம் அதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.உங்கள் செயலை நீங்கள் எழுத நினைப் பதை காட்டக்கூடிய அந்த Icon இக்கு விரும்பினால் ஒரு சிறிய விளக் கத்தையும் சேர்த்துக்கொள்ள முடியும்

5 . http://isitraining.in/

இந்த கணம் ஒரு குறிப்பிட்ட நகரம்(பெரிய) ஒன்றில் மழை பெய்கிறதா என நீங்கள் கண்டு பிடிக்க வேண்டுமா.இந்த தளத்துக்கு சென்று அந்நகரத்தின் பெயரை வழங்கினால் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல நீங்கள் வழங்கிய நகரத்தின் இக்கண weather conditions களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த தளம் உலக வானிலை அறிக்கையே உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும்.

6 . http://www.typingweb.com/

இது ஒரு ஆன்லைன் தட்டச்சு பயிற்சி வழங்கும் இலவச தளமாகும். பலவகை திறன் மட்டங்களை கொண்டவர்களுக்கும் வெவ்வேறு மட்டங் களில் பயற்சி வழங்கக்கூடிய தளமாக இது அமைந்தது உள்ளது.இன்றைய யுகத்தில் விரைவான டைப்பிங் திறமையும் பல வேலைவாய்ப்புகளை தீர்மானிக்கும் ஒரு தகுதியாக இருப்பதால் இத்தளம் நிச்சயம் அப்படிபட்ட வர்களுக்கு ஒரு நல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.

7 . http://www.gedoo.com/

இந்த தளம் ஒரு தேடல் தளமாக அதாவது கூகுல் போன்று உங்களுக்கு விரும்பிய ஒன்றை பற்றி தேடு தளமாக உள்ளது.நீங்கள் ஒன்றை பற்றி தேடினால் அது தானாக கூகுல் இல்ருந்து தேடி தரும். ஆனால் நிங்கள் 4300 தேடு தளங்களில் ஒன்றை தெரிவு செய்து அதிலிருந்து தேடி தருமாறு செய்யலாம்.இந்த தளம் 4300 தேடு தளங்களில் உங்களுக்கு பிடித்ததில் தேடி தரும். அதவாது புரோக்கர் போல.ஹிஹிஹி

8 . http://www.cvmaker.in/

வேலை ஒன்றுக்கு அப்ளை பண்ணும் பொது தரமான Cv ஒன்றை ரெடி பண்ணுவது மிக முக்கியம்.எல்லா தகவல்கள் தகமைகள் இருந்தும் அதை எப்படி வடிவமைப்பது என மூளையை கசக்கி பிழிந்து கொண்டு இருப் பீர்கள்.இக்கவலை போக்க இத்தளம் உதவி செய்கிறது.சில நிமிடங்களில் ஒரு அழகான professional ஆன Cv ஐ ரெடி பண்ணி கையில் தரும்.

9 . http://www.zoom.it/

இணையதளங்களில் உள்ள சில படங்கள் குறிப்பாக google search படங்களின் URL இனை இந்த தளத்துக்கு வழங்கினால் நீங்கள் வழங்கிய படத்தை மிக மிக தரமான ஒரு படமாக மாற்றி தரும்.அது மட்டுமல்ல மாற்றப்பட்ட படத்துக்குரிய ஒரு url முகவரியையும் தரும் . நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே ஒரு சாதாரணமான படத்தை மாறுப்பட்ட ஒரு அனுபவத்தை தரும் படமாக மாற்றும்

இதையும் படிக்கலாமே :

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?



நன்றி : தகவல் தொழில்நுட்பம் facebook page

14 comments:

  1. மிகவும் பயனுள்ள செய்தி... நன்றி..................

    ReplyDelete
  2. BOOKMARK செய்து கொண்டேன்...

    மிக்க நன்றி...

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி. சிலவற்றை முயன்று பார்க்க நினைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. அனைவருக்கும் பயன்படும் பதிவு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. பயனுள்ள தளங்கள்
    பயனுள்ள பதிவு

    ReplyDelete
  6. சில தளங்கள் எனக்கு தேவைபடுபவையாக உள்ளது.தங்களின் பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல்கள் . நன்றி .

    ReplyDelete
  8. அருமையான உபயோகப்படும் தகவல்கள் நண்பரே, FB ல இல்லாத நேரத்தில பயன்படுத்துவோம்.

    ReplyDelete
  9. Arumaiyana thoguppu. Useful sites. Thanks for sharing!

    ReplyDelete
  10. மிகவும் உபயோகமான பதிவைத் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  11. How do your get google ad service? They wont offer ad service for tamil content. If you dont mind can you share it with me?

    jai4win@gmail.com

    ReplyDelete
  12. நல்ல தகவல்கள்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  13. மிகவும் உபயோகமான பதிவைத் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...