> என் ராஜபாட்டை : மாணவர்களுக்காக ஒரு சட்டம் (PUPS-2012)

.....

.

Monday, November 26, 2012

மாணவர்களுக்காக ஒரு சட்டம் (PUPS-2012)





மத்திய அரசு மாணவர்கள் நலன் ( !!) கருதி Prophibition of Unfair  Practices in School Bill -2012 எனும் ஒரு சட்டத்தை கொண்டு வர உள்ளது . இந்த சட்டம் அனைத்து அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை கட்டுபடுத்தும் என கூறியுள்ளது . அந்த சட்டத்தில் உள்ள சில சரத்துகளை பார்க்கலாம் ..
  1. புத்தகங்கள் , சீருடைகள் , மற்ற கல்வி உபகரணங்களை அந்த பள்ளியில்தான் வாங்க வேண்டும் என கட்டாய படுத்த கூடாது .

# கண்டிப்பாக இதை பின்பற்றலாம் . காரணம் பல பள்ளிகளில் இலவச பிரதிகளாக வரும் புத்தகத்தை கூட மாணவர்களிடம் விலைக்கு விற்கின்றனர் . ஒரு புத்தகத்திற்கு பதிப்பகம் 35 % வரை கழிவு தருகிறது ஆனால் இவர்கள் போக்குவரத்து செலவு என கூறி அடக்க விலையை விட அதிகமாக விற்கின்றனர் .

  1. நேரடியாகவோ , மறைமுகமாகவோ கட்டாய நன்கொடை வாங்க கூடாது .

# எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை எனக்கு இந்த பள்ளியில் தான் அட்மிஷன் வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர் இருக்கும் வரை இது சாத்தியமில்லை .

  1. HIV, TB போன்ற நோய்களை காரணம் காட்டி அட்மிஷன் மறுக்க கூடாது .

# நல்ல கருத்து ஆனால் அது போன்ற மாணவர்களுடன் தங்கள் மகன்களை படிக்க வைக்க பெற்றோர் முதலில் முன்வர வேண்டும் .

  1. மாணவர்களுக்கு உடல் ரீதியாகவோ , மன ரீதியாகவோ எந்த தண்டனையும் வழங்க கூடாது . அப்படி தண்டிக்கும் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை .

 # இது விவாதிக்க படவேண்டிய விஷயம் . சில மாணவர்கள் தான் அன்புக்கு கட்டுபடுகிரர்கள் . பலர் அடிக்கு தான் கட்டுபடுகிரர்கள் . (காட்டுமிராண்டித்தனமாக அடிப்பது கண்டிப்பாக குற்றம் ). இது மாணவர்கள் எப்படி போனா என்ன நம்ம பாதுகாப்பா இருப்போம் என ஆசிரியர்கள் என்னும் நிலைக்கு கொண்டு  சென்றுவிடும் . நாம் என்ன செய்தாலும் ஆசிரியர்கள் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம மாணவர்கள் மத்தியில் வர வாய்ப்புள்ளது .

  1. படிப்பை காரணம் காட்டி தேர்வு எழுத அனுமதி மறுக்க கூடாது .

# மிக்க நல்ல விஷயம் . நல்ல படிக்கிரவனை மதிப்பெண் எடுக்க செய்ய ஆசிரியர் எதுக்கு ? படிக்காதவனையும் படிக்க வைப்பவந்தான் நல்ல ஆசிரியர் அதுவே நல்ல பள்ளி .


இந்த சட்டம் சரியா இதில் என்ன குறைபாடுகள் அல்லது நிறைகள் உள்ளன என உங்கள் கருத்தை பின்னுட்டத்தில் சொல்லுங்கள் .


இதையும்  படிக்கலாமே :


இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?

Facebook இல் Account வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..



6 comments:

  1. மிக்க நல்ல விஷயம் . நல்ல படிக்கிரவனை மதிப்பெண் எடுக்க செய்ய ஆசிரியர் எதுக்கு ? படிக்காதவனையும் படிக்க வைப்பவந்தான் நல்ல ஆசிரியர் அதுவே நல்ல பள்ளி


    மிகச் சரியான வார்த்தைகள் நண்பரே..

    இச்சட்டத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் நன்றாகவே உள்ளன
    வரவேற்கப்பட வேண்டியது.....
    நடைமுறைப் படுத்தப்பட்ட பின்னர் சில சமூக
    புல்லுருவிகளால் கெடுக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்...

    ReplyDelete
  2. உங்களின் கருத்து நல்ல விஷயம்தான்

    ReplyDelete
  3. எல்லாமே! அருமையான சட்டங்கள்தான், ஆனால் நடைமுறைக்கு வருமா? அப்படியே வந்தாலும் எத்தினை பள்ளிகளில் இதனை பின்பற்றுவார்கள் என்று தெரியாது. இப்போதெல்லாம் பள்ளிக்கூடம் என்றாலே "ரேஸ்" குதிரைப் போட்டிமாதிரி நடக்குது.

    அருமையான பகிர்வுக்கு நன்றி சகோதரா!

    அப்படி எங்கள் பக்கமும் வந்து போகலாமே!

    ReplyDelete
  4. எல்லாமுமே சரி... இந்த மூன்றாவது தான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்...

    /// மாணவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ எந்த தண்டனையும் வழங்க கூடாது . அப்படி தண்டிக்கும் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை... ///

    ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ எந்த தண்டனையும் வழங்கக் கூடாது... அப்படி தவறிழைக்கும் மாணவர்களுக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை உண்டா...? (இன்றைய நிலை அப்படி...)

    நன்றி...

    ReplyDelete
  5. நல்ல சட்டம், இதலாம் பாஸ் பண்ண விடமாட்டார்களே!!!!!

    நல்ல தகவல்.. அருமை

    ReplyDelete
  6. எனக்கு DTP new version software downlode செய்ய வேண்டும் free link எங்கு கிடைக்கும் .

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...