> என் ராஜபாட்டை : தேர்தல்

.....

.
Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Wednesday, April 23, 2014

தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!





என்னடா எல்லாரும் , எல்லா ஊடகமும் மறக்காம நாளை ஓட்டு போடுங்கனு கத்திக்கிட்டு இருக்கு நீ ஓட்டு போடாதிங்கனு சொல்ற என்ன ஆச்சு உனக்குன்னு பார்கின்றிர்களா ? மேலே படியுங்கள் ..


தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

  •  நம்ம சாதி , மதத்தை சார்த்தவர்னு சொல்லி யாருக்கும் தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 
  • கட்சிமேல் பாசம் இருக்கட்டும் , அதுக்காக அந்த கட்சி எவ்வளவு ஊழல் செய்தாலும் பரவாயில்லை அவனுக்கு தான் என் ஓட்டு என எண்ணி தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 
  • கடவுள் இருக்குனு சொல்றவனை நம்பலாம் , இல்லைன்னு சொல்றவனையும் நம்பலாம் , அதுபோல தான் மதமும் . இந்த மதசார்பின்மையை பேசி ஒரு குறிபிட்ட மதத்திற்கு ஜால்ரா அடிக்கும் கட்சிக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 
  • எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிகொள்ளுங்கள் ஆனா அவர்களுக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 
  • முன்பே உங்கள் தொகுதில் வெற்றிபெற்றவராக இருந்தால் அவர் செய்த நன்மைகளை எண்ணிப்பாருங்கள் , அப்படி ஒண்ணுமே செய்யலைனா அவருக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 
  • தன் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்காமல் அடுத்தவரை குறைசொல்லியே ஒட்டுகேட்கும் , கேட்ட கட்சிகளுக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 
  • நமக்கு பிடிக்காத முடிவு என்றாலும் அதில் உறுதியா உள்ள கட்சியை நம்புங்கள் , ஆனா டெல்லியில் ஒரு முடிவு , இங்கே வந்தா பல்டி என இருக்கும் கட்சிகளுக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 
  • நமது தொகுதியில் நிற்பவர் யாரும் சரியில்லை என எண்ணி நோட்டாவுக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 
  • நோட்டாவுக்கு பதில் சுயேட்சைக்கு போடுங்கள் , இரண்டுமே வீணாகத்தான் போகும் , ஆனால் சரியில்லாத வேட்பாளர்க்கும் மட்டும் தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 

நமது ஓட்டை நல்லவர்களுக்கு போட்டு நாட்டை நல்வழி படுத்துவோம் . மறக்காமல் ஓட்டு போடுங்கள் .

Wednesday, April 2, 2014

ஒரு வீடு இரு திருடர்கள்- தேர்தல் ஸ்பெஷல்


அது அவர்களுடைய தொழில்.
கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.
நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல
அவர்களுக்கு தொழில் தர்மம்.
ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்
குறுக்கிடும் தொழில் தர்மம்.

ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,
கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.
அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது?
யார் பின்வாங்குவது?
முடிவு காண முடியவில்லை திருடர்களால்.

முதல் திருடன் சொன்னான்,
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.
இரண்டாம் திருடன் சொன்னான்
‘திருடுவது நம் உரிமை
அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.
அவன் முன் வாக்குப்பெட்டி.
யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி
வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய
அறிவு புகட்டப்பட்டது.
இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.
கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.


பின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை
‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்
அது என்  தவறல்ல.

இதை மெயிலில் அனுப்பிய நண்பனுக்கு நன்றி :

இது ஒரு மீள் பதிவு 



===========================================================================
இதையும்  படிக்கலாமே :

யார் தெய்வம் ?

 

விஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 2


 

 

Tuesday, June 5, 2012

அரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்க சில ஐடியாக்கள்



கூடிய விரைவில் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வரப்போகிறது. இப்போதே நம் அரசியல் பெருந்தலைகள் தேர்தல் அறிக்கைகளுக்கு விஷயங்களைத் தயார்படுத்த ஆரம்பித்துவிடுவர். நாட்டுக்காகப் படாதபாடு(!) படும் அவர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு யோசிக்க வேண்டாமே என்ற நல்லெண்ணத்தில், செய்யவேண்டிய அதிமுக்கிய வேலைகளையும் தூக்கி ஓரமாய்ப் போட்டுவிட்டு முடிந்த வரை முக்கி முக்கி யோசித்ததில் வந்து விழுந்த ஐடியாக்கள் தான் இவை.இவை முழுக்க முழுக்க காப்பிரைட்(!) செய்யப்பட்டவை என்றும் இவற்றை உபயோகப்படுத்திக்கொள்ள தகுந்த கட்டணம் செலுத்த வேண்டுமென்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திராவிடக் கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்! கட்டணம்??
ஏதோ நீங்க பார்த்துப் போட்டுக்குடுத்தா சரிதான் முதலாளி... நம்பிக்கை தானே வாழ்க்கை! கவிதை எழுதும்போது மானே தேனே அப்படியெல்லாம் நடுநடுவே போட்டுக்கணும்னு குணா படத்தில் கமல் சொல்வார். தேர்தல் அறிக்கைன்னா அது போல, நிச்சயமாக, ஆணித்தரமாக, உறுதியாக, கடவுள் சத்தியமாக, மக்கள் தலைமேல் ஆணையாக(!) இப்படியெல்லாம் நடுநடுவே போட்டுக்கணும். அப்போதான் கொஞ்சம் வெயிட்டா இருக்கும். கடைசியில மக்கள் 'குணா' மாதிரி ஆகணும்ல!!பாயிண்ட்சுக்குப் போவோமா..

1. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பங்குச்சந்தையைத் தூக்கி நிறுத்தி, சென்செக்ஸ் 50,000 புள்ளிகளுக்கு எகிறடிப்போம் என்பதை அறுதியிட்டுக் கூறுகிறோம்.

2. இந்திய ஹாக்கி அணிக்கு குளுக்கோஸ் கொடுத்து, புத்துயிரூட்டி 2040ல் நிச்சயம் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றுவிடுவோம்.

3. இந்திய நதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து குழாய்களில் அரபு நாடுகளுக்குத் திருப்புவோம். பதிலுக்கு எண்ணெய் பெற்று இந்தியாவை வளப்படுத்துவோம்.

4. கோதாவரியையும், நர்மதையையும் பெப்சிக்கும், கோக்கிற்கும், தாரை வார்த்து குளிர்பான அறுவடை செய்வோம்.

5. தமிழ்நாட்டில் டாஸ்மாக்கின் பெருவெற்றியைத் தொடர்ந்து இந்தியா முழுவதிலும் கிளைகள் தொடங்குவோம். இந்தியாவை தண்ணியில்லாக் காடு என்று யார் சொல்ல முடியும்?

6. இந்தியக் கிரிக்கெட் அணியின் சிறப்பான வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் ஐநூறு கோடி ரூபாய் ஒதுக்குவோம்.

7. புதிதாக சாப்ட்வேர் பார்க் தொடங்க இடம் இல்லாததால் சத்தியமங்கலம் காடுகளை அழித்து இடம் உருவாக்கப்படும். இதன்மூலம் லட்சோபலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

8. சிறப்பான தமிழ் தலைப்புகளை படத்தின் பெயராக வைத்து 'தமிழ்' மொழியைப் பாதுகாத்து வரும் படத் தயாரிப்பாளர்களுக்கு அகில இந்திய அளவில் விருதுகள் வழங்கப்படும்.

9. ஐக்கிய நாடுகள் சபையை இந்தியாவிற்கு இடமாற்றம் செய்ய ஆவன செய்யப்படும்.

10. அமெரிக்காவிற்கு முன்னால் செவ்வாய்க்கு ஆள் அனுப்பி வெற்றிக்கொடி நாட்டப்படும்.

11. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்த மென்பொருள் நிறுவனங்களின் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். படிப்படியாக அடுத்த ஐந்து பட்ஜெட்களில் இது ஈடுகட்டப்படும்.

12. அரசு ஊழியர்களின் சம்பளம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.

13. நான்குவழிப்பாதை திட்டம் ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஆகியும் அது இன்னும் முடியாமல் இருப்பதால் கையோடு எட்டு வழிப்பாதையாகவும் ஆக்கிவிடுவோம்.

14. லஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கான போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

15. மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக, குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும்.

டிஸ்கி : இது 2009 இல் ஒரு நண்பன் அனுப்பிய மின் அஞ்சல் , அப்பொழுதே பதிவாக போடபட்டது . இது ஒரு மீள் பதிவு . 

இதையும் படிக்கலாமே :


சிவகார்த்திகேயன் : காமெடி நாயகன்

நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி

 

யார் தெய்வம் ?