> என் ராஜபாட்டை : அவமானம்

.....

.
Showing posts with label அவமானம். Show all posts
Showing posts with label அவமானம். Show all posts

Monday, March 25, 2013

அவமானம்

5,00,000  மேல் ஹிட்ஸ் வாரி வழங்கிய அன்பு நண்பர்களுக்கு நன்றி




உலகில்
அவமானப்படாதவர்கள்,
தோல்விகள்
அடையாதவர்கள் யாரும்
இல்லை.








அமிதாபச்சன் சினிமாவில்
சான்ஸ் கேட்டு சென்ற
போது, இவன் என்ன
ஒட்டக
சிவிங்கி மாதிரி இருக்கான்.
இந்த மூஞ்சி எல்லாம்
சினிமாவுக்கு சரியாய்
வராது என்று திருப்பி அனுப்பினார்களாம்.

அவர்
துவண்டு விடவில்லை.
நம்மால் நடிகனாக
முடியும் என்ற
நம்பிக்கை அவருக்கு இருந்தது.
அவர்
துவண்டு போயிருந்தால்
ஒரு சூப்பர் ஸ்டார்
ஆகியிருக்க முடியாது.




அன்னை தெரஸா தான்
பராமரிக்கும்
குழந்தைகளின்
செலவிற்காக
ஒவ்வொரு கடையாக
நம்கொடை கேட்டு தட்டினை ஏந்திய
போது, அத்தட்டில் எச்சில்
துப்பி அவமானப்
படுத்தினானாம்
ஒரு கடைக்காரன்.


தெரஸா உணர்ச்சி வசப்பட்டு கோவத்தில்
கொந்தளிக்க வில்லை.
அமைதியாய்
அதை துடைத்து விட்டு மீண்டு தட்டை நீட்டினார்.
கலங்கி போன
கடைக்காரன் அதிக பணம்
கொடுத்து அனுப்பினானாம்.



மைக்கல் ஜோர்டான்
என்பவர் உலகின் மிக
சிறந்த கூடை பந்து வீரர்.

பள்ளிகூடத்தில்
அவரை கூடை பந்து விளையாட
லாயக்கு இல்லாதவன்
என்று டீமில்
இருந்து விரட்டி விட்டார்களாம்.




புகழ் பெற்ற அறிவியல்
மேதை ஜஸ்டினை இன்று அறியாதவர்
யாரும் இல்லை.

அவர்
மண்டு, மக்கு என்று பிராகிரஸ்
ரிப்போர்டில் எழுதப்பட்ட
குறிப்புகளோடு பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டவர்தான்
அவர்.



நோர்மா என்ற
பெண்மணி மாடலாக
ஆசைப்பட்டு ஒரு கம்பெனியில்
வாய்ப்பு கேட்டார்.

கேலியாக
சிரித்து போ போய்
எங்காவது கிளார்க்
வேலையை பாரு.
இல்லைன்னா கல்யாணம்
செய்துகிட்டு புள்ளை குட்டியை பெத்துக்க
என்று சொல்லி அனுப்பி விட்டார்களாம்.

ஆனாலும் மனம்
நொந்து போகாத அந்த
பெண்மணிதான் மர்லின்
மன்றோ என்று புகழ்
பெற்றார்.

 
இங்கே அவமானபடாதவர்கள்
காயப்படாதவர்கள் யாரும்
இல்லை என்பதை நாம் உணர்ந்து கொண்டால்,

எழுந்து நிற்க வேண்டும்
என்ற உத்வேகம்
உங்களுக்கு வரும்.



நன்றி : மெயில் அனுப்பிய நண்பனுக்கு 



இதையும் படிக்கலாமே :


இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )

 

இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?