கடந்த இரண்டு வாரமாக விடுமுறையாக இருப்பதால் நூலகம் (நான் நல்லபிள்ளை ) அல்லது டிவி அல்லது சரண் என பொழுது போகின்றது . இந்த நேரத்தில் வீட்டில் சில சீரியல் பார்த்தார்கள். வேறு வழியில்லாமல் பார்க்க வேண்டி இருந்தது. அப்படி பார்த்ததன் விளைவுதான் இந்த பதிவு .இந்த சீரியல்கள் பார்க்கும் போது தோன்றிய சந்தேகங்கள் , ஆத்திரங்கள் , கோவங்கள் ,வெறுப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
- நல்ல நண்பனாக பழகி விட்டு அவனை அவன் மனைவியிடன் இருந்து பிரிக்க முயற்சிக்கும் ஒரு பெண் . நாளை எந்த பெண்ணாவது தனது கணவனின் தோழியை பார்த்ததால் சந்தேகம் வராதா ?
- பெற்ற மகனை கெடுக்க அனைத்து வழியிலும் முயலும் தம்பி மற்றும் அம்மா . ( ஒருவேளை இயக்குனர் அம்மா அப்படியோ அல்லது அவர் அண்ணனை இப்படிதான் கெடுக்க நினைகின்ராரோ ?)
- கொழுந்தியாலை கொலை செய்யும் வில்லன் (யாருக்காது கொழுந்தியாலை கொல்ல மனம் வருமா ஹீ .. ஹீ )
- தன மகனும் மருமகளும் “ சேரக்கூடாது “ என மருமகள் இருக்கும் அறையை இரவில் பூட்டி வைக்கும் தாய் ( அப்ப பகலுல சேர்ந்துட்டா ?)
- கணவனை சந்தேகப்படும் மனைவி , மனைவியை சந்தேகப்படும் கணவன் .
- நிறைய தொடர்களில் கதாநாயகிக்கு இரண்டு கணவன் அல்லது ஏற்கனவே திர்மனமானவரின் மனைவியாக கதாநாயகி .
- ஏன் எல்லா சிரியாலும் பெண்களை மையமாக வைத்து வருகின்றது ?( நாதஸ்வரம் விதிவிலக்கு )
- ஏன் ஆண்கள் பெயரில் சிரியல் எடுத்தா ஓடாதா ?
- சினிமாவில் மட்டும் பார்த்த கற்பழிப்பு காட்சிகள் சீரியலிலும் ( செல்லமே மற்றும் நாதஸ்வரத்தில் )
- பச்ச குழந்தையை பெரிய மனுஷி போல பேச வைப்பது
சினிமாவுக்கு இருப்பது போல தொலைக்காட்சிக்கும் சென்சார் வேண்டும் ( ஹ்ம்ம் .. சினிமா சென்சார் மட்டும் பெருசா என்னத்த கிழிசாங்க ..). வீட்டில் உள்ள வர்களை கொஞ்ச கொஞ்ச மாக மனநிலை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது இது . தயவு செய்து சிரியல் பார்ப்பதை குறையுங்கள்.
மாற்று வழிகள் :
- காமெடி நிகழ்ச்சிகள் பாருங்கள் ( ஜெயா நியுஸ் , கலைகர் நியுஸ் போல )
- கார்டுன் நெட்வொர்க் பாருங்கள்
- ஆன்மிக சேன்னல் பாருங்கள் ( நித்தியானதா வகை அல்ல )
- ஆங்கில காமெடி சேன்னல் பாருங்கள் ( பாராளுமன்ற நேரடி ஒளிபரப்பு பாருங்கள் )
- எதுமே இல்லையா “ ஏன் ராஜபாட்டை “ பிளாக் படியுங்கள் .
இதையும் படிக்கலாமே :


