கி.பி 2055 – காலை மணி 7.45
ஜெனிவாவில் உள்ள உலகின் தலைமை செயலகம். 213 நாடுகளின் அதிபர்கள் கூட்டம். அமெரிக்க அதிபர் ராபர்ட் மெக்கலே தனது கணீர் குரலில் “ நீங்கள் சொல்லுவது உண்மையா?” என்றார்.
“100 % உன்மை “ கண்ணாடி அனிந்த புரபசர் மித்ரன்.
“நமது பூமி அழியபோகுதுனு சொல்றிங்களா?” இந்திய அதிபர் ராஜன்.
“அழியவில்லை அழிக்க போகின்றார்கள். உங்களுக்கு மீண்டும் விளக்கமாக சொல்கிறேன். ஆல்பா கிரகம் பூமியில் இருந்து 2 லட்சம் ஓளி மையில் தூரத்தில் உள்ளது. அங்கு நம்மைவிட புத்திசாலியான, பலமான உயிரினங்கள் உள்ளது. அவர்கள் அவர்கள் மசூகா கிரகத்துக்கு போக்குவரத்துகாகா ஒரு பாலம் கட்டுகின்றனர். அந்த இரு கிரகத்துக்கும் நடுவே நமது பூமி வருவதால் இதை இடிக்க நினைக்கின்றார்கள். “
“அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினிர்களா? “-ராபர்ட் மெக்கலே,
“பேசினோம், இன்னும் 2 நிமிடம் நேரம் தருகிறோம், பூமியை காலி செய்யுங்கள் என சொல்லிவிட்டனர் “ - புரபசர் மித்ரன்
“எத்தனை மனிக்கு அழிக்கபோகின்றார்கள் “ இங்கிலாந்து அதிபர்.
“இன்று காலை 8 மணிக்கு “ - புரபசர் மித்ரன்
“இனி என்ன செய்வது..?” கியூபா அதிபர்
“மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதுதான் “-புரபசர் மித்ரன்
மணி 7 : 49 : 50
7 : 49 : 51
7 : 49 : 53
7 : 49 : 55
7 : 49 : 57
7 : 49 : 58
7 : 49 : 59
“படார்……………..”
“சனியனே., விடிஞ்சு மணி 8 ஆகுது இன்னும் துங்குறத பாரு.. மூஞ்சுல தண்ணி அடிச்சதும் முழிக்கிற முழிய பாரு..”