> என் ராஜபாட்டை : photo.

.....

.
Showing posts with label photo.. Show all posts
Showing posts with label photo.. Show all posts

Tuesday, December 6, 2011

விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.



இன்று Facebook, Twitter, Buzz என அனைத்திலும் அதிகம் கலாய்க்கபடுகின்றவர் நமது இளைய தளபதி விஜய் அவர்கள் தான். ஏன் மற்ற நடிகர்களைவிட இவரை மட்டும் அதிகம் கிண்டல் செய்கின்றனர் என புலனாய்வு செய்ததில் கிடைத்த விஷயங்களின் தொகுப்புதான் இது.(மனசுல பெரிய துப்பறியும் சாம்புனு நினைப்பா? # விக்கி)

  1. பன்ச் டயலாக் (பன்சரான டயலாக்)

பன்ச் டயலாக் என திரையை பார்த்து அடிகடி சொல்வது. இதை முதலில் ஆரம்பித்தவர் கேப்டன் அவர்கள். அதும் காது பன்சர் ஆகும் அளவு கத்தி சொல்வதால் பலர் செவிடாகபோய்விட்டனர்.


  1. அந்தரத்தில் பறப்பது.

அந்தரத்தில் பறப்பது அதுவும் ரயில் மேல, சைடுல, கிழே என ரயிலைவிட வேகமா செல்வது. இப்பலாம் ரயிலை பார்த்தால் தளபதி நினைப்புதான் வருது. அடுத்த படத்துல விமானத்திலருந்து ரயில் மேல குதிக்கபோறாறாம்.

  1. அரசியல் ஆசை(பேராசையா? நிராசையா?)

அரசியல் ஆர்வத்துல நீங்கள் தான் அடுத்த முதல்வர், ஜனாதிபதி, பிரதமர் என அடிபொடிகள் சொல்வதையும், அவர் அப்பா சொல்வதையும்  நம்பி ஏமாறுவது.

  1. சுடுவது (கதை, காட்சி, சில சமயம் உடைகள்)

பிறமொழில் வந்த, வென்ற படங்களை உடனே ரீ-மேக்குவது அல்லது அதை சுட்டு படம் எடுப்பது. இப்ப கூட DOCOMO விளம்பரத்தில் வெறு மொழி விளம்பரத்தில் போட்ட அதே சட்டையை பயன்படுத்தியது.

  1. படத்தின் பெயர் ( சம்பத்தம் இல்லாமல் இருப்பது)

சுறா, குருவி, போக்கிரி என கண்டபடி பெயர் வைப்பது. கவிதை நடையில் பல பெயர் இருக்க கிண்டல் செய்வதர்க்கு வசதியாக பெயர் வைப்பதில் இவர் ரொம்ப நல்லவர்.


இதையும் மீறி படம் வந்தாலும் கிழே உள்ள நிலைமைதான்.


டிஸ்கி 1: மீண்டும் சொல்றேன் நான் விஜய்யை வெறுப்பவன் இல்லை.


டிஸ்கி 2: விஜய் பற்றி எது எழுதுனாலும் ஹிட்ஸ் எகிறுது
             அதான்.(ஆகா உண்மைய உளறிடேனா?)


Sunday, October 23, 2011

என்ன கொடுமை சார் இது ?

கிழே சில படங்கள் உள்ளது . அந்த படங்களில் உள்ளவர்கள் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்விர்கள் ...?












கண்டிப்பா மேலே உள்ள தலைப்பைதான் சொல்லுவிர்கள் ..