> என் ராஜபாட்டை

.....

.

Saturday, May 18, 2013

நேரம் : விமர்சனம்





ரெட் ஜெயன்ட் வெளியிடு என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பை கிளப்பியாதால் இந்த படம் பார்க்க போனேன் . தியட்டரில் 6 மணிக்கு படம் ஆனால் 6.15 க்குதான் போனேன் . உள்ளே என்னை சேர்த்து மொத்தம் 6 பேர் தான் . நமக்கு நேரம் சரியில்லை என நினைத்து படம் பார்க்க துவங்கினேன் .

கதை

ஒரே நாளில் நடக்கும் கதை . ஹீரோ நவீன் வில்லன் வட்டி ராஜா விடம் வாங்கிய கடன் , தங்கை கணவனுக்கு தரவேண்டிய வரதடசனை இவை இரண்டையும்  மாலை 5 மணிக்குள் தரவேண்டும் இத்துடன் தன் காதலி தனக்காக வீட்டை விட்டு வந்துவிட அவளை அவள் தோழி வீட்டில் இருக்க சொல்லி 5  மணிக்கு அழைத்து செல்கிறேன் என சொல்கிறான் . வேறு ஒருவன் தர வேண்டிய பணத்துக்காக தவறுதலாக ஹீரோயினை கடத்தி 5  மணிக்குள் வட்டி ராஜா பணம் கேட்க இவை அனைத்தும் எப்படி முடிகிறது என்பதுதான் கதை .


+ பாயிண்ட்

  • ஹீரோ , ஹீரோயின் என அதிக புது முகங்கள் . (இதுவே பாயிண்ட் )

  • தேவையில்லாத பாடல்கள் இல்லாதது .

  • பஞ்ச் டயலாக் , குத்து பாட்டு , இரட்டை வசனம் ஏதும் இல்லாதது .

  • 1 மணி 57 நிமிடத்தில் படத்தை முடித்தது .

  • இறுதியில் வரும் நாசர் பேசும் வசனங்கள் .

  • படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஒரே சம்பவத்தில் தொடர்புடையதாக காட்டும் யுக்தி .
  • காதல் காட்சிகளை வள வள என இழுக்காமல் முடித்தது .

  • கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத டுவிஸ்ட் .


- பாயிண்ட் :

  • சரியான விளம்பரம் இல்லாததால் இப்படி ஒரு படம் வருவதே தெரியவில்லை .

  • நாசர் வில்லனா , காமெடியனா என தெளிவில்லாமல் உள்ள குழப்பம் .

  • ஹீரோ ஆரம்பத்தில் வேலை போய்விட்டது என்கிறார் , ஆனால் அடுத்து போகும் நேர்முக தேர்வில் முன் அனுபவம் இல்லை என்கிறார் எப்படி ?

  • ஒரு I T  கம்பெனியில் வேலை பார்ப்பவர்களுக்கு 50,000 ரூபாய் ஒரு பெரிய தொகையா ?

  • ஒளிப்பதிவு ஆரம்பத்தில் சில இடங்களில் டல்லாக உள்ளது .( தியட்டர் சரியில்லையோ ??)

  • பின்னணி இசை சில காட்சிகளில் வசனத்தை மறைக்கிறது .



முடிவா !!!!!

படம் துவக்கம் மிக மெதுவாக போகிறது ஆனால் இடை வேலைக்கு பின் வேகமாக உள்ளது .
நேரம் (தியட்டரில்) இருந்தால் பார்க்கலாம் .


ஆனந்த விகடன் மார்க் : 36

குமுதம் : பரவாயில்லை

ராஜபாட்டை மதிப்பீடு : 2.5 / 5


Monday, May 13, 2013

ANDROID மொபைலில் GPRS DATA மற்றும் பேட்டரியை பாதுகாக்க ஒரு சிறந்த APPLICATION.






எப்பொழுதும் சார்ஜில் இருப்பதால் இனி என் ஆண்ட்ராட் போனை லேன்ட் லைன் போன் என அழைக்கலாம் என இருக்கிறேன் :

                 -- பாதிக்கபட்ட ஒருவன் --
ANDROID MOBILE வைத்திருக்கும் அனைவரும் சந்திக்கும் ஒரே பிரச்சனை அதன் பேட்டரி லைப் தான் . யானைக்கு தீனி போடுவது போல எப்பொழுதும் சார்ஜில் இருக்கவேண்டும் . காரணம் இந்த வகை போன்களில் பின்புலத்தில் (BACKGROUND RUNNING APPLICATIONS) பல நிரல்கள் ஓடிக்கொண்டு இருக்கும் . இது போன்று தேவையில்லாத APPLICATION களை நிறுத்தி பாட்டரி லைபை அதிகரிக்கும் ஒரு APPLICATION பற்றிதான் நாம் பார்க்க போகிறோம் .


இது கூகிள் ப்ளேயில் இலவசமாக கிடைக்கும் . இதில் 5 முறைகள் உள்ளன . உங்களுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெரிவு செய்யலாம் .

  1. NORMAL MODE
  2. GENERAL POWER SAVING MODE
  3. INTELLIGENT POWER SAVE MODE
  4. SUPER POWER SAVER MODE
  5. ADVANCED CUSTOMIZED MODE

இதில் முதல் வகையில் சாதாரண நிலையில் உங்கள் போன் இருக்கும் . இரண்டாவது வகை நீங்கள் போனை பயன்படுத்த பொழுது GPRS, GPS, DISPLY போன்றவற்றை நிறுத்திவிடும் . இதனால் பேட்டரி மற்றும் இன்றி உங்கள் GPRS DATA பயன்பாடும் குறைக்க படுகிறது .கடைசி முன்று வகைகளும் உங்கள்       இஷ் டத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம் .

பயன்கள் :

  1. இது இலவச மென்பொருள்
  2. போன் நினைவகத்தில் (PHONE MEMORY) கொஞ்சம் தான் எடுத்து கொள்ளும் .
  3. எளிதில் மாற்றலாம்
  4. உங்கள் GPRS DATA வை தேவையில்லாமல் போன் பயன்படுத்த அனுமதிக்காது .
  5. பாட்டரி லைப் நீண்ட காலத்துக்கு வரும் .
  6. மிகவும் குறைந்த அளவு சார்ஜ் இருக்கும் போது உங்களை எச்சரிக்கும் ( BELOW 20 %)


இதையும் படிக்கலாமே :



Wednesday, May 8, 2013

படிக்க வேண்டிய 6 புத்தகங்கள்








இன்றைய நிலையில் புத்தகம் படிப்பது என்பது மின்சாரம் போல குறைந்துகொண்டே வருகிறது . அப்படியே படித்தாலும் ராசிபலன் , உணவு குறிப்பு , உடம்பை குறைப்பது எப்படி , வாஸ்து என சில புத்தகங்களே படிக்க்ன்றனர் . நல்ல புத்தகங்களை தேடி படிக்க நினைக்கும் சிலருக்கும் , இந்த புத்தகத்தைதான் தேடினேன் என நினைக்கும் பலருக்காக்கவும்தான் இந்த பதிவு.


இந்த பதிவில் உங்களுக்கு பயன்படும் சில புத்தகங்களை அளித்துள்ளேன் . இது உங்களுக்கு நிச்சயம் பயன்படும் . இந்த பதிவிற்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து இன்னும் நிறைய புத்தகங்கள் பதிவேற்றப்படும் .






அத்தனைக்கும் ஆசைப்பட்டு



சே குவாரா



என் இனிய இயந்திரா


காமராஜர் 




காரல்மார்க்ஸ் 



மனசே ரிலாக்ஸ் பிளிஸ் 


==============================================
 படித்து பாருங்கள் :




 ========================================================================

விரைவில் : பென் டிரைவ் மூலம் அடுத்தவர் password ஐ சுடுவது எப்படி ?

Monday, May 6, 2013

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு



+2 தேர்வு முடிவுகள் வியாழன் ( 9-5-13)  அன்று வருகின்றது. நன்றாக படிக்கும் மாணவன் முதல் , பாஸ் பண்ணினா போதுன் என நினைக்கும் மாணவன் வரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இவர்களை விட அதிக ஆவலுடன் மற்றும் எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் பெற்றோர்கள். தன மகனை அடுத்து என்ன சேர்ப்பது , எங்கே சேர்ப்பது என கனவு கண்டுகொண்டு இருப்பவர்கள். இவர்கள் இருவார்க்கும் சில வார்த்தைகள் ....

மாணவர்களே ...

நல்ல மதிப்பெண் பெற்றால் அல்லது எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண் வந்தால் எவ்வளவு சந்தொஷமடைகிரோமோ அது போல மதிப்பெண் குறைந்தால் கவலைபடாதீர்கள் . சிலர் ஒரு மார்க் குறைந்ததுக்கு பல நாட்கள் அழுது பார்த்துள்ளேன்.

மதிப்பெண் குறைந்தாலோ அல்லது தேர்வில் தோல்வி  வெற்றியை தவரவிட்டாலோ மனதை தளரவிடவேண்டாம். தேர்வு முடிவு வந்த அடுத்த 15  நாட்களில் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம. வெற்றி தள்ளி போய் உள்ளதே தவிர கிடைக்காமல் போகாது.

தப்பி தவறி கூட தற்கொலை என்ற முட்டாள் தனமான , தவறான முடிவை எடுக்காதிர்கள். இந்த தேர்வில் தோற்றால் மறுபடியும் வெற்றி பெற வாய்ப்புண்டு ஆனால் உயிர் போனால் மீண்டும் வராது. உங்கள் மேல் பாசம் வைத்து உங்களையே உலகமாக நினைத்து வாழும் பெற்றோரை  ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள், வாழ்வில் மதிப்பெண் மட்டுமே முக்கியமில்லை. படிக்ககாத , தேர்வில் பாஸ் ஆகாத பலர் வாழ்கையில் முன்னேறிஉள்ளனர் ( தோணி B.Com ல இன்னும் பாஸ் செய்ய முடியலை, டெண்டுல்கர் 10 வகுப்புடன் நிறுத்திவிட்டார் )

பெற்றோருக்கு ..

பையன் நல்ல மதிப்பெண் பெற்றால் என் மகன் என பாசம் காடும் நீங்கள் அவன் மார்க் குறைந்தாலோ அல்லது பெயில் ஆனாலோ அதே பாசத்தை காட்டுங்கள். உங்கள் பாசத்தைவிட உங்கள் அரவணைப்பை விட அவனை தேற்றும் சக்தி வேறு இல்லை. உங்கள் ஒரு தவறான , அல்லது கோபமான சொல் அவன் வாழ்க்கை பாதையையே மாற்றிவிடும்.

என் கல்வி அனுபவத்தில் DISTRICT FIRST, SCHOOL FIRST எடுத்தவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை அல்லது இன்னும் வேலை தேடிக்கொண்டு இருக்கின்றான். ஆனால் சாதரணமாக படித்தவன் , குறைவான மதிப்பெண் எடுத்தவன் இன்று பல உயர் பதவியில் உள்ளனர். (சாதாரண மார்க் எடுத்த என் மாணவன் இப்போது கப்பற்படையில் உயர் பதவியில் உள்ளான். )

மகனை மதிப்பெண் பெரும் இயந்திரமாக பார்க்காதீர்கள் . முக்கியமாக அடுத்த மாணவருடன் அல்லது மாணவியுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். அவன் உங்களை அடுத்த குழந்தையின் அப்பாவுடன் ஒப்பிட்டு பேசினால் உங்களுக்கு எப்படி இருக்கும் ?
கடைசியாக , அவன் மதிப்பெண் குறைய அவன் மட்டுமே காரணம் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


டிஸ்கி : தேர்வு முடிவுகளை பார்க்க








Wednesday, May 1, 2013

சூது கவ்வும் : விமர்சனம்




 ஹட் ட்ரிக் வெற்றி நாயகன் விஜய் சேதுபதியின் அடுத்த படம் இது . ஆனால் உண்மையில் இந்த படத்தின் ஹீரோ திரைக்கதைதான் . சாதாரண கதையை இவ்வளவு ஜாலியாக வேறு யாரும் சொல்ல முடியாது . இயக்குனர் சின்னத்திரையில் நாளைய இயக்குனர் நிகஷ்சியில் வெற்றி பெற்றவர் .

கதை :

வேலை இல்லாத , வேலை இழந்த , ஊரைவிட்டு வந்த என மூன்று நண்பர்கள் . சின்ன சின்ன கடத்தல் வேலைகளை செய்யும் , அதிலும் சில கொள்கைகள்  வைத்திருக்கும் தாஸ் (சேதுபதி ), இவர்களுடன் ஒரு கற்பனை கதாபாத்திரம் . இவர்கள் இணைந்து அமைசர் மகனை கடத்தி இரண்டு கோடி பணம் பறிக்கின்றனர் . இதில் அமைசர் மகனும் உடந்தை . பணம் கிடைத்ததும் அமைசர் மகன் பணத்துடன் கம்பி நீட்டிவிட , பணத்துக்காகவும் இவர்களை என்கோவுண்டர் செய்ய துடிக்கும் போலீசிடம் இருந்து தப்பிக்கவும் செய்யும் தகிடு தித்தன்களே கதை .


ரசிக்க வைத்தவை :

1. கதையில் பெண்களே தேவை இல்லை இருந்தாலும் கற்பனை கதாபாத்திரமாக ஒரு பெண்ணை கொண்டு வந்தது .

2.  படத்தின் வசனங்கள் . கிரேசி மோகன் பாணியில் பல வார்த்தை விளையாட்டுக்கள் .

3. அனைத்து போலிசின் கண்ணில் மண்ணை தூவி விட்டு பணத்தை கொள்ளை அடிக்கும் சீன் . ( தியட்டரில் கைதட்டல் மழைதான் )

4.ரவுடி டாக்டர் என ஒரு பாத்திரம் செய்யும் கலாட்டா .

5. என்கொவுண்டர் போலிஸ் கடைசி வரை ஒரு வசனம் கூட பேசாமல் இருந்தது .

6. பாடல்கள் படத்துடன் இணைத்து செல்வதால் தம் அடிக்க யாரும் போகாதது .
7. கானா பாலா வை ஒரு பாடலுக்கு ஆட வைத்தது .

8. கடத்திய அனைவருக்கும் கை செலவுக்கு டிப்ஸ் தருவது .

9. குடும்பத்துடன் பார்க்கும் வகையில் காட்சிகள் .

10. யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் .


கடுப்பேத்தியது :

1.  தேவையில்லாமல் ஒரு கற்பனை கதாபாத்திரம் உருவாக்கியது .

2. கிளைமாக்ஸ் பாடல் .

3. இடைவேளைக்கு பின் கொஞ்சம் மெதுவாக படம் ஊர்வது .

மொத்தத்தில் :

படம் மிக பெரிய ஹிட்டும் இல்லை , மொக்கையும் இல்லை .நல்ல  பொழுதுபோக்கு படம் . ஜாலியா போங்க  சிரிச்சுகிட்டே வாங்க .

ஆனந்த விகடன்  மார்க் : 42

குமுதம் : நன்று 

என் மார்க் : 6/10


இதையும் படிக்கலாமே :


தல அஜித் பிறந்த நாள் சிறப்பு பதிவு. . .