ஹட் ட்ரிக் வெற்றி நாயகன் விஜய் சேதுபதியின் அடுத்த படம் இது . ஆனால் உண்மையில் இந்த படத்தின் ஹீரோ திரைக்கதைதான் . சாதாரண கதையை இவ்வளவு ஜாலியாக வேறு யாரும் சொல்ல முடியாது . இயக்குனர் சின்னத்திரையில் நாளைய இயக்குனர் நிகஷ்சியில் வெற்றி பெற்றவர் .
கதை :
வேலை இல்லாத , வேலை இழந்த , ஊரைவிட்டு வந்த என மூன்று நண்பர்கள் . சின்ன சின்ன கடத்தல் வேலைகளை செய்யும் , அதிலும் சில கொள்கைகள் வைத்திருக்கும் தாஸ் (சேதுபதி ), இவர்களுடன் ஒரு கற்பனை கதாபாத்திரம் . இவர்கள் இணைந்து அமைசர் மகனை கடத்தி இரண்டு கோடி பணம் பறிக்கின்றனர் . இதில் அமைசர் மகனும் உடந்தை . பணம் கிடைத்ததும் அமைசர் மகன் பணத்துடன் கம்பி நீட்டிவிட , பணத்துக்காகவும் இவர்களை என்கோவுண்டர் செய்ய துடிக்கும் போலீசிடம் இருந்து தப்பிக்கவும் செய்யும் தகிடு தித்தன்களே கதை .
ரசிக்க வைத்தவை :
1. கதையில் பெண்களே தேவை இல்லை இருந்தாலும் கற்பனை கதாபாத்திரமாக ஒரு பெண்ணை கொண்டு வந்தது .
2. படத்தின் வசனங்கள் . கிரேசி மோகன் பாணியில் பல வார்த்தை விளையாட்டுக்கள் .
3. அனைத்து போலிசின் கண்ணில் மண்ணை தூவி விட்டு பணத்தை கொள்ளை அடிக்கும் சீன் . ( தியட்டரில் கைதட்டல் மழைதான் )
4.ரவுடி டாக்டர் என ஒரு பாத்திரம் செய்யும் கலாட்டா .
5. என்கொவுண்டர் போலிஸ் கடைசி வரை ஒரு வசனம் கூட பேசாமல் இருந்தது .
6. பாடல்கள் படத்துடன் இணைத்து செல்வதால் தம் அடிக்க யாரும் போகாதது .
7. கானா பாலா வை ஒரு பாடலுக்கு ஆட வைத்தது .
8. கடத்திய அனைவருக்கும் கை செலவுக்கு டிப்ஸ் தருவது .
9. குடும்பத்துடன் பார்க்கும் வகையில் காட்சிகள் .
10. யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் .
கடுப்பேத்தியது :
1. தேவையில்லாமல் ஒரு கற்பனை கதாபாத்திரம் உருவாக்கியது .
2. கிளைமாக்ஸ் பாடல் .
3. இடைவேளைக்கு பின் கொஞ்சம் மெதுவாக படம் ஊர்வது .
மொத்தத்தில் :
படம் மிக பெரிய ஹிட்டும் இல்லை , மொக்கையும் இல்லை .நல்ல பொழுதுபோக்கு படம் . ஜாலியா போங்க சிரிச்சுகிட்டே வாங்க .
ஆனந்த விகடன் மார்க் : 42
குமுதம் : நன்று
என் மார்க் : 6/10
இதையும் படிக்கலாமே :
Tweet |
நல்லதொரு விமர்சனம்... நன்றி...
ReplyDeleteஎதிர் நீச்சல் எப்படி...?
சார் சிம்பில்லா சொல்லிடிங்க சூப்பர்
ReplyDeleteரொம்ப சிம்பிள முடிச்சிட்டிங்க... நானும் அதைத்தான் சொல்றேன்...
ReplyDeleteநல்லது
பார்க்கலாம்னு சொல்றீங்க! பார்ப்போம்! நன்றி!
ReplyDeleteகற்பனைக் கதாபாத்திரம் இல்லாமலே எடுத்திருக்கலாம்... இயக்குனர் கொஞ்சம் பயந்துட்டாருன்னு நினைக்கிறேன்... என்னுடைய விமார்சனம் விரைவில்.... நன்றி...
ReplyDeleteஇவ்வளவு சீக்கிரம் பார்த்துட்டீங்க... நம்பி விரைவில் பார்க்கிறேன்.
ReplyDeleteஅருமையான விமர்சனம் நண்பரே...
ReplyDeleteநல்லதொரு விமர்சனம்
ReplyDelete