சில வருடங்களுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஒரு செமினார் எடுக்கவேண்டிய கஷ்டமான நிலை( “ மாணவர்களுக்குதானே கஷ்டம் “ - வீடு சுரேஷ் உங்க MAIND VOICE ய CATCH பன்னிடேன்). சில முக்கிய வேலைகள் இருந்ததால் பெரிதாக எதும் தயாரிப்பு செய்யவில்லை. ( இல்லனா மட்டும் பெரிசா கிழிச்சுடுவ..)
எப்பவும் ஒரு செமினார் அல்லது வகுப்பில் புதிதாக ஒரு பாடம் ஆரம்பிக்கும் பொழுது ஒரு குட்டி கதை சொல்லுவது வழக்கம்( மனசுல என்ன ஜெயலலிதா, பாக்கியராஜ்னு நினைப்பா..?- விக்கி )
சரி SUBJECT தான் இல்ல கதையாது ஜாலியா சொல்லலாம்னு ஒரு கதை சொன்னென்.
“ அமெரிக்காவில் வருடா வருடம் பால் கறக்கும் போட்டி நடக்கும், பல நாட்டில் இருந்தும் பல போட்டியாலர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை காட்டுவார்கள்.
இந்த வருடம் இந்தியா சார்பில் யாரை அனுப்பலாம் என பயங்கரமா யோசித்து கடைசியில் நம்ம ராமராஜனை செலக்ட் செய்தார்கள். அவர்தான் பாட்டு பாடியே பால் கறப்பாரே…
போட்டி துவங்கியது, அவரவர்கள் தாங்கள் கொண்டுவந்துள்ள மாடுகளுடன் தனி அறைக்கு சென்றனர். 2 மணி நேரம் கழித்து அனைவரையும் அவர்கள் கறந்த பாலுடன் வரசொன்னார்கள்.
ஜப்பாங்காரன் 15 லிட்டரும், அமெரிக்காகாரன் 10 லிட்டரும், ரஷ்யாகாரன் 8 லிட்டரும், பாகிஸ்தாங்காரன் 5 லிட்டரும் கறந்து இருந்தனர். அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கபட்ட நம்ம ராமராஜன் வேறும் 2 லிட்டர் மட்டுமே கறந்து இருந்தார்.
அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சி. நடுவர்கள் அவரிடம் சென்று என்ன சார் நிங்கதான் ஜெய்பிங்கனு எதிர்பார்தோம், இப்படி 2 லிட்டர் மட்டும் கறந்து ஏமாத்திட்டிங்களே ? என கேட்டார்கள்.
அதுக்கு ராமராஜன் “ நான் என்ன சார் பன்னுறது அவசரத்துல வரப்ப "காளை “ மாட்டை ஓட்டிட்டு வந்துட்டேன், அதுல இவ்வளவு தான் கறக்க முடிந்தது “ என்றார் கூலாக.
(கதை முடிச்சுடு …துங்குனவங்க முழிச்சுக்குங்க)
அதுபோல நானும் அவசரமா வந்ததால நிறைய PREPARE பன்ன முடியல, என்னால முடிந்த அளவு நடத்துறேன் பாத்துக்க்குங்க என கூறிவிட்டு நடத்த ஆரம்பித்தேன்.
எல்லாம் நடத்தி முடித்துவிட்டு “ யாருக்காவது எதாது சந்தேகம் இருந்தா கேட்களாம்” என்ரறேன்.( இதுக்கு பெயர்தான் வாயகுடுத்து வாங்கிகட்டிகிறது)
ஒரு மாணவன் எழுந்து கேட்டான் பாரு ஒரு கேள்வி !!!
“ இந்தியா தோற்கிறா போல எப்படி நீங்க கதை சொல்லலாம் “
அடங்கோய்யால … SUBJECT ல இருந்து ஒரு சந்தேகம் கேளுடானா கதைல கேட்ட அவன் நாட்டு பற்றை பாத்து நான் அழுவதா ? சிரிப்பதா?
இது ஒரு மீள் பதிவு
இதையும் படிக்கலாமே :
இதையும் படிக்கலாமே :
விஜய் - என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக துப்பாக்கியில் ..
எனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...
உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...
Tweet |
யாருக்கு என்ன விருப்பமோ அதுல இருந்து தானே கேள்வி கேப்பாங்க மாப்ள ஹிஹி!
ReplyDeleteநல்லவேளையாக 'பாஸ் என்கிற பாஸ்கரன்'-ல வர்றதுமாதிரி நீங்க கணக்கு டீச்சரான்னு கேக்காம போனாங்களே அதுவரைக்கும் சந்தோசம் ...!
ReplyDeleteஇந்தியன்னா சும்மாவா! காளை மாட்டுலியே பால் கறந்து விட்டானே!
ReplyDeleteநல்லா பார்க்க சொல்லுங்க கோமியமா இருக்க போகுது.....
அய்யோ...அய்யோ...அய்யோ...
ReplyDeleteஏங்க இப்படி கொலையா கொள்றீங்க...
ReplyDeleteஉங்களுக்கு மாணவனா வாய்ச்சவன் பின்ன வேறெப்படி யோசிக்கனும்ன்னு நீங்க நினைக்குறீங்க?
ReplyDeleteகுசும்பு ஜாஸ்திங்க உங்களுக்கு !
ReplyDeleteநல்ல "கதை"
ReplyDeleteரைட்டு...
ReplyDeleteநம்ம மக்களுக்கு பாடத்தில் எப்போதும் சந்தேகம் வராதுங்க...
கேள்வி நல்லாயிருக்கு. (இது மீள் பின்னூட்டம் அல்ல!)
ReplyDeleteஉங்க மாணவராச்சே...அதான் புத்திசாலித்தனமா கேட்டிருக்காரு
ReplyDeleteபாடத்தை விடுங்க பாஸ்.. அது கிடக்குது!! நம்ம மேட்டர் என்னாச்சு?
ReplyDeleteஇந்தியா தோற்கிறா போல எப்படி நீங்க கதை சொல்லலாம்?
நல்லவேளை காளை மாட்டுல இருந்து எப்படி பால் கறந்தார்னு கேட்காம விட்டாரே...
ReplyDeleteநல்ல வாத்தியார், நல்ல மாணவன்?!
ReplyDeleteபரவாயில்ல நல்லாவே கதைய ஆவது நீங்க சொன்னத கேட்டிருக்கான்
ReplyDelete