> என் ராஜபாட்டை : அஜித்தின் அடுத்த அதிரடி

.....

.

Friday, February 10, 2012

அஜித்தின் அடுத்த அதிரடி

 
டுத்த அதிரடிக்கு அஜீத் ரெடி! 
''பில்லா- 2 பத்திப் பேசலாம் பாஸ்!'' என்றவரிடம் ''எல்லாம் பேசலாமே!'' என்றதும் ''ஓ...யெஸ்!'' என்று தோள் தட்டுகிறார்.  
 ''ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?''  

# அந்த இடைவெளியைத்தான் நடந்து கடக்குராரோ ?
 
''ஒரு வருஷத்துக்கு ஒரு படம் பண்ணா  போதும்னு நினைக்கிறேன் நான்.  வெற்றியோ, தோல்வியோ இந்த முடிவைப் பாதிக்காம பார்த்துக்குறேன். 'மங்காத்தா’ பெரிய ஹிட் அடிச்சதாலேயே அஜீத் ரெண்டு மாசத்துக்கு ஒரு படம் பண்ணணும்கிற தேவை இல்லை. எனக்கான படங்கள் நிச்சயமா என்னைத் தேடி வரும். அதை யாராலும் தடுக்க முடியாது. ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் அதைச் சாப்பிடுறவனோட பெயர் எழுதப்பட்டு இருக்கும்கிறதை நம்புறவன் நான்!''

# ரொம்ப உண்மையான வார்த்தை தல 
 
''ரசிகர் மன்றங்களைக் கலைச்சதுக்கு அப்புறம் ரசிகர்களுடனான உறவு எப்படி இருக்கு?''  
''எப்போதும் போல், ரசிகர்கள் மனசுல நான் இருக்கேன். என் மனசுல அவங்க இருக்காங்க. இதுல எனக்கோ, என் ரசிகர்களுக்கோ எந்தக் குழப்பமும்  இல்லை!''

# ஆனா சிலருக்கு ரசிகர் மன்றம் இல்லாம எப்படி செய்தார் என குழப்பம் 
 
''எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜீத்... இதுவரை ஓ.கே! ஆனா, இப்போ யார் சூப்பர் ஸ்டார்?''
''சூப்பர் ஸ்டார்னா என் மனசுல எப்பவும் இருக்குறது ரஜினி சார்தான். அடுத்ததா அந்த நாற்காலியில யாரை வேணாலும் அமரவெச்சு பார்க்குற, ரசிக்கிற உரிமை மக்களுக்கு இருக்கு. அவர்களின் ரசனைக்குள் தலையிட்டு கருத்துச் சொல்ல நான் விரும்பலை. ரோட்ல போகும்போது ரெண்டு பக்கமும் பார்த்துக் கிட்டே போனா, கவனம் சிதறிடும். நாம போக வேண்டிய பாதை மாறிடும். என்னைப் பொறுத்த அளவில் என் பாதையில நான் போய்க்கிட்டு இருக்கேன். அந்தப் பாதை எங்கே போகுதோ, அங்கே நான் இருப்பேன். மற்றவங்களைப் பத்திப் பேச நான் விரும்பலை!''

# இதுதான் நேர்மையான பதில் ..

 
''அப்ப அஜீத்தோட பாதை அரசியலுக்குப் போகுமா?''
''நாலு காசு சம்பாதிக்க, பொழைக்கத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். ஆமாம், நான் சுயநலவாதிதான். கார், பங்களான்னு வசதியா வாழ்றதுக்குப் பணம் தேவை. அதுக்காக மட்டும்தான் சினிமாவுக்கு வந்தேன். மத்தபடி கலைச் சேவையாற்ற வந்தேன்னு எல்லாம் சொன்னா, அது பெரிய பொய். நடிப்பு மூலமா மக்களுக்கு அறிவுரை சொல்ற தகுதி எல்லாம் எனக்கு இல்லை. ஏன்னா, மக்கள் அதிபுத்திசாலிகள். எல்லா விஷயத்துலயும் தெளிவா இருக்காங்க. படம் நல்லா இருந்து பாராட்டுனா, சந்தோஷம். தப்பா இருந்து திட்டுனா, வருத்தப் பட மாட்டேன். அந்தத் தப்பை சரிசெஞ்சுக்க முயற்சிப்பேன். அவ்வளவு தான்!''
# இதுபோல உண்மையை சொல்வதால்தான் பலருக்கு உங்களை பிடித்துள்ளது 
 
''அப்போ அஜீத் நிச்சயமா அரசியலுக்கு வர மாட்டார்னு எழுதிக்கலாமா?''

'' 'To many cooks spoil the Broth’ -னு ஒரு பழமொழி இருக்கு. சமையல் அறையில ஒருத்தர், ரெண்டு பேர் சேர்ந்து சமைச்சா சாப்பாடு ருசியா இருக்கும். அதுவே பத்துப் பேர் கும்பலாச் சேர்ந்து சமைச்சா, அந்தச் சாப்பாடு சாப்பிடுற மாதிரி இருக்காது. ஏற்கெனவே தமிழ்நாட்டுல எக்கச்சக்க அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கி றேன். அரசியல்னா என்னன்னே தெரியாம, முழுசாப் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வெச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன். எனக்கு சினிமா தெரியும். அரசியல் தெரியாது. தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி, மக்களையும் குழப்ப மாட்டேன். சுருக்கமாச் சொல்லணும்னா, அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது!''

# அருகதையே இல்லாத பலர் அரசியல் உள்ளனர் தல ...

நன்றி : விகடன்  

இதையும் படிக்கலாமே :

மாணவர்களுக்காக : +2 மாணவர்களுக்கான கேள்வித்தாள் தொகுப்பு .

 

 

 

13 comments:

 1. விகடனில் படித்து விட்டேன் என்றாலும் கூடவே உங்களது கமெண்ட் ரசிக்க வைக்கிறது

  ReplyDelete
 2. maapla innoru sibiyaa nadathuyyaa!

  ReplyDelete
 3. #சமையல் அறையில ஒருத்தர், ரெண்டு பேர் சேர்ந்து சமைச்சா சாப்பாடு ருசியா இருக்கும். அதுவே பத்துப் பேர் கும்பலாச் சேர்ந்து சமைச்சா, அந்தச் சாப்பாடு சாப்பிடுற மாதிரி இருக்காது#
  உண்மையான வார்த்தைகள் தானே பாஸ்

  ReplyDelete
 4. அஜித்தின் வெளிப்படையான பேச்சுதான் அவரை பலருக்கு பிடிக்க காரணம்

  ReplyDelete
 5. மனதில் ஒன்று, வெளியில் ஒன்று என்று பேசாத நல்ல மனிதர் !

  ReplyDelete
 6. விகடனில் படித்தாலும் உங்கள் பதில்களும்(ஊதா நிறத்தில் இருப்பவை) அருமை.

  ReplyDelete
 7. தல வழி தனி வழி!
  உங்க கமெண்ட்ஸ் அருமை.

  ReplyDelete
 8. பொங்கலோடு சேர்ந்து கரும்பும் சேர்த்து சாப்பிட்ட மாதிரி இருக்கு சார்.

  கரும்பு = உங்க கமெண்ட்ஸ்.

  தொடர்ந்து எனக்கு நீங்கள் தரும் ஆதரவுக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 9. உண்மையை வெளிப்படையாக பேசுவதால் தான் உங்களுக்கு இப்புட்டு ரசிகர்கள் தல . உங்க கமெண்ட் அருமை

  ReplyDelete
 10. உங்க கமெண்ட்... ம்..அசத்துங்க

  ReplyDelete
 11. நல்ல கமெண்ட்ஸ்

  ReplyDelete
 12. அட்ரா..சக்க....கொண்டே புடுவேன்...

  ReplyDelete
 13. பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...