சில தினங்களுக்கு முன்பு ஏன் உறவினர் ஒருவர் மயிலாடுதுறையில் உள்ள LKS நகை கடையில் ஒரு நகை எடுத்தார். அவர் வாங்கிய நகையை பார்த்தேன். நன்றாக இருந்தது. விலையை பற்றி பேச்சு வந்தது. நகை ரசீதை காட்டுங்கள் விலையை பார்க்கலாம் என கேட்டு வாங்கி பார்த்தால் பெரிய அதிர்ச்சி. காரணம் அந்த ரசீதை கீழே குடுத்துள்ளேன் நீங்களே பாருங்கள் தெரியும்.
- இதில் எந்த இடத்திலும் கடையின் பெயர் இல்லை
- வாங்கிய பொருளின் பெயர் இல்லை
- பொருளின் அளவு , செய்கூலி , சேதாரம் பற்றி ஒன்றும் இல்லை
- கடையின் விதிமுறைகள் ,வரிகள் பற்றி ஒன்றும் இல்லை
இதைவிட ஒரு கொடுமை , நகையின் அளவு 7.750 என போட்டிருந்ததாம், ஆனால் அளக்கும் போது 7.640 மட்டும் இருத்து இருக்கிறது காரணம் கேட்டதுக்கு அங்கு உள்ள விற்பனையாளர் சொன்ன பதில் காமெடியின் உச்சகட்டம். அவர் சொல்லியுள்ளார் “ எடை மெஷினில் உள்ள பாத்திரத்தில் எடைபோட்டால் இரு அளவு நகையை மட்டும் போட்டதால் ஒரு அளவு , முன்பு உள்ளது பாத்திரத்துடன் போட்ட அளவு “ என்று சொல்லியுள்ளார். நாம நகை வாங்க போறோமா அல்லது நகையுடன் அந்த எடை மிஷினில் உள்ள பாத்திரத்தையும் வாங்கபோகிரோமா ?
இவர்கள் இந்த விற்பனைக்கு வரி கட்டுவார்களா ? எந்த விலையின் அடிப்படையில் வரிகட்டுவார்கள்? நகை வாங்கும் அனைவரும் பில் போட்டு நகை குடுங்கள் என கேட்க தெரிந்தவர்கள் என சொல்லமுடியாது ? இது அரசாங்கத்தை ஏமாற்றும் வேலை இல்லையா ? இதை திருட்டு என்று கூட சொல்லலாம்.
இவர்களை எப்படி தட்டி கேட்பது ? இதற்க்கு எங்கு புகார் அளிக்க வேண்டும் ? என விவரம் அறிந்தவர்கள் பின்னுடத்தில் தெரிவிக்கலாம். இந்த கடை மட்டும் அல்ல பல கடைகளில் இதுபோல நடக்கின்றது.
இதையும் படிக்கலாமே :
எனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...
பிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவரும் வருக.
Tweet |
விழிப்புணர்வுப்பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteவிழிப்புணர்வுப்பகிர்வுக்கு நன்றி..
ReplyDeletethanks
ReplyDeleteராஜா தவறு கடையின் மீது இல்லை! உங்கள் உறவினர் மீதுதான்! முறையான பில் இல்லாமல் வாங்குவதும் தவறுதான் நாளை உங்கள் நகை தரமற்றதாக இருந்தால் அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடியாது இது நாங்கள் கொடுத்த நகையே இல்லை எனக்கூறலாம்! முறையான பில் போட்டு வாங்குவது சிறந்தது!நகையை ஜெராக்ஸ் எடுப்பதும் நல்லது!
ReplyDeletethanks
ReplyDeletenanri..raja...
ReplyDeleteமுதலில் அது நகைவாங்கியதற்கான பில்லே அல்ல என்று நினைக்கிறேன். இது போன்ற எஸ்டிமேட், நீங்கள் பழைய நகையை எக்ஸ்சேஞ்ச் பண்ணும் போதுதான் இப்படி எழுதித் தருவார்கள். இந்த சீட்டும் அப்படித்தான் தோன்றுகிறது.
ReplyDeleteப.ரா.அண்ணன் சொல்வது போலதான் எனக்கும் தோன்றுகிறது.கடைக்காரரிடமே பில் கேட்டு வாங்கலாம்.பல கடைகளில் இப்போது இன்சூரன்ஸ் வேறு செய்து கொடுக்கிறார்கள்.ஆனால் இந்த இன்சூரன்ஸ் எந்த அளவுக்கு பலனளிக்கும் என தெரியவில்லை.
ReplyDelete//கோகுல் said...
ReplyDeleteப.ரா.அண்ணன் சொல்வது போலதான் எனக்கும் தோன்றுகிறது.கடைக்காரரிடமே பில் கேட்டு வாங்கலாம்.பல கடைகளில் இப்போது இன்சூரன்ஸ் வேறு செய்து கொடுக்கிறார்கள்.ஆனால் இந்த இன்சூரன்ஸ் எந்த அளவுக்கு பலனளிக்கும் என தெரியவில்லை.
///
Aamaamyaa... Indha insurance paththi onnum puriyaamaththaan pannurom...
:-)
இந்த பதிவை இன்னும் இணைக்கலையே. ஏன்?
ReplyDeleteஎல்லா இடத்திலும் இந்த கூத்துதான் நடக்குதுங்க...
ReplyDeleteRepeat.. PR
ReplyDeleteஎல்லா நகைக் கடையிலும் இப்படித்தான்!
ReplyDeleteஆனால் பில் தேவை என்று சொன்னால் போட்டுக் கொடுப்பார்கள்,வரியெல்லாம் சேர்த்து.பலர் அதைத் தவிர்க்க இந்தமாதிரி வாங்கிக்கொள்கிறார்கள். இவர்களும் குற்றவாளிகள்தான்.
ReplyDeleteஇந்த திருட்டை அரசே கண்டும் காணாமல்தான் போகுது சகோ
ReplyDeletelksபெயர் பெற்ற கடையாச்சே,அங்கயுமா இப்படி பில் த்ருகிறார்கள்.ஆனாலும் நகைக்கடக்காரர்கள் அடிக்கும் கொள்ளை இருக்கே மக்கள கண் முன்னாடியே மக்களால் தரப்படும் கொள்ளைங்க.
ReplyDeleteயாரு கேப்பது?எதோ நகைய வாங்கினா போதும்ங்ற நினைப்பு மட்டும்தான இருக்கு.
உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளேன்
ReplyDeleteபல்சுவை பதிவர்கள்
எல்லா இடத்திலும் இதே போல் தான் !
ReplyDeleteதாயகத்திலும் சரி, அயலகத்திலும் நகைக்கடை விலை விவரம் புரியவே புரியாது. நகையின் விலை என்னவென (சிறிய மோதிரமோ, காதணியோ) கேட்போமாயேனால், அந்நகையின் எடை அச்சடித்து கோர்த்திருந்தும், அதன் எடையை நிரூபணம் செய்தபின்னும் நேரடியாக கிராமிற்கு இவ்வளவு எனக் கூறமாட்டார்கள். கால்குலேட்டரை மாங்கு மாங்கு என பொத்தான்களை அழுத்தி அழுத்தி நாமும் கண்கள் வீங்க காத்திருந்து வெறுத்து போய் ஒதுங்கும் போது ஒரு தொகை வரும். அது ஊடகங்களிலோ அல்லது அந்தந்த பிரபல நகைக்கடங்களின் முகப்பில் தொங்க விட்டிருக்கும் விலை விவரப் பட்டியலுக்கோ சம்பந்தமில்லாமல் இருக்கும். கேட்டால், செய்கூலி சேதாரம் என்பர். சிலவற்றிற்க்கு சதவீதம், சிலவற்றிற்க்கு குத்து மதிப்பாய் தொகை என்பதாகத்தான் இருக்கும். அதே நகையினை இரண்டு நாள் கழித்து அதே நபரிடம் விலை கேளுங்கள்.. விலை வித்தியாசம் விகிதாச்சாரம் இன்றி நிச்சயம் மாறி இருக்கும். வரி தவிர்ப்பிற்காக 2nd sale என பில்லும் சில கடைகள் தருவதுண்டு. எல்லாத்திற்குமே வாடிக்கையாளர்களை குறை கூறுவது ஏற்பதற்கில்லை. அப்படியெனில் ஒவ்வொரு பொருளை குறித்தும் கற்றுணர்ந்து தான் வாங்க வேண்டிவரும். துணிமணிகளாக இருக்கட்டும்; மளிகைசாமான்களாக இருக்கட்டும்; விலை உயர்ந்த தங்கம், வைரமாக இருக்கட்டும்; இது குறித்த ’அறிதல் / விழிப்புணர்வு’ வாடிக்கையாளர்களுக்கு இல்லை என்பதற்காக வர்த்தக நிறுவனங்கள் அவர்களை ஏமாற்றுவதை நியாயம் என எடுத்துக்கொள்ள முடியாது.
ReplyDeleteதவறு இருவர் மீதும் இருக்கிறது..
ReplyDeleteமுறையான பில் கொடுக்காதது கடையின் தவறு. முறையான பில் மற்றும் எடை இல்லாமல் வாங்கியது உங்கள் உறவினரின் தவறு!!
மீண்டும் ஒரு முறை நகை வாங்கப் போனால், ரசீது கேளுங்கள்.. கொடுக்க மறுத்தால், நிச்சயம் வழக்கு தொடுக்கலாம்!