> என் ராஜபாட்டை : விஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா ? - விஜய் பரபரப்பு பேட்டி

.....

.

Tuesday, February 21, 2012

விஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா ? - விஜய் பரபரப்பு பேட்டி

 சினிமா செய்திகள் தொகுப்பு :
2011-ம் ஆண்டுக்கான தேசிய விருது பெறும் கலைஞர்கள் மற்றும் படங்​களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிறந்த படங்​களைத் தேர்வு செய்யும் ஜூரி​களில் ஒருவராக, நம்ம ஊர் டைரக்டர் ஜனநாதன் இருக்கிறார். இதுவரை பார்த்த படங்களில், தமிழுக்குத்தான் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.

''படங்கள் தயாரித்து​க்கொண்டு இருப்பவர்கள், தொழி​லாளர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்​கத் தயாராக இருக்கிறார்​கள். ஆனால், படமே எடுக்காத தயாரிப்​​​​பாளர்கள்​தான் சங்கத்தில்இருந்து​​கொண்டு சண்டை போடுகிறார்கள்'' என்று கொந்தளிக்கிறார் அமீர். இவருக்​குப் போட்டியாக, ''கேமராவைத் தொடாத சிவா, புரொடக்ஷன் வேலை பார்த்தே பல வருடங்​கள் ஆன சந்திரன் போன்ற​வர்கள்தான் பெப்ஸியில் பஞ்சாயத்​துப் பேச வர்றாங்க...'' என்று கடுப்பாகிறது தயாரிப்பாளர்கள் தரப்பு.
'துப்பாக்கி’ படம் ட்ராப் என்று கிளம்பி இருக்கும் செய்தியால் விஜய் படுஅப்செட். ஆளாளுக்கு  செல்போனில் துளைத்து எடுக்கிறார்​களாம். 'முதல் ஷெட்யூல் முடிஞ்​சிடுச்சு. விரைவில், அடுத்த ஷெட்யூல் ஆரம்பம்...’ என்று, ஒவ்வொருவருக்​கும் எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகிறார்.


கோலிவுட்டில் பெப்ஸி தொழிலா​ளர்கள் சம்பள உயர்வு கேட்டுப் போராடு​வதால், தமிழகத்தில் எங்கேயும் ஷூட்டிங் நடக்கவில்லை. ஆனால், 'மாற்றான்’ படத்தின் பாடல் காட்சியை தெலுங்கு டான்ஸர்களைக்கொண்டு ஆந்திராவில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் கூலாகப் படமாக்கி வருகிறார்கள். அதுபோலவே, 'பில்லா 2’ படப்பிடிப்பும் மும்பையில் கனஜோராக நடக்கிறது.

'மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படத்தின் இசையமைப்பாளர் அச்சு. மலையாள​த்தில் 1,000 படங்களுக்கு மேல் இசை​யமைத்த ராஜாமணியின் புதல்வர். படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதி இருப்பவர், நடிகை ரோகிணி.

நன்றி : ஆனந்த விகடன் 

இதையும் படிக்கலாமே :

உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...

விஜய்யின் துப்பாக்கி படத்தின் கதை வெளியானதா ? முருகதாஸ் அதிர்ச்சி

 

11 comments:

 1. அப்போ துப்பாக்கிய கைவிடலையா? சத்திய சோதனை!

  ReplyDelete
 2. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  அப்போ துப்பாக்கிய கைவிடலையா? சத்திய சோதனை!
  //
  பவர் ஸ்டார் வச்சு நீங்க படம் எடுக்க போரின்கலாமே ?

  ReplyDelete
 3. ஆமா டாகுடர் துப்பாக்கி எடுத்தா எங்க பவர் ஸ்டார் பீர்ங்கி எடுப்பார்......

  ReplyDelete
 4. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஆமா டாகுடர் துப்பாக்கி எடுத்தா எங்க பவர் ஸ்டார் பீர்ங்கி எடுப்பார்......
  //
  நாங்க ஓட்டம் எடுப்போம்

  ReplyDelete
 5. raja sir...
  maranthu irukkura vijaiy-i
  ninaivu paduthikkittee irukkeenga..

  ReplyDelete
 6. சர்தான்...துப்பாக்கி வருமாம்... - மக்களே ஓடி ஒளிய இடம் தேடிக்குமாறு இப்பவே உசார்.

  ReplyDelete
 7. துப்பாக்கி சுட்டே தீரும்?!

  ReplyDelete
 8. நல்ல தகவல்....


  "நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com"

  ReplyDelete
 9. என்ன த்ம்பி திடீர்னு கிளாமர் பக்கம் உங்க காத்து அடிக்குது போல

  ReplyDelete
 10. விஜய் பத்தி வரிந்து கட்டிக்கிட்டு எழுதறிங்க. வாழ்த்துக்கள்!.

  ReplyDelete
 11. நாட்டுக்கு ரொம்ப முக்கியம்!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...