> என் ராஜபாட்டை : விஜய் - என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக துப்பாக்கியில் ..

.....

.

Saturday, February 25, 2012

விஜய் - என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக துப்பாக்கியில் ..


விஜய் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்த படம் 'போக்கிரி'. படத்தில் இறுதிகட்ட காட்சியில் தான் அவர் போலீஸ் அதிகாரி என தெரியவரும்.  முழுப்படத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்தது இல்லை.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'துப்பாக்கி' படம் முழுவதுமே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் விஜய். முதற்கட்டமாக மும்பையில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

'துப்பாக்கி' படத்தின் முக்கால்வாசி கதை மும்பையில் நடைபெறுவது போன்று அமைத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்திற்காக பெண் பார்க்கும் காட்சியை ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அக்காட்சியில் விஜய் போலீஸ் உடை அணிந்து காஜல் அகர்வாலை பார்க்க போவது போன்று காட்சி அமைத்து இருக்கிறார்கள்.

தற்போது நடைபெற்று வரும் பெப்ஸி பிரச்னையால் படப்பிடிப்பு தடைப்பட்டு இருக்கிறது. இந்நேரத்தில் 'துப்பாக்கி' படத்தில் தனது வேடத்திற்கு ஏற்றவாறு தனது உடம்பை மாற்றி வருகிறாராம்

செய்தி 2  :

'முப்பொழுதும் உன் கற்பனைகள்' மற்றும் 'காதலில் சொதப்புவது எப்படி' ஆகிய 2 படங்களுக்கும் ஒரே நாளில் வெளியானது. இரண்டிலுமே நாயகியாக நடித்தார் அமலாபால்.

'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தில் சாருலதா என்ற சாஃப்ட்வேர் எஞ்சினியராகவும், 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் பார்வதி என்ற கல்லூரி செல்லும் பெண்ணாக நடித்து இருக்கிறார். 2012ம் ஆண்டு தொடக்கத்தில் அவர் நடித்து வெளியான 'வேட்டை' படமும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

இரண்டு படங்களிலுமே அமலாவின் நடிப்பு வரவேற்பை பெற்றது.

காதலில் சொதப்புவது எப்படி படத்தின் தெலுங்கு பதிப்பான LOVE FAILURE படம் அங்கு பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதற்கு பலனாக விநாயக் இயக்கத்தில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அமலாபால்.

இந்த வருடத்தில் தான் நடித்து வந்த படங்களின் வரவேற்பு, பெரும் நாயகர்கள் நடிக்க இருக்கும் படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பது என 2012 அமலா வருடமாக அமைந்து இருக்கிறது.

நன்றி : விகடன்


இதையும் படிக்கலாமே :இதுக்கு பெயர் என்ன ?திருட்டா ? ஏமாற்றா ?


6 comments:

  1. புதிய தகவல் அன்பரே

    ReplyDelete
  2. அப்படியா. தகவல்கள் நன்று. தமிழ்மணத்தில் நீங்கள் எழுதாதது மிக வருத்தமே. ஆனாலும் காரணம் வலுவாக இருந்தால் ஏற்புடையதே. டாஷ்போர்டு வழியாகவே உங்களைப் படிக்க முடிகிறது.

    ReplyDelete
  3. என்னது .., விஜய் படம் புல்லா போலிஸ் கெட்டப்புல வர்றாரா.....? என்ன கொடுமை ராஜா சார் இது...?

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...