> என் ராஜபாட்டை : Facebook கலாட்டா

.....

.

Sunday, December 30, 2012

Facebook கலாட்டா
சமிபத்தில்  நான் முக புத்தகத்தில் ரசித்தவை. உங்கள் பார்வைக்கும் கைபேசியில்  துவங்கிய 
நம்  காதல் - உன் அண்ணன் 
கை பேசியதால் 
முறிந்தது .

# என்னா அடி ????
=======================================================================

கடவுள் : உனக்கு என்ன வரம் வேண்டும் ?

பக்தன் : அழகான மனைவி வேண்டும்.

கடவுள் : நி முஸ்லிம்னா கத்ரினா தாரேன், இந்துனா அனுஷ்கா தாரேன், கிருத்துவன்னா ஜெனிலியா தாரேன். உன் பெயர் என்ன?

பக்தன் : அப்துல் நாராயன பெர்ணாட்டஸ்

கடவுள் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!

====================================================================

அம்மா : ஹிட்லர்னா யாரு ?

மகன்  : தெரியாது..

அம்மா : கொஞ்சம் படிப்புல கவனமா இரு.

மகன் : பிரியா ஆண்டினா யாரு?

அம்மா : தெரியாது..

மகன் : கொஞ்சம் அப்பா மேல கவனமா இரு.
========================================================================

OFFICER : யோவ்… உன் வீட்டுல பீஃஸ் போயி ஒரு மாசம் ஆகுது இப்பதான் வந்து COMPLIANT பன்னுற ?

சதிஷ் : சாரி  சார் .. நான் வழக்கமான POWER CUT ணு நினைத்தேன்.

(சதிஷ் தமிழ் நாட்டுகாரர் என்பது குறிப்பிடதக்கது)
===============================================================

கவிதை  :

அருகம்புல் போல நாம் வளர்த்த காதலை
உங்க அப்பன்
எருமை மாடு போல மேய்த்து விட்டான் ..

=====================================================================இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.

#நீங்களும் உங்க பழைய இளைய ஆதினம் நித்தியும் மூடிக்கிட்டு இருந்தாலே பாதி பிரச்சினை பெண்களுக்கு இருக்காது
===================================================================
கருணாநிதி சொன்னதுபோல் விரைவில் பிரதமராவேன் -ப.சிதம்பரம்.

என்னது கருணாநிதி சொன்னது போல விரைவிலா?அய்யயோ மன்மோகன்ஜி இனி தனியா வாக்கிங் போகாதிங்க.எதோ ப்ளான் இருக்கு.
======================================================================


அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ்
விளையாட்ட
பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ
வேனும்ன எதாவது கேட்டு பாரு

இந்தியன் : சொல்லு டென்னிஸ்
நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ?

அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம -்
நல்ல சாவே வராதுடா !
======================================================================================

ஹலோ சூரியன் FM ஆ..??

வணக்கம் சார்.. நான் செங்கோட்டைல இருந்து வரதராஜன் பேசுறேன்..!!

சொல்லுங்க சார் நீங்க யாருக்கு மெசேஜ் சொல்ல விரும்புறீங்க..??

என் பொண்டாட்டி என் கூட சண்டை போட்டுட்டு கதவை பூட்டிட்டு கோச்சிக்கிட்டு உள்ள இருக்கா சார்.. அவளை கதவை திறக்க சொல்லுங்க..

அப்புறம் அவளுக்காக "வாடி பொட்டப்புள்ள வெளியே.. என் வாலிபத்தை நோகடிச்ச கிளியே" பாட்டை டெடிகேட் பண்ணுங்க..!!
==========================================================================

இஸ்லாமியர்களைப் போல அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் - மதுரை ஆதீனம்

#முதல ...நீ சட்டை போடுய்யா ....
=====================================================================================
 
சர்வர்: சார்...என்ன சாப்பிடுறீங்க?

சாப்பிட வந்தவர்: நாலு கிலோ அரிசியும், ஒரு கிலோ உளுந்தும் ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா...
 
சர்வர்: ?.....!.....?.
==================================================================================

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 
  இதையும் படிக்கலாமே :

தண்ணி அடிப்பவர்கள் கவனத்திற்கு ...

 


உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.":


அஜித்தின் அடுத்த படம் ? விஜய் 25":

7 comments:

 1. எல்லாமே செம கலாட்டா...

  ReplyDelete
 2. வாவ் சூப்பர் சார் உண்மைய சிரிப்பா இருந்துச்சு

  ReplyDelete
 3. //(சதிஷ் தமிழ் நாட்டுகாரர் என்பது குறிப்பிடதக்கது)//

  Nice! :)

  ReplyDelete
 4. புத்தாண்டு வாழ்த்துக்கள் .....

  ReplyDelete
 5. அன்பின் ராஜா - அட்டகாசம் - கலக்கறீங்க போங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...