> என் ராஜபாட்டை : இந்தி மங்காத்தாவில் அஜித்! ??

.....

.

Friday, December 7, 2012

இந்தி மங்காத்தாவில் அஜித்! ??


 
 
இந்தி மங்காத்தாவில் அஜித்! : வெங்கட்பிரபு திட்டம்!!

மங்காத்தாவின் இந்திப் பதிப்பில் அஜித்தை நடிக்க வைக்க டைரக்டர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார். அஜித்தின் 50வது படம் மங்காத்தா. வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித் நெகட்டிவ் ஹீரோ பாத்திரத்தில் கலக்கியிருந்தார். அர்ஜூன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். த்ரிஷா நாயகியாக நடித்திருந்தார். பிரேம்ஜி அமரன், மகத், வைபவ் உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்திருந்தனர். லட்சுமி ராய்க்கு கவர்ச்சிகரமான பாத்திரம். இப்படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் வெங்கட் பிரபு. இதிலும் அஜித்தை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாராம். இதை அஜித்திடம் தெரிவித்துவிட்ட நிலையில், வெங்கட் பிரபுவின் விருப்பத்திற்கு அஜித் என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை. இருப்பினும் அடுத்து, தான் நடிக்கப் போகும் புதிய படத்தை முடித்த பிறகே அஜித் வர முடியும் என்று தெரிகிறது. வெங்கட் பிரபுவும் பிரியாணி படத்தில் பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு இந்தி மங்காத்தா தாமதம் ஆகும் எனத் தெரிகிறது.

ஒரு பாடலுக்கு ஆடும் தனுஷ்

நடிகைகள் ஒரு பாடலுக்கு ஆடுவது சாதாரணம். இந்தியில் நடிகர்களும்கூட ஒரு பாடலுக்கு ஆடுவதுண்டு. சமீபத்தில் வெளியான அஜய் தேவ்கானின் சன் ஆஃப் சர்தார் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார் சல்மான்கான். ஆனால் தமிழில்…? இரண்டு பேர் சேர்ந்து நடிக்க யோசிக்கும் சூழலில் ஒரு பாடலுக்கு ஆடுவது என்பது நடவாத காரியம். ஆனால் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் இந்த அபூர்வம் நிகழ்வதுண்டு. தனுஷ் தயாரிக்கும் முதல் படமான எதிர்நீச்சலில் சிவ கார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிக்கின்றனர். வெற்றிமாறனின் உதவியாளர் செந்தில் படத்தை இயக்குகிறார், அனிருத் இசை. படத்தின் ஸ்டார் மற்றும் மார்க்கெட் வேல்யூவை அதிகரிக்கும் பொருட்டு ஒரு குத்துப் பாடலுக்கு ஆடுகிறார் தனுஷ். ஏற்கனவே பாடல் எழுதுவது, பாடுவது என்று எதிர்நீச்சலில் ஆஃப் ஸ்கிரீனில் பங்களிப்பு செலுத்தியவர் ஒரு பாடலுக்கு ஆடுவதன் மூலம் ஆன் ஸ்கிரீன் பங்களிப்பையும் செய்கிறார்..
டிஸ்கி  : facebook ல படிச்சது ..
இதையும் படிக்கலாமே :Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த இணையத் தளங்கள் ...!

 

உறவுகள்  வலு பெற ..

மாதம் மாதம் இலவச RECHARGE செய்ய வேண்டுமா ?


4 comments:

 1. தல ஹிந்தியில் போனால், நாம எங்கே போறது வாத்தீ...?

  ReplyDelete
  Replies
  1. உங்களை ஹீரோவா போட்டு விக்கி படம் எடுக்க போறாராம் ..

   Delete
 2. தல... தமிழுக்கு தேவை!

  ReplyDelete
 3. தல எப்பவும் டாப்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...