> என் ராஜபாட்டை : கமல் + சூர்யா + ஷங்கர் = இந்தியன் 2

.....

.

Thursday, April 25, 2013

கமல் + சூர்யா + ஷங்கர் = இந்தியன் 2கமல்- ஷங்கர் இணைந்த முதல் படம் இந்தியன். இப்படத்தில் கமல் இரண்டுவிதமான கெட்டப்பில் நடித்தார். மனீஷாகொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி- செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறிப்பாக கமலின் இந்தியன் தாத்தா கெட்டப் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அதன்பிறகு கமலை வைத்து ஷங்கர் படம் இயக்குவதற்கான சூழல் அமையவில்லை. இந்த நிலையில், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் கமலை வைத்தே ஷங்கர் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முதல் பாகத்தில் இரண்டு வேடங்களிலும் கமலே நடித்திருந்தார். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் இந்தியன் தாத்தாவாக மட்டுமே கமல் நடிக்கிறாராம். இளமையான கமலாக சூர்யா நடிக்கிறாராம். தற்போது ஐ படத்தை இயக்கி வரும் ஷங்கர், இதுசம்பந்தமாக கமல், சூர்யாவிடம் பேசி வருகிறாராம். கமலின் விஸ்வரூபம்-2 படவேலைகள் முடிந்ததும் இந்தியன்-2 படவேலைகள் தொடங்கும் என்று தெரிகிறது.

====================================================================


 
V .T . V . கணேஷ் தயாரித்து நடிக்கும் ‘ இங்க என்னா சொல்லுது ‘

தரமான நகைச்சுவை கலந்த படங்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விண்ணை தாண்டி வருவாயா படத்தில் நடிகராக அறிமுகமாகி , ‘ இங்க என்னா சொல்லுது ‘ என்ற வசனத்தின் மூலமும் , தனது வித்தியாசமான வசன குரல்வளம் மற்றும் உச்சரிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்த V.T.V. கணேஷ் தற்போது தனது V.T.V.PRODUCTIONS என்கிற நிறுவனம் மூலம் படத்தயாரிப்பில் இறங்கி விட்டார்.

தன்னை பிரபலமாக்கிய ‘இங்க என்னா சொல்லுது’ என்ற வசனத்தையே தான் தயாரிக்கும் முதல் படத்திற்கு தலைபபாக வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விடிவி கணோஷே இப்படத்தின் கதாநயாகனாக நடித்து வருகிறார் .அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்து வருகிறார் . முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வர்ணமால்யா நடிக்கும் இப்படத்தில் கணேஷுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை இதுவரை பார்த்திராத வரையில் கவர உள்ளார் சந்தானம் . இவர்களுடன் பாண்டியராஜன், ஸ்ரீநாத், மயில் சாமி ஆகியோரும் நடித்து வருகின்றனர் .சென்னையிலும் மலேசியாவிலும் படமாக்கக பட்டு வரும் இப்படத்தின் ஒளி பதிவை செய்பவர் காக்க காக்க , பில்லா 2, மற்றும் பல வெற்றி படங்களுக்குஒளிப்பதிவு செய்த R .D . ராஜசேகர் .

பிரம்மாண்டமான பல படங்களுக்கு அரங்கு அமைத்த ராஜீவன் கலை இயக்குனராக பணியாற்ற, நேர்த்தியான வேகமான பட தொகுப்பின் மூலம் இன்றைய தலைமுறையை க் கவர்ந்த ஆன்டனி படத்தொகுப்பு செய்ய தரன் இசை அமைத்து உள்ளார் . வானம் படத்தின் வசனகர்த்தா ஞான கிரியின் வசனத்தில் , விஜய் படங்களான ப்ரியமுடன் , யூத் ஆகிய படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா இப்படத்தை செல்வா என்ற பெயரில் இயக்கி வருகிறார் .

நன்றி : facebook

இதையும்படிக்கலாமே :

  

5 comments:

 1. இங்க என்னா சொல்லுது - படம் என்ன சொல்லப் போகுதோ...?

  தகவல்களுக்கு நன்றி...

  ReplyDelete
 2. இளமையான கமலாக சூர்யா நடிக்கிறாராம்.\\ இளமையான கமல் தான் கதைப்படி செத்து போயிட்டாரே... #டவுட்டு....

  ReplyDelete
 3. இந்தியன் 2 வெற்றி பெறட்டும்..

  ReplyDelete
 4. இரண்டுமே புதிய செய்திகள். முதல் செய்தி உறுதித்தன்மை குறைவுதான்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...