> என் ராஜபாட்டை : கணவன் , மனைவி ,தெரியாது.. முடியாது.

.....

.

Thursday, April 4, 2013

கணவன் , மனைவி ,தெரியாது.. முடியாது.

நண்பர்களே சமிபத்தில் முக புத்தகத்தில்(FACEBOOK) படித்த இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
 
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?


1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக்கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு, மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன...?
(ரொம்ப இல்லைங்க ஒன்னே ஒன்னு தான்....)

நிம்மதி.....

=========================================================================================
தெரியாது...! முடியாது...!கிட ­ையாது...!
*************** ­*************** ­**************************************
 1. உலகம் போற்றும் சாக்ரடீசுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
 2. குயிலுக்குக் தனக்கென கூடு கட்டவோ, தன் முட்டையை அடைகாக்கவோதெரியாது.
 3. செந்நாய் எனப்படும் விலங்குக்குகுரைக்கத் தெரியாது.
 4. ஒட்டகத்துக்கு நீந்தத் தெரியாது.
 5. மனிதனால் கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியாது.
 6. பிளாட்டினம் எனும் உலோகத்தை எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாது.
 7. எமு எனும் பறவையால் பின்புறமாக நடக்க முடியாது.
 8. வாத்தின் "க்வாக்" சத்தத்துக்கு மட்டும் எதிரொலி கிடையாது.

 9. பெல்ஜியம் நாட்டில் சினிமாவுக்குத் தணிக்கை கிடையாது.
 10. கடல் சிலந்தி, ஸ்குவிட்களுக்கு ­ம் காது கிடையாது.
 11. சுவிட்சர்லாந்து ­ நாட்டிற்கென்று தனி தேசிய மொழி கிடையாது.
 12. இசைமேதை பீத்தோவனுக்குப் ­ படிப்பறிவு கிடையாது.
 13. வண்ணத்துப் பூச்சியின் இறக்கையில் பறக்கும் தசைகள் கிடையாது.
 14. நீளமான கடல் பிராணி ஆக்டோபஸ்க்கு முதுகெலும்பு கிடையாது.
 15. இங்கிலாந்து அரசியின் காருக்கு எண்கள் எதுவும் கிடையாது.
 16. பறவைகளுக்கு மூக்கால் நுகரும் சக்தி கிடையாது.
 17. ஆப்கானிஸ்தானில் ­ ரயில்கள் கிடையாது.
 18. ஆங்கிலத்தில் ஒன்றிலிருந்து நூறு வரை எழுத்தால் எழுதும் போது"A" எனும் எழுத்து கிடையாது.
   இதையும்படிக்கலாமே :

  எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்?":  
   
  இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?

7 comments:

 1. மிகவும் பயனுள்ள தகவல்கள். கணவன் மனைவி உறவு மேம்பட அருமையான யோசனைகளை மிக்க நன்றி.

  சாக்ரடிஸ், பீத்தோவன் போன்றவர்கள் அவர்களே பல்கலைக் கழகங்கள், அவர்கள் வேறெங்கும் போய்ப் பயில வேண்டியதில்லை, அவர்களிடம் இருந்து எல்லோரும் கற்றுக் கொள்ளலாம்!!

  ReplyDelete
 2. பீத்தோவானுக்கு காது கூட கேட்காது என்று கேள்வி.... நன்றி...

  ReplyDelete
 3. 27 மட்டும் போதும் என்றால் கிடைக்குமோ நிம்மதி...? !

  தகவல்களின் தொகுப்பிற்கு நன்றி...

  ReplyDelete
 4. இந்த லிஸ்ர அண்ணிதான் போட்டுக் கொடுத்துள்ளா என்பதில்
  சந்தேகமே இல்லை ! பாவம் உங்களுக்கு எப்படி நின்மதி கிடைக்கப்
  போகுதோ :)

  ReplyDelete
 5. அட அந்த ஒன்று தாங்க 27 -லயும் அடக்கம்....

  ReplyDelete
 6. உங்களுக்கு 27+27 போட்டால் வருவது தானே நிம்மதி

  ReplyDelete
 7. நல்ல கணவனுக்கு மனைவி என்பவள் மட்டுமே “நிம்மதி“.

  பகிர்வில் நிறைய அறிந்து கொண்டேன்.
  நன்றி என் ராஜபாட்டை.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...