> என் ராஜபாட்டை : HOTSUITE

.....

.
Showing posts with label HOTSUITE. Show all posts
Showing posts with label HOTSUITE. Show all posts

Tuesday, April 9, 2013

பதிவர்கள் கவனத்திற்கு ...



இன்றைய நிலையில் பல புதிய பதிவர்கள் தினமும்பதிவு எழுதிகின்றனர் .சிலர் வாரம் ஒன்று இரண்டு என்றும் எழுதுவதுண்டு . ஒவ்வொருவருக்கும் பதிவு எழுதுவதில்வித்தியாசம் இருக்கும் .சிலர் கவிதைகள் மட்டும் எழுதுவார் . சிலர் சினிமா , அரசியல் , மொக்கை எனகலந்துகட்டி அடிப்பார்கள் . (சிலர் அடுத்தவர்களை குறை கூற மட்டுமே பதிவு போடுவார்கள் ).

இப்படி நாம் கஷ்டப்பட்டு எழுதும்பது நிறைய பேரை சென்றடைய வேண்டும் என நினைப்பது இயல்புதான் . அப்படி எழுதும் பதிவை எப்படி பிரபலபடுத்துவது ?.  எளிதான வழி திரட்டிகளில் இணைப்பது . அதை விட எளிய வழி ஒன்று உள்ளது . அதை பற்றிதான் பார்க்க போகிறோம் .

பதிவர்கள் அனைவரும் கண்டிப்பாக FACEBOOK இல் கணக்கு வைத்திருப்போம் . உங்கள் FACEBOOK WALL இல் உங்கள் பதிவை வெளியிடலாம் . அதுமட்டுமில்லாது பல FACEBOOK GROUP, AND FACEBOOK PAGE  இல் இணைந்து விட்டு அதில் உங்கள் பதிவின் லிங்க்கை வெளியிடலாம் . நாம் ஒவ்வொரு GROUP, PAGE ஆக சென்று பதிவை வெளியிடுவது நேரத்தை விரையமாக்கும் . அனைத்து குருப் மற்றும் பக்கங்களில் ஒரே நேரத்தில் வெளியிட்டால் எப்படி இருக்கும் ? அதுக்கு உதவுவதே இந்த பதிவு .


கிழே உள்ள சில லிங்க்கில் சென்று ஒரே கிளிக்கில் அனைத்து குருப்பிலும் உங்கள் பதிவை வெளியிடலாம் . இதை நான் பயன்படுத்தி உள்ளேன் .


               இதில் உங்கள் FACEBOOK கணக்கில் உள்ள அனைத்து குருப் , பேஜ் ,நண்பர்கள் அனைவரும் வருவார்கள் . சிலவற்றை மற்றும் தெரிந்து எடுக்கவும் . அனைத்துக்கும் அனுப்பினால் ( MORE THEN 40 PAGE OR GROUP OR FRIENDS) நீங்கள் இரண்டு நாளைக்கு FACEBOOK இல் எதையும் SHARE செய்ய முடியாது . 

தினமும் பதிவு எழுதுபவர்கள் இதில் சில குருப்பை மட்டும் தெரிவு செய்யவும் .

எப்பொழுதாவது எழுதுபவர்கள் நிறைய தெரிவு செய்யலாம் .



                இது SHAREWARE போன்றது . இதில் இலவசமாக 5  குருப்க்கு மட்டுமே அனுப்பலாம் . பணம் கட்டினால் நிறைய குருப்க்கு அனுப்பலாம் .


   இது மேலே உள்ளது போல தான் . ஆனால் எளிதில் FACEBOOK, TWITTER , G+ போன்ற அனைத்து தளங்களிலும் பகிரலாம் .


டிஸ்கி : இது போல வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் .



இதையும் பார்க்கலாமே :

கணவன் , மனைவி ,தெரியாது.. முடியாது.

 

அஜித் Vs ஆர்யா மற்றும் சன் டிவி 

 

இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?