இன்றைய நிலையில் பல புதிய பதிவர்கள் தினமும்பதிவு எழுதிகின்றனர் .சிலர் வாரம் ஒன்று இரண்டு என்றும் எழுதுவதுண்டு . ஒவ்வொருவருக்கும் பதிவு எழுதுவதில்வித்தியாசம் இருக்கும் .சிலர் கவிதைகள் மட்டும் எழுதுவார் . சிலர் சினிமா , அரசியல் , மொக்கை எனகலந்துகட்டி அடிப்பார்கள் . (சிலர் அடுத்தவர்களை குறை கூற மட்டுமே பதிவு போடுவார்கள் ).
இப்படி நாம் கஷ்டப்பட்டு எழுதும்பது நிறைய பேரை சென்றடைய வேண்டும் என நினைப்பது இயல்புதான் . அப்படி எழுதும் பதிவை எப்படி பிரபலபடுத்துவது ?. எளிதான வழி திரட்டிகளில் இணைப்பது . அதை விட எளிய வழி ஒன்று உள்ளது . அதை பற்றிதான் பார்க்க போகிறோம் .
பதிவர்கள் அனைவரும் கண்டிப்பாக FACEBOOK இல் கணக்கு வைத்திருப்போம் . உங்கள் FACEBOOK WALL இல் உங்கள் பதிவை வெளியிடலாம் . அதுமட்டுமில்லாது பல FACEBOOK GROUP, AND FACEBOOK PAGE இல் இணைந்து விட்டு அதில் உங்கள் பதிவின் லிங்க்கை வெளியிடலாம் . நாம் ஒவ்வொரு GROUP, PAGE ஆக சென்று பதிவை வெளியிடுவது நேரத்தை விரையமாக்கும் . அனைத்து குருப் மற்றும் பக்கங்களில் ஒரே நேரத்தில் வெளியிட்டால் எப்படி இருக்கும் ? அதுக்கு உதவுவதே இந்த பதிவு .
கிழே உள்ள சில லிங்க்கில் சென்று ஒரே கிளிக்கில் அனைத்து குருப்பிலும் உங்கள் பதிவை வெளியிடலாம் . இதை நான் பயன்படுத்தி உள்ளேன் .
1. GETSUPDATE
இதில் உங்கள் FACEBOOK கணக்கில் உள்ள அனைத்து குருப் , பேஜ் ,நண்பர்கள் அனைவரும் வருவார்கள் . சிலவற்றை மற்றும் தெரிந்து எடுக்கவும் . அனைத்துக்கும் அனுப்பினால் ( MORE THEN 40 PAGE OR GROUP OR FRIENDS) நீங்கள் இரண்டு நாளைக்கு FACEBOOK இல் எதையும் SHARE செய்ய முடியாது .
தினமும் பதிவு எழுதுபவர்கள் இதில் சில குருப்பை மட்டும் தெரிவு செய்யவும் .
எப்பொழுதாவது எழுதுபவர்கள் நிறைய தெரிவு செய்யலாம் .
இது SHAREWARE போன்றது . இதில் இலவசமாக 5 குருப்க்கு மட்டுமே அனுப்பலாம் . பணம் கட்டினால் நிறைய குருப்க்கு அனுப்பலாம் .
இது மேலே உள்ளது போல தான் . ஆனால் எளிதில் FACEBOOK, TWITTER , G+ போன்ற அனைத்து தளங்களிலும் பகிரலாம் .
டிஸ்கி : இது போல வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் .
இதையும் பார்க்கலாமே :





