> என் ராஜபாட்டை : சரண்

.....

.
Showing posts with label சரண். Show all posts
Showing posts with label சரண். Show all posts

Monday, December 16, 2013

இந்த வருடம் : திரும்பி பார்க்கிறேன் (தொடர்பதிவு )





பதிவுலகில் தொடர் பதிவு வந்து நீண்ட நாள் ஆகிவிட்டது என சில நண்பர்கள் சொல்லியதால் , இந்த வருடத்தில் எனக்கு நடந்த சில நல்ல , கஷ்டமான , சந்தோஷமான , துக்கமான தருணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் . இதுபோல நீங்களும் தொடருங்கள் .

நல்ல விஷயங்கள் :
  • எங்கள் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது .
  • கணினி பாடத்தில் 200/200  எடுத்து எனது மாணவன் என் பெயரை காப்பாற்றியது .
  • சென்னை பதிவர் சந்திப்பில் பல நண்பர்களுடன் உரையாடியது .
 
  • சீனு , அரசன் ,சிவா , ரூபக் , குடந்தை சரவணன் , ஸ்கூல் பையன் , சதீஷ் , ரேவதி சதீஷ் , மதுமதி , கே .ஆர்.பி செந்தில் ,சதீஷ் சங்கவி ,ஆரூர் மூனா செந்தில் , கேபிள் சங்கர் , அப்துல் பாசித் ,சங்கரலிங்கம் சார் , பிரபு கிருஷ்ணா , வெற்றி வேல், கணேஷ் சார், வீடு சுரேஷ் , பிரகாஷ் (தமிழ்வாசி),சென்னை பித்தன் , பட்டிகாட்டான் ,உண்மைத்தமிழன் ,மயிலன் ,ராஜி , சசிகலா ,  கோகுலத்தில் சூரியன் வெங்கட் , இனியவை கூரல் , இவர்களுடன் அரட்டை .
 
  • பிலாசபி பிரபாவின் உபசரிப்பு . (நக்ஸ் மூலம் பிரியாணி ஊட்டியது ).
 
 

  • கோவை ஆவியின் அறிமுகம் . பல புகழ்பெற்ற பதிவர்கள் சந்திக்க முடிந்தது .
 

  • விகியுலகம் வெங்கட் அவர்களை முதல் முறையாக சந்தித்தது ..

விரும்பத்தகாத நிகழ்வுகள் :

  • சொந்தக்காரன் என நம்பி வீட்டுக்குள் விட்ட ஒருவனால் 13 பவுன் நகைகள் திருட்டு போனது . திருட்டுப்போனது ஒருபுறம் என்றால் அவனே எங்கள் கூட சேர்ந்து தேடியது , அவனை வீட்டுக்கு காவல் வைத்துவிட்டு நாங்கள் காவல் நிலையம் சென்றது . அதை தனி பதிவாக போடலாம் .

  • சரண் வெண் நீரை கையில் ஊற்றி கொண்டது . ஒருவாரம் மிகவும் மனுளைசலை தந்தது . மூன்று நாட்கள் மருத்துவமையில் அவன் இருந்ததும் , அங்கு கையை சுத்தம் செய்து கட்டுபோடும் பொது அவன் கதறியதை கேட்க்கபிடிக்காமல் வெளியே வந்துவிடுவேன் . எங்க அப்பா மரணத்திக்கு பின் அதிகம் அழுதது அப்போதுதான் .
 
 

  • எங்கள் பள்ளி மாணவன் (முன்னாள் ) ஒருவன் மழை நேர விபத்தில் இறந்தது , மாணவி (முன்னாள் ) தற்கொலை செய்து கொண்டது மறக்கமுடியாத விஷயம் .
  • காலையில் சரணுடன் விளையாடி விட்டு போன நண்பன் இரவு சாலை விபத்தில் மரணம் . அவன் சிரிப்பு அப்படியே கண்ணில் நிற்கின்றது .

டிஸ்கி : நண்பர்களே உங்களுக்கு இதுபோல சில அனுபவங்கள் இருக்கும் அதை தொடருங்கள் .

டிஸ்கி : இதை யார் வேண்டுமானாலும் தொடரலாம் . நான் சிலரை அழைக்கிறேன் அவர்களும் நேரம் இருந்தால் தொடரலாம் .

கோவை ஆவி

தளிர் சுரேஷ்

ஸ்கூல் பையன்

காணமல் போன கனவுகள் ராஜி

Thursday, August 22, 2013

வாழ்த்துங்கள்


2010 ஆகஸ்டு இல்  இதே நாளில் தான் அந்தசம்பவம் நடந்தது . எனது வாழ்க்கையையே புரட்டிபோட்ட நிகழ்ச்சி அது . அதுதான் என்னை நானே உணரவைத்த நிகழ்ச்சி . என்னையும் இந்த உலகில் ஒரு பெரிய மனிதனாக மாற்றிய நிகழ்வு நடந்த நாள் இன்று .



என்னடா ஓவரா பில்டப் குடுக்குரானே ஏதாவது விருது கிருது வாங்க்கிய நாளா அல்லது ஏதாவது சாதனை செய்த நாளா என என்னிகின்றிர்களா ? ஆம் ஒரு அருமையான விருது கிடைத்த நாள் தான் . என்ன விருது தெரியுமா ?? சக்தி பிரியதர்ஷினி என்ற என் தேவதை கிடைத்த நாள் இன்று .



ஆம் இன்றுடன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டது . நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாங்கள் எல்லா வளமும் பெற உங்கள் வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும் தேவை . நான் நன்றாக இருக்கவேண்டும் என நினைப்பதில் பெரும் பங்கு என் நண்பர்களாகிய உங்களுக்கு உண்டு அதான் உங்களிடம் வாழ்த்துக்கள் கேட்கிறேன் .


வாழ்த்துங்கள் வளர்கிறேன் ...





என் அப்பா அம்மாவை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி :


Monday, June 10, 2013

உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?





நம் அனைவருக்கும் நமது குழந்தைகளை இந்த உலகில் மிக சிறந்த மனிதனாக, நல்லவனாக, அனைவரும் பாராட்டும் ஒரு புத்திசாலியாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். வருங்காலத்தில் நம்மை மட்டுமல்ல நம் பெயரையும் காப்பாற்ற போகின்றவர்கள் அவர்கள். அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என சில குறிப்புகள்.

  1. கல்வி என்பது முக்கியம் ஆனால் அது மட்டுமே வாழ்கையல்ல, எனவே கற்பது என்பது ஒரு இனிய அனுபவம் என அவனுக்கு புரியவையுங்கள்.

  1. குழந்தையை யாருடனும் ஒப்பிடாதீர்கள். அது அவர்கள் மனதை பாதிக்கும், அவர்கள் அடுத்தவர்கள் மேல் வன்மம் கொள்ள வழிவகுக்கும்.


  1. குழந்தைகள் பேசுவதை கேளுங்கள். பெற்றோர்கள் பலர் செய்யும் தவறு தங்கள் பிள்ளைகள் பேசுவதை கேட்பதில்லை.

  1. குடும்பத்தின் வரவு- செலவுகளை அவர்களும் தெரிந்துகொள்ளும் படி செய்யுங்கள்.



  1. உங்களிடம் எதையும் மறைக்காமல் அவன் பேச அவனுக்கு தைரியம் கொடுங்கள்.

  1. உடைகள் விஷயத்தில் அவர்கள் சொல்லுவதை கேளுங்கள். உங்களுக்கு பிடித்ததை அணிய சொல்லி கட்டாயபடுத்தாதீர்கள்.


  1. உடம்பை காட்டும் உடைகளை பெண் குழந்தைகள் விரும்பினால், அது தவறு என அவர்களுக்கு உணர்த்துங்கள்.


  1. அம்மாக்கள் தொலைகாட்சி தொடர்களை குறைத்துகொண்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.


  1. அவர்கள் பள்ளியில் நடந்த விஷயத்தை சொன்னால் காது குடுத்து கேளுங்கள்.

  1. உங்களுக்கு தெரிந்த விஷயத்தை சொன்னாலும் , புதிதாக கேட்பதுபோல் கேளுங்கள். அது அவர்களை சந்தோஷப்படுத்தும்.


  1. நீங்கள் உங்கள் உறவினர்கள் பற்றி நல்ல படியாக பேசுங்கள், அப்பதான் அவர்களும் பேசுவார்கள்.


மாடல் : சரண்

டிஸ்கி: இன்னும் விளக்கமாக குழந்தையை புத்திசாலியாக, நல்லவனாக, அன்பானவனாக, அறிவாளியாக, பலசாலியாக வளர்ப்பது எப்படினு தெரியனுமா? உடனே எங்க அம்மாகிட்ட கேளுங்க.


இதையும் படிக்கலாமே :

 விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறாரா ...

படிக்க வேண்டிய 6 புத்தகங்கள் 

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

Wednesday, December 12, 2012

உங்கள் வாழ்த்தை எதிர்பார்க்கிறோம் ...

எனது அருமை மகன் R.S . சரணுக்கு இன்று( 12-12-12) பிறந்த நாள் . நல்ல உள்ளங்கள் வாழ்த்தினால் அவன் நன்றாக நாடு போற்ற வாழுவான் . எனவே அன்பு நண்பர்களே உங்கள் வாழ்த்தி எதிர்பார்க்கிறேன் . உங்கள் அன்பு வாழ்த்தால் அவன் மேலும் மேலும் வளர வேண்டும் .  அவனது சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு ...









உங்கள் வாழ்த்தை எதிர்பார்க்கும் :

K. ராஜா 
R. சக்தி பிரியதர்ஷினி 

Thursday, March 22, 2012

அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ




தமிழ் திரையுலகில் சிவாஜி - எம் ஜி யார் , ரஜினி - கமல் , விஜய் - அஜித் என எப்பொழுதுமே ஒரு போட்டி உண்டு . மற்ற நடிகர்கள் என்னதான் அருமையாக நடித்தாலும் , பல வெற்றிகளை குடுத்தாலும் அவர்களை விட இவர்களுக்குத்தான் மவுசு அதிகம். இன்ற நிலையில் அப்படி மாஸ் ஹீரோ என்று சொள்ளபடுபவர்கள் அஜித் – விஜய் .

இவர்களை பின்னுக்கு தள்ளி மிக பெரிய மாஸ் ஹீரோவாக வர ஒருவர் இருக்கின்றார். இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தால் மற்ற ஹீரோக்கள் கதி என்ன ஆகபோகின்றது என தெரியவில்லை. அந்த ஹீரோவின் பெயர் R.S.சரண்

அவரின் சில புகைப்படங்கள் உங்களுக்காக ...

அவரின் ரொமாண்டிக் லுக்

பயம்

சோகம் அல்லது செண்டிமெண்ட்

பக்தி

கோவம் 

வெட்கம்





டிஸ்கி : இவரின் அப்பா இந்தியாவிலேயே நேர்மைக்கும் , அன்புக்கும் , பாசத்துக்கும்  பெயர் பெற்ற ஒருவர் .


டிஸ்கி 2 : இவரின் அப்பா வைத்துள்ள பிளாக்கின் பெயரரின் முதல் எழுத்து “என்” , கடைசி எழுத்து “ராஜபாட்டை” நடுவில் எழுத்தே கிடையாது.

இதையும் படிக்கலாமே :

உலக பிரபலங்கள் பற்றிய சில சுவையான தகவல்கள்.

நீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா ?