ஐயா கும்புடுறேன்( இது உங்கள் ஸ்டைல்தான்)
முதலில் எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். ஆமாம் நீங்க தமிழ்மணத்தில் இரண்டாம் இடம் பிடித்தமைக்கு. தமிழ்மணத்தில் முதல் 20 ல் இடம் பிடிப்பதே அரிதான நேரத்தில் இரண்டாம் இடம் என்பது சாதனைதான். மீண்டும் வாழ்த்துகள், வளருங்கள், தொடருங்கள்.
இந்த கடிதம் எழுதகாரனமே மேலே சொன்ன விஷயத்திற்க்கு நீங்கள் போட்ட பதிவும், அதில் சொன்ன சில விஷயங்களும் தான். நீங்கள் கடுமையாக சாடிய விஷயம் copy & paste பற்றி.
“விகடன் போன்ற முன்னனி இத்ழ்களின் படைப்புகளை திருடி பதிவு போட்டி ஹிட்ஸை எகிறசெய்தல்! “
எல்லா விஷயமும் எல்லருக்கும் தெரியும் என சொல்ல முடியாது. நான் பேருந்தில் செல்லும் போது கடையில் விகடன் அல்லது முன்னனி இதழ்களின் விளம்பரங்களை பார்க்கும் போது வாங்க தூண்டும் அல்லது படிக்க தூண்டும். அந்த ஒரு விஷயத்துகாக அந்த இதழை வாங்கவேண்டுமா என தோன்றும். இந்த நேரத்தில் கைகுடுப்பது நீங்கள் சொன்ன பதிவர்கள்தான்.
அவர்கள் திருடவில்லை, தனக்கு தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர். இது எப்படி தவறு ஆகும். சொந்த சரக்கை மட்டும்தான் எழுதவேண்டும் எனில் நீங்கள் உதாரனத்திற்க்கு திருகுறள், ராமாயனம் , etc என எதிலிருந்தும் எடுக்க கூடாது.
“ விகடனை பதிவை சுட்டு, ஹிட்ஸ் வாங்கி நம்பர் ஓன்னாக வந்தேன் என்றால் நண்பர்கள் என்னை நாயினும் கடயனாக ம்திப்பர்.”
நீங்கள் யாரை மனதில் வைத்து இப்படி எழுதுகின்றிர்கள் என நன்றாக தெரிகிறது. அவர் copy & paste மட்டும் பன்னுவதில்லை. copy & paste வரும் ஹிட்ஸை விட அவரின் சொந்த பதிவிர்க்கு வரும் ஹிட்ஸ் அதிகம். சக பதிவரை இப்படி விமர்சிப்பது தவறு என்பது எனது எண்ணம்.
“ இனி தமிழ்மணத்தில் copy & paste க்கு இடம் இல்லை என தீர்மானம் எடுக்கவேண்டும்.”
தமிழ்மணம் இல்லை என்றால் பதிவுலகம் இருக்காதா? யாரும் பதிவே எழுதமாட்டார்களா? வடிவேலு பானியில் சொன்னால் “என்ன இது சின்னபிள்ளைதனமால இருக்கு?”
யாரும் பார்க்காத, பலருக்கு தெரியாத விஷயத்தை எதாவது ஒரு தளத்தில் அல்லது இதழில் படித்தால் அதை பகிர்வதில் என்ன தப்பு.
“copy & paste பண்னி பதிவுகள் போடும் ஒரு பதிவரை முன்னனி பதிவர் என அடையாளம் காட்டுவது தமிழ்மனத்திர்க்கு மாபெறும் அவமானம்”
Only copy & paste என்றால் நான் ஒத்துகொள்கிறேன். சொந்த பதிவுடன் , தமக்கு பிடித்த , ரசித்த , வாசித்த பதிவை copy & paste செய்வதை தவறு என சொல்லமுடியாது.
இவையனைத்தும் என் சொந்த கருத்து. தவறு எனில் மன்னிக்கவும்.
கொசுறு: நமது பதிவுக்கு வரும் கமெண்ட்க்கு பதில் கமெண்ட் என்று கமெண்ட் மேல கமெண்ட் போட்டு கமெண்ட் எண்ணிக்கையே அதிகரித்து காட்டுவது சரியா ?
அன்புடன்..
(தனது, & மற்றவர்) மகிழ்ச்சிகாக பதிவிடும் ஒரு பதிவர்.