கடந்த பல நாட்களாக நான் விரும்பி கேட்டும் பாடல் பில்லா பட பாடல்கள் தான். "அதிலும் உனக்குள்ளே ஒரு மிருகம் “ என்ற பாடல் தான் அடிகடி கேட்பது. தினமும் குறைந்தது பத்து முறையாவது கேட்பேன் . அதில் பல வரிகள் நாம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய செய்திகள் பல உள்ளன. என் அறிவுக்கு எட்டியவரையில் எழுதிள்ளேன்.
“உனக்குள்ளே மிருகம் தூங்கி விட துடிக்கும்
எழுந்து அது நடந்தால் எரிமலையும் வெடிக்கும் “
- ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நல்ல , கெட்ட மிருகம் இருக்கும் (மதன் கூட மனிதனுக்குள் ஒரு மிருகம் என புத்தகம் எழுதியதாக நினைவு ). அந்த நல்ல மிருகத்தை தூங்க விடாமல் பார்த்துகொண்டாள் நீ எரிமலையை கூட கடக்கலாம்
“கனவுகளை உணவாய் கேட்டு அது துடிக்கும்
உன்னை அது விழுங்கி உந்தன் கையில் குடுக்கும்”
- கனவு காணுங்கள் என அப்துல் கலாம் சொன்னார் , அந்த கனவுதான் உன்னை பற்றி நீ அறிய உதவும்.( தனிமையில் நீ என்ன சிந்திகின்றாயோ அதுதான் நீ – விவேகானந்தர் )
"எரிக்காமல் தேனடைகள் கிடைக்காது
உதைக்காமல் பந்து அது எழும்பாது "
- எதுவும் முயற்சி செய்யாமல் கிடைக்காது. தானாகவே நடக்கும் என நினைப்பவன் முட்டாள். ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு – நியுட்டன் லா
"வலியதுதான் உயிர்பிழைக்கும் – உலகில்
இயற்கையின் விதி இதுதான் ."
Survivals of the fittest இது டாவின்சி விதி . உலகை எதிர்த்து போராட துணிந்தவை மட்டுமே உயிர் பிழைக்கும் .
"“நரகமத்தில் நீயும் வாழ்ந்தால் மிருகம் என மாற வேண்டும்
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து “"
- வாழும் இடத்திருக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ள வேண்டும் . சொர்க்கத்தில் கடவுளாகவும் நரகத்தில் மிருகமாகவும் இருக்க வேண்டும் .
“இங்கு நன்பான் யாரும் இல்லையே
இங்கு பகைவன் யாரும் இல்லையே
நீதான் உனக்கு நண்பனை – இனி
நீதான் உனக்கு பகைவனே “
- இந்த உலகில் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும் இல்லை . என்றுமே நான் தான் நமக்கு நண்பன் , நான் தான் எதிரி .
“முதலடியில் நடுக்க வேண்டும்
மறு அடியில் அடங்க வேண்டும் “
- தற்காப்பு கலையில் முதல் பாடமே இதுதான் . எதிரி அடிக்கும் முன் நாம் அடிக்கவேண்டும் அதுவும் அந்த அடியில் அவன் பயப்பட வேண்டும். அடுத்த அடியில் அவன் நம் அருகே வர தயங்க வேண்டும்.
“அடிகடி நீ இறக்கவேண்டும்
மறுபடியும் நீ பிறக்க வேண்டும்
உறக்கத்திலும் விழித்திரு நீ
இரு விழி திறந்தபடி “
இறந்து பிறந்தால் எப்படி புத்துணர்ச்சியாக இருப்போமே அதுபோல எப்பொழுதும் இருக்க வேண்டும். உறக்கத்தில் கூட உள் மனது விழித்துருக்கும். அலெக்சாண்டர் கண்களை திறந்து கொண்டே தூங்குவாராம்(உண்மையா என தெரியவில்லை ) அதுபோல எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும் .
“இனி நீ தான் உனக்கு தொல்லையே
இனி நீதான் உனக்கு எல்லையே “
- அடுத்தவனுடன் ஒன்னை ஒப்பிடதே அது உன்னை நீயே கேவலபடுத்தி கொள்வது போல என சொல்வார்கள் . எப்பொழுதும் உனக்கு எல்லை என்பது நீ செய்த சாதனைகள் தான் அதை தாண்ட நீ முயற்சி செய். தானாகவே அடுத்தவர் சாதனைகள் முரியாடிப்பாய் .