> என் ராஜபாட்டை

.....

.

Wednesday, September 14, 2011

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..






பதிவு திருட்டு என்பது இப்பொழுது சகஜமாகிவிட்டது. நாம் கஷ்ட்டபட்டு , மூளையை கசக்கி( இருக்குறவங்க..) எழுதும் பதிவுகளை கஷ்டபடாமல் காப்பி அடித்து அவர்கள் தளத்தில் பயன் படுத்தி கொள்கின்றனர்.  இது போல உள்ள திருட்டை தடுக்க சில வழிகள்.


1) முதலில் உங்கள் Account ல் நுழையுங்கள்.

2) Dashboard = > design க்குள் செல்லுங்கள்.

3) Add gedget ல Add HTML/Javascript  செலக்ட் பன்னுங்க.

4) அதில் கீழ் வருபவதை copy பன்னி paste பன்னவும்.

ஐயா.. சாமி இது கஷ்டப்பட்டு நான் எழுதிய பதிவு, எனவே தயவு செய்து இதை திருடாதீர்கள்.

அல்லது

இதுலாம் ஒரு பதிவுனு திருட வந்து இருக்கியே உன்ன நினைத்தால் சிரிப்பு வருது.

அல்லது

அறிவுகெட்டவர்கள், வீணாபோனவர்கள், விளங்காதவ்ர்கள், உருப்படதாவர்கள், (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை போட்டுகொள்ளவும்) மட்டும் இந்த பதிவை காப்பி எடுக்கலாம்.

அல்லது

இது மலையாள ஷகிலா(சாரி) சாமியாரிடம் மந்திரிச்சு உருவாக்கிய வளைதலம். இதில் இருந்து பதிவை திருடுபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள்.



        5) இதை Add பன்னி save செய்யவும்.



இதையும் மீறி யாராவது உங்கள் பதிவை திருடினால் …

நீங்கள் பதிவே எழுதாதிர்கள், அப்புறம் எப்படி திருடுவார்கள் பார்போம்.




Tuesday, September 13, 2011

பெண்கள் எல்லாம் தெய்வமா?




உணர்ந்தறிதல்


வெருண்டு உருண்டு
கண்கள் மருண்டு

காற்றும் நீருமாய்
நாசி நடுநடுங்க..

காது விரைக்கக்
கழுத்து அதிர்ந்து..

கால்கள் துவண்டு
கன்னங்கள் கிட்டித்து..

உடம்பு கிடுகிடுக்க
உள்ளுக்குள் வெடிவெடிக்க..

பெருமுச்சுக் குவியலில்
உயிர்முச்சுக் கலகலத்து..

இதுவரை கேட்டறியா
விதங்களில் கதறலிட்டு…

முன்னுடம்பு குறுக்கி
பின்னுடம்பு பிதுக்கி…

பூமிப்பந்தை ஒரு நிமிடம்
புதிதாகப் பிறக்கவிட்டு..

கன்று ஈன்று நாக்கிட்ட
காராம் பசு பார்த்து,
உடலெல்லாம் சிர்ப்போடி
உள்ளம் வியர்த்து
நின்றேன்

வீட்டில்

கர்ப்பிணியாய்

மனைவி !

(மனிதனுக்கு ஒரு பிறவிதான் ஆனால் பிரசவத்தின் பொழுது மறுபிறவி எடுக்கும் எல்லா பெண்களும் தெய்வம்தான்)


டிஸ்கி 1: இது கடந்த வாரம் ஆனந்தவிகடனில் ராஜ திருமகன் என்பவர்
            எழுதிய கவிதை.

டிஸ்கி 2: என் மனைவியின் வளைகாப்பிற்க்கு வந்தவர் கையில் இருந்த
            விகடனில் படித்தது.

டிஸ்கி 3: இது பிடிக்க என்ன காரணம் என சொல்லிதெரியவேண்டியதில்லை.


நாளை :
நமது பதிவை காப்பி செய்யாமல் தடுப்பது எப்படி ?
( இப்ப என் பதிவை   காப்பி பண்ணி பாருங்க )

 ====================================================

நேற்று :
என்ன நடக்குது நம்ம பதிவுலகில் ?

Monday, September 12, 2011

என்ன நடக்குது நம்ம பதிவுலகில் ?,




  • ஒன்னுமே எழுத தெரியாத,
  • 4 பதிவுக்கு ஒரு பதிவு COPY  & PASTE பன்னுகின்ற,
  • ஜோக்னு சொல்லி மொக்கை போடுகின்ற,
  • SMS ல வந்ததை, சுண்டல் பேப்பர்ல படித்ததையெல்லாம் பதிவுனு போட்டு கொடுமை செய்கின்ற ,
  • என்னைகாவது ஒரு நாள் எல்லார் வலைக்கும் போய் பின்னுட்டம் போடுகின்ற

ஒருத்தனை  போய் 200 பேர் பின்தொடர்கின்றார்கள்.

என்ன கொடுமை இது ?

அவன் பெயர் ராஜா,
அவன் வலையின் பெயர் “என் ராஜபாட்டை”


ஆம் என் வலையில் பின் தொடரும் நபர்களின் எண்னிக்கை 200( அத்தனை பேரும் அப்பாவிகள்)


நன்றி,  நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி

  1. என்க்கு வலைபதிவை உருவாக்க கற்று தந்த “கடற்புறா” ராஜராஜனுக்கு

  1. பல தளங்கலை எனக்கு அறிமுகபடுத்திய( அவருக்கே இது தெரியாது) நண்பர் “வேடந்தாங்கல்” கருன்


  1. என்னை நண்பனாக பாவித்து உடனுக்குடன் பின்னுடம் இடும் சி.பி, நாஞ்சில் மனோ, விக்கியுலகம், நிருபன்,  கூடல் பாலா, “வந்தேமாதரம்” சசிகுமார், “சேட்டைகாரன், “கவிதைவீதி” சொளந்தர், ஜ.ரா. ரமேஷ் பாபு, “தமிழ்வாசி” பிரகாஷ், துஷ்யந்தன், சாருஜன், மகேந்திரன்,VGK, முனைவர் இரா. குணசீலன், M.R, அம்பலத்தார்,  இந்திரா, புலவர் சா.ராமனுஜம், சென்னை பித்தன், லட்சுமி, தேனம்மை லெட்சுமனன், அருன் அனைவருக்கும்.

  1. இதில் விடுப்பட்டவர்களுக்கும், புதிதாக வந்தவர்களுக்கும்


டிஸ்கி : என்னிடம் இனைய வசதி இல்லாததாலும், பள்ளியில் அதிக நேரம்
          பயன்படுத்த முடியாததாலும் பலருக்கு அவர்கள் தலத்தில் பின்னுடம்
         இடமுடியாமலும், ஓட்டு போடமுடியாமலும் இருக்கிறேன்.  முடிந்த     
         அளவு இரண்டுக்கும் முயர்சி செய்கிறேன்.



Sunday, September 11, 2011

எல்லாம் ஒரு விளம்பரம் தான்




சமிபத்தில் பிடித்த , ரசித்த விளம்பரம் :



இது சும்மா சிரிக்க ....

மேலும் ..

Saturday, September 10, 2011

பெரியவங்க என்ன சொல்றாங்கனா?




ஒழுக்கமுடன் இருக்கும் நல்லவனுக்கு
எந்த கடவுள் பற்றியும் கவலையில்லை

n      கன்பூஷியஸ்

அடுத்தவனுக்கு கருணை காட்ட மறுப்பவனுக்கு
கடவுளும் கருனை காட்ட மாட்டார்.

n      நபிகள்

பொறுமை, வாய்ப்புகளை பயன்படுத்தும் திறமை, அச்சமின்மை, மன்னிப்பு
ஆகியவை மனிதனின் வெற்றி சின்னங்கள் ஆகும்

n      மேதுயூ ஆர்னால்டு

சிந்தனை இல்லாத படிப்பு -- பயனில்லாத உழைப்பு
படிப்பில்லாத சிந்தனை – ஆபத்தானது

n      கன்பூஷியஸ்
செயலில் கவனகுறைவுதான் தோல்விகளை சந்திக்க
காரனமாக இருக்கின்றது.
                                               
n      பிராங்களின்

நல்ல நண்பன் இல்லாத உலகம்
ஒரு பாலைவனைத்தை போன்றது.

n      பேகன்

நற்பண்பு இல்லாத புத்தி ஆபத்தானது
புத்தியில்லாத நற்பண்பு பயனற்றது

n      நேரு

வெற்றி என்பது ஒரு முடிவல்ல அது ஒரு பயணம்

n      கவிதாசன்

கடவுள் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால்
தாயை படைத்தான்

n      யூத மொழி


சாத்தான் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால்
காதலியை படைத்தான்

n      யூத் மொழி