> என் ராஜபாட்டை : கவிதை

.....

.
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, April 2, 2014

ஒரு வீடு இரு திருடர்கள்- தேர்தல் ஸ்பெஷல்


அது அவர்களுடைய தொழில்.
கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.
நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல
அவர்களுக்கு தொழில் தர்மம்.
ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்
குறுக்கிடும் தொழில் தர்மம்.

ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,
கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.
அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது?
யார் பின்வாங்குவது?
முடிவு காண முடியவில்லை திருடர்களால்.

முதல் திருடன் சொன்னான்,
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.
இரண்டாம் திருடன் சொன்னான்
‘திருடுவது நம் உரிமை
அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.
அவன் முன் வாக்குப்பெட்டி.
யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி
வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய
அறிவு புகட்டப்பட்டது.
இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.
கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.


பின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை
‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்
அது என்  தவறல்ல.

இதை மெயிலில் அனுப்பிய நண்பனுக்கு நன்றி :

இது ஒரு மீள் பதிவு 



===========================================================================
இதையும்  படிக்கலாமே :

யார் தெய்வம் ?

 

விஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 2


 

 

Thursday, May 24, 2012

நெஞ்சை தொ(சு )ட்ட கவிதை

முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!!

தவமிருந்துதான் பெற்றோம்

உன்னை,
தடுமாறி வாழ்கை நடத்தியபோதும்
தனித்தன்மையாய் வளர்த்தோம்,

உன் எச்சில் பட்ட
என் கண்ணங்கள்
இன்னும் குளிருதாடா..!மகனே...

உன் மழலை புன்னகையை
பிச்சை கேட்டு
பல நாட்கள் உன்னிடம்
மண்டியிட்டிருக்கிறேன் ,
என் செல்ல மகனே...,

உன் பால் வாசத்தில்
என் பாசம் உணர்ந்தேன்,

நீ கடித்து காயபடுத்திய
என் கன்னத்து தழும்பை
இன்னமும் முத்தமிடுகிறாள்
உன் அம்மா...!

என் கிழிந்த வேட்டியை
மறைத்து,மடித்து கட்டி
வேட்டி வாங்கும்
பணத்தில் வாங்கியதுதான்
உன் வெள்ளி பாலாடை...!
என் அன்பு மகனே..!

முதல் முறை
நீ பள்ளி செல்லும்போது
உன்னை மருத்துவனாகதான்
பார்த்தேன் இந்த பாவி..,

கல்லூரி செல்லும்போது
கர்வத்தோடு பார்த்தேன்...,

மணக்கோலத்தில் உன்னை
பார்த்தபோதுதான்,
உயிருடன் மோட்சமான
முதல் மனிதனானேன்..,

என் கடமை முடிந்தது
என் அன்பு மகனே...!

ஓர் இரவு,
வீட்டில் படுத்துவிட்டு
விழித்து பார்த்தால்,
நானும் உன் தாயும்
கிடந்தது
"முதியோர் இல்ல" வாசலில்...,

பேர பிள்ளைகள்
உதைக்க காத்திருந்த
மார்பில்,
நீ உதைத்ததெப்படி..?
என் செல்ல மகனே..!
என் மகன் இப்படி ஆனதெப்படி..?

உன் தாய்
கொடுத்த பால்
விஷமானதெப்படி..?

என் மேல் சிந்திய
உன் எச்சில்
அமிலம் ஆனதெப்படி..?

போதும் மகனே போதும்..!

உயிரை கொல்பவன் மட்டும்
கொலைகாரன் அல்ல...
உணர்வை கொல்பவனும்தான்..,

நீ கொலைகாரன் ஆனதெப்படி...?

நீ செய்ததை
என் உடல் தாங்கும்...
என் உள்ளம் தாங்காது..

நான் தாங்குவேன்
உன் தாய்
தாங்கமாட்டாள்...!
பாலூட்டியவளாயிற்றே...!!!

மகனே..!
வாரம் ஒருமுறை
என் பேரப்பிள்ளைகளை
கூட்டி வா..,
இவர்கள்தான் "தாத்தா பாட்டி"என்று
அறிமுகம் செய்,

"தாத்தா பாட்டி சாமிகிட்ட போய்டாங்க",
என்று கூறி எங்களை
உயிரோடு எரிக்காதே...!

எங்கள் நிலை பார்த்து
உன் பிள்ளைகள்
வளர்ந்தால்தான்,
நீ எங்கள் நிலைக்கு
வராமல் இருப்பாய்..!!!

நீ மிகவும் நல்லவன்
என் செல்ல மகனே..!!!
அனாதையாக எங்களை
விட்டுவிடாமல்,
முதியோர் இல்லத்தில்...
சேர்த்தாயே...!!!

நன்றி மகனே

என் மகன் நல்லவன்...!!!


- இளையபாரதி



டிஸ்கி     1    :முக புத்தக நண்பர் இளையபாரதி எழுதிய கவிதை 

டிஸ்கி 2 : காதல் கவிதைகளை பகிரும் தோழர்களே இதையும் பகிருங்கள்..!!!


இதையும் படிக்கலாமே  :


யார் தெய்வம் ?

துப்பாக்கி Vs பில்லா 2

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...

 

 

Tuesday, May 1, 2012

கதம்பம் 01/05/2012





மீண்டும் ஈழ நாடகம் :

தான் ஆட்சியில் இருக்கும் போது வராத , அப்பாவி தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்ல படும் போது வராத , தலைவர் பிரபாகரன் கொடூரமான முறையில் கொல்லபட்ட செய்தி கிடைக்கும் போதெல்லாம் வராத ஈழ பாசம் , கருணாநிதிக்கு இப்போது வந்துள்ளது. தனி ஈழம் வாங்க என் உடல் , பொருள் , ஆவி அனைத்தையும் தருவேன் என காமெடி செய்கின்றார் .

இலங்கை போரை நிறுத்தாவிட்டால் மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவேன் என சொல்ல தைரியம் இல்லாமல் பதவிக்காக பத்து நிமிடம் உன்னாவிருத நாடகம் நடத்தி போரை நிறுத்திவிட்டேன் என சுய தம்பட்டம் அடித்து விட்டு தமிழர் படுகொலையை கண்டுகொள்ளாமல் விட்ட பாவம் உங்களை சும்மா விடாது .



அமைச்சர்கள் வேலை இதுதானா ?

புதுகோட்டை சட்டமன்ற  தொகுதி இடைதேர்தல் பணிக்காக 32  அமைச்சர்கள் அடங்கிய குழுவை ஜெயலலிதா அமைத்துள்ளார். (இவரையும் சேர்த்த தமிழக அமைசர்கள் எண்ணிக்கை 33) மக்களுக்கு பணிபுரிய இதுபோல ஏதாவது குழு அமைத்தால் நல்லது , அதைவிடுத்து தேர்தல் பணிக்கு அமைப்பது என்ன நியாயம் ? . எப்படி இருந்தாலும் ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் வீனா செலவு செய்றதுக்கு பதில் ஆளும்கட்சிதான் வெற்றி என அறிவித்து விடலாம் .


பிடித்த நக்கல் கவிதை

ஒரு மழைகால வேளை
ரயில் பெட்டிக்குள் ஜன்னலோரம் நான் ...
வெளியே நீ ..

நம் இருவர் கண்களும்
ஒன்றாக சந்தித்த அந்த வேளையில் தான்
நீ அந்த வார்த்தையை சொன்னாய்

அது .. அது ...

--
--
:ஐயா .. சாமி .. தர்மம் பண்ணுங்க ..




பிடித்த ஹைகூ

குழந்தையை
காப்பகத்தில்
விட்டனர் பெற்றோர்கள் ..

பெற்றோர்களை
முதியார் இல்லத்தில்
சேர்த்தான் மகன .


தெரியுமா ?

Register Number என்பதை சுருக்கமாக Reg. No . என்கின்றோம் , Register என்பதன் சுருக்கம் Reg, Number என்பதின் சுருக்கம் No. Number என்ற வார்த்தையில் O கிடையாதே அப்புறம் ஏன் O வருகின்றது ?


Number என்ற ஆங்கில வார்த்தை Numerio  என்ற லத்தின் சொல்லில் இருந்தது வந்தது அதனால் தான் அந்த வார்த்தையின் முதல் மற்றும் கடைசி எழுத்தை சேர்த்து No  என எழுதுகின்றோம் .


ரசித்த படம் :
அதிர்ச்சி :

கடந்த மூன்று நாட்களாக எண்கள் ஊரில் மின்தடை இல்லை

வாழ்த்துகள் :

 உழைப்பாளர்தின வாழ்த்துகள் 
 அல்டிமேட் ஸ்டார் அஜித்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

 இதையும் படிக்கலாமே :

அஜித் : தல போல வருமா ?

 

உங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா ? அப்ப இது உங்களுக்கு தான்

 

உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?

 


Wednesday, April 4, 2012

கதம்பம் 04/04/2012




கல்வி அதிகாரிகளின் அலட்சியம்..

நாகை மாவட்டத்தில் சென்ற வாரம் பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு நடைப்பெற்றது.. கணினி அறிவியல் பாடத்தில் அவர்கள் கேட்ட கேள்வி இதோ .

102 .Draw a truth table of following function ?
104. simplify the following equation ?

இப்படி கேள்வி மட்டும் தான் இருந்தது Function and equation  எதுவும் தரவில்லை , எதற்கு விடையளிக்க வேண்டும் என மாணவர்களுக்கு குழப்பம். chosse the best answer பிரிவில் ஒரு கேள்விக்கு option குடுக்கவில்லை. OMR Sheet ல அவன் எதை பதிலாக குறிப்பான். 175 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு வெறும் 75 கேள்வி தாள் மட்டும் வந்துள்ளது. இயற்பியல தேர்வுக்கு வேதியல் கேள்வித்தாள் அனுப்பபட்டு உள்ளது . ஏன் இந்த குளறுபடி ? அதுவும் ஆண்டு பொது தேர்வில் ...கல்வியில் இவ்வளவு அலட்சியமா ?


பிடித்த கவிதை :


ஒரு
பொருளின்
வடிவத்தையும்
எடையையும்
உணர்வதில்
கண்ணுக்கும்
கைகளுக்கும்
இடையே உள்ள வித்தியாசம்
நீ ஏன் மடியில்
கிடக்கும்போதுதான் தெரிகின்றது ..

      எஸ் . டி . விஜய்மில்டன்




ரசித்த நக்கல் SMS :

My Nights are Sleepless

My Days are becoming Useless

My Friend asked Are you in Love....?

I said கரெண்ட் இல்லடா எரும ...


அரசியல் :

தமில்நாட்டிற்கு மின்சாரம் தரும் திட்டம் இல்லை

-          மத்திய அரசு

பாகிஸ்தான்க்கு 5000 மெகா வாட மின்சாரம் இந்தியா வழங்க திட்டம்

                   - மத்திய வெளியுறவு துறை அமைச்சர் .

நாதாரிங்களா .. அடுத்த தேர்தலுல உங்களுக்கு ஓட்டு போடுகின்ற திட்டம் இல்லை ....

-          தமிழ்நாட்டு மக்கள்
==================================================================
ரசித்த நகைசுவை :

பைல்க்கும் பைல்ஸ்க்கும் (File and pils ) என்ன வித்தியாசம் ?

பைல் உட்காந்து பார்க்கணும்
பைல்ஸ் பார்த்து உட்காரணும்


இதையும் படிக்கலாமே :

சச்சினுக்குப் பதில் இனி இவரா?!

 

அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

 

3 - ஒரு பார்வை

 

 


Saturday, March 10, 2012

கதம்பம்






அன்பு நண்பர்களே ! கதம்பம் என்ற பெயரில் எனக்கு பிடித்த , படித்த , அனுபவித்த சில விஷயங்களை உங்களுடன் பகிரலாம் என உள்ளேன். இனி அடிகடி கதம்பம் வரும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்.



யானை தான் தலையில் மண்ணை போட்டுக்கொண்டது :

           உ.பி  தேர்தல் முடிவுகள் பல தலைவர்களுக்கு பாடம் கற்றுத்தந்து உள்ளது. மக்களுக்கு பயன்படாத மக்கள் கவலையை புரிந்து கொள்ளாமல் கோடி கணக்கில் ஆடம்பர செலவு செய்தால் மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள் என மாயாவதி இப்போது உணர்ந்து இருப்பார். இது அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். அவரின் சின்னம் யானை. யானைக்கு சிலை வைத்தது ....................(தலைப்பை படியுங்கள்) சமம்.


ஏன் ? ஏன் ?? ஏன் ???

எந்த பேருந்திலும் ஏறினாலும் வயதானவர்கள் , கர்ப்பிணிகள் , குழந்தையுடன் உள்ளவர்கள் ஆண்களிடமே இடம் கேட்பது ஏன் ?

அதிலும் சிலர் காலியாக உள்ள இடத்தை கூட கவனிக்காமல் கொஞ்சம் எழுந்திரிங்கள் என்பது ஏன் ?

கொஞ்சம் இடம் தாரிங்களா என கூட கேட்காமல் தம்பி நீ எழுந்த்துகோ எவர்கள் உட்காரட்டும் என அதிகபிரசன்கிதனமாக சொல்வது ஏன் ?
இப்படி இடம் கேட்கும் பெண்கள் யாரும் ஆண்கள் நின்று கொண்டு வந்தால் இடம் தராமல் வெளியே வேடிக்கை பார்ப்பது ஏன் ?


சமிபத்தில் ரசித்த ஜோக் :

ஒரு கோழி பத்து முட்டை போட்டது அதுல ஒன்பது கோழி முட்டை ஒன்று வாத்து முட்டை எப்படி ?


பதில் : கோழி நடத்தை சரியில்லாதது .



படித்ததில் பிடித்தது :

ஐயா ,
அடுத்த மாதம் நடைபெறும்
நம் , மின் வாரிய
ஆண்டு விழாவிற்கு
ஐம்பது
பெட்ரோமாக்ஸ் லைட் வாங்க
அனுமதி வழங்குமாறு
தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன் ..

நன்றி
TNEB

அதிர்ச்சி :

1992 ஆண்டு ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற உலக பூமி உச்சி மாநாட்டின் முசிவு படி தண்ணிரை தனியார் வசம ஒப்படைக்க மத்திய அரசு முயற்சி.

# பேசாம இந்தியாவை ஏதாவது தனியார் கம்பெனிக்கிட்ட ஒப்படசிடலாம் .



Tuesday, September 13, 2011

பெண்கள் எல்லாம் தெய்வமா?




உணர்ந்தறிதல்


வெருண்டு உருண்டு
கண்கள் மருண்டு

காற்றும் நீருமாய்
நாசி நடுநடுங்க..

காது விரைக்கக்
கழுத்து அதிர்ந்து..

கால்கள் துவண்டு
கன்னங்கள் கிட்டித்து..

உடம்பு கிடுகிடுக்க
உள்ளுக்குள் வெடிவெடிக்க..

பெருமுச்சுக் குவியலில்
உயிர்முச்சுக் கலகலத்து..

இதுவரை கேட்டறியா
விதங்களில் கதறலிட்டு

முன்னுடம்பு குறுக்கி
பின்னுடம்பு பிதுக்கி

பூமிப்பந்தை ஒரு நிமிடம்
புதிதாகப் பிறக்கவிட்டு..

கன்று ஈன்று நாக்கிட்ட
காராம் பசு பார்த்து,
உடலெல்லாம் சிர்ப்போடி
உள்ளம் வியர்த்து
நின்றேன்

வீட்டில்

கர்ப்பிணியாய்

மனைவி !

(மனிதனுக்கு ஒரு பிறவிதான் ஆனால் பிரசவத்தின் பொழுது மறுபிறவி எடுக்கும் எல்லா பெண்களும் தெய்வம்தான்)


டிஸ்கி 1: இது கடந்த வாரம் ஆனந்தவிகடனில் ராஜ திருமகன் என்பவர்
            எழுதிய கவிதை.

டிஸ்கி 2: என் மனைவியின் வளைகாப்பிற்க்கு வந்தவர் கையில் இருந்த
            விகடனில் படித்தது.

டிஸ்கி 3: இது பிடிக்க என்ன காரணம் என சொல்லிதெரியவேண்டியதில்லை.


நாளை :
நமது பதிவை காப்பி செய்யாமல் தடுப்பது எப்படி ?
( இப்ப என் பதிவை   காப்பி பண்ணி பாருங்க )

 ====================================================

நேற்று :
என்ன நடக்குது நம்ம பதிவுலகில் ?