> என் ராஜபாட்டை

.....

.

Saturday, October 15, 2011

சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்





கேரள நாட்டை “விக்கி”ரமாதித்தியன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்கு அந்த நாட்டிலேயே மிகவும் புத்திசாலியான சிபி என்பவர் மேல் கோபம். (விக்கிக்கு 5 மனைவி, 8 Wife, 10 துனைவி. இதுக்கும் சிபி மேல் உள்ள கோவத்துக்கும் சம்மந்தம் இல்லை) சிபியை எப்படியாவது போட்டுதள்ள வேண்டும் என திட்டம் போட்டார்.

ஒரு நாள் சிபி, கோகுல் மற்றும் தமிழ்வாசி மூவரையும்  வரவைத்தார். முதலில் கோகுலை அழைத்து “என் உடம்பில் என்ன வாசனை வருகிறது என பார்” என்றார். கோகுல் முகர்ந்து பார்த்துவிட்டு “வாசனை வரவில்லை, கெட்ட நாத்தம் தான் வருது “ என்றார். உடனெ விக்கி வாளை எடுத்து ஒரே போடு, கோகுல் காலி.

அடுத்து தமிழ்வாசியை அழைத்து அவரிடமும் அதே கேள்வி , தமிழ்வாசி பய்ந்து கொண்டு “மன்னா உங்கள் மீது மல்லிகை வாசம் விசுகின்றது” என்றார். விக்கி “ என்னிடமே பொய்யா?” என கூறி அவரையும் போட்டுதள்ளிவிட்டார்.

இறுதியாக சிபி, விக்கி அவரிடம் “ நீ சொல் “ என்றார். வாசனை என்று சொன்னாலும் காலி, நாத்தம் என சொன்னாலும் காலி. சிபி அவ்வளவுதான் என எல்லாரும் நினைக்க, சிபி மெதுவாக விக்கியிடம் சென்று “ எனக்கு இரண்டு நாளாக ஜலதோஷம், எனவே எனக்கு எந்த வாசமும் தெரியவில்லை “என்றார்.

சிபியை விட மனமில்லா விக்கி, “உன்னை எப்படி கொல்வது என தெரியவில்லை, உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன், இந்த நாயை(நாய் நக்ஸ் இல்லை) எப்படி கொல்கின்றாயோ அப்படிதான் உன்னை கொல்வேன்” என்றார். சிறிது யோசித்த சிபி  நாயின் வாலை பிடித்து அடித்து கொன்றார். விக்கிக்கு அதிர்ச்சி, சிபிக்கு வால் இல்லை அப்புறம் எப்படி கொல்வது என.

சரியான வாய்ப்பு வந்தும் சிபியை ஒன்னும் பன்னமுடியவில்லையே என விக்கிக்கு வருத்தம். அப்போது அவரது மதியுக மந்திரி மனோ வந்து விக்கி காதில் எதோ சொன்னார். உடனே விக்கி சிபியை பார்த்து “ உன்னை போட்டு தள்ள பார்த்தேன், தப்பி விட்டாய், இருந்தாலும் உனக்கு ஒரு தண்டனை  உண்டு”

மரணதண்டனை இல்லை என தெரிந்ததும் சிபிக்கு சந்தோஷம் “என்ன தண்டனை சொல்லுங்கள் “ என்றார். விக்கி “ இனி நீ உன் ஆயுள் முழுவதும் கில்மா படம் பார்க்க கூடாது “

“ படார் “ எது வெடித்தது ? என்ன நடந்துசுனு நான் சொல்லிதான் தெரியனுமா ? விக்கி எண்ணம் கடைசியில பலித்துவிட்டது.

Friday, October 14, 2011

மனசுவிட்டு சிரிக்கலாம் வாங்க..




நான் சமிபத்தில் படித்து ரசித்த சில நகைசுவை துனுக்குகள் உங்களுக்காக..



“சாகும் வரை உண்னாவிரதம் இருக்குற நம்ம தலைவரை பற்றி மக்கள் என்ன பெசிக்கிறாங்க “

“ இந்த தடவையாவது சாவாரா’னுதான் “


“இன்னுயோட என் மனைவியிடம் பேசி ஒரு வருடம் ஆக போகுது “

கவலைப்ப்டாதிங்க.. பேசி சமரசம் பன்னிடலாம்”

“அப்படி எதும் ஆகிடகூடாதுனுதான் கவலையா இருக்கு :



“உங்க லேப் அசிஸ்டெண்ட் சி.பியை கொஞ்சம் கண்டிச்சு வைங்க…”

“ஏன்?”

“ லேப் ரிப்போட்ல மொத்ததில் சூப்பர் ஃபிகர்னு எழுதியிருக்கார்.”


டாக்டர் ! தினமும் பால் குடிப்பது போல கனவு வருது…”

“இதுக்கு போய் ஏன் பயப்படுறிங்க..?”

“ பின்னடி சங்கு ஊதுற சவுண்ட் வேற கேட்குதே டாக்டர் “


“நான்கள் தண்ணி அடித்துவிட்டுதான் போட்டி போடுவோம்..”

“ தலைவரே ! மப்புல உளராதிங்க.. தணித்துதான் போட்டி போடுவோம்னு சொல்லுங்க..”


“3 மாதம் முழகாம இருக்குற பொன்னை ஏமாத்தி எனக்கு கட்டி வச்சிடிங்க..!”

“பொன்னு பார்க்கும்போதே சொன்னேன் பொன்னுக்கு 18 வயசு 3 மாசம்னு.. நீ புரிஞ்சுகள…! “


தத்துவம் 1 : 

“ என்னதான் சென்னை சில்க்ஸ் ஓனர் பையனா இருந்தாலும் பிறக்கும்போது டிரஸ் இல்லாமதான் பிறக்கும் “

தத்துவம் 2:

“ என்னதான் பேன் விடிய விடிய ஓடினாலும் அதால ஒரு அடிகூட நகர முடியாது “

உண்மை தத்துவம் :

“ என்னதான் தமிழ்மணம் என்னை விலக்கி வைத்தாலும் ராஜா ராஜாதான் “
       




Thursday, October 13, 2011

பாவம் நடிகர் விஜய்

Facebook  இல் அதிகம் கலாய்க்கபடும் நபர் நமது இளைய தளபதி விஜய் தான் . அப்படி கலாய்க்கப்பட்டு அதிக Like பெற்ற சில படங்கள் உங்களுக்காக ...




டிஸ்கி : விஜய் ரசிகர்கள் சீரியசா எடுத்துகாதிங்க .. ஜாலியா எடுத்துக்குங்க

Wednesday, October 12, 2011

கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா



நம்து பதிவர்கள் அனைவரும் இனைந்து ஒரு கட்சி துவங்களாம் என முடிவு செய்கின்றனர். அதற்க்கான ஆலோசனை கூட்டம் சென்னை லீ மெரிடியன் ஹோட்டல் அருகே உள்ள கைஏந்தி பவனில் நடைபெறுகின்றது.

மனோ : அனைவரும் வருக !

விக்கி : ஏன் நீ கூப்பிடலனா எல்லரும் போய்டுவங்களா?

மனோ: சரி வந்ததும் பல்பு கொடுக்காதே. நாம எல்லரும் சேர்ந்து ஒரு கட்சி ஆராம்பிக்கலாம்னு இருக்கோம். அந்த கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்.

பிலாசபி பிரபாகரன் : டாஃஸ்மார்க் முன்னேற்ற கழகம்னு வைக்கலாம்.

சி.பி : பெயர் தாய்குலங்களை கவர்ந்து இழுப்பதுபோல இருக்கனும்.

மனோ : டேய் அண்ணா ! அடங்கு ..

நிரூபன் : கிளுகிளு கில்பான்ஸ் கழகம்னு வைகலாம்

ஐடியாமணி : வேண்டாம் சாமி . ஏற்கனவே எவனோ அனானியா வந்து திட்டுறான். இப்படி பேரு வச்சா, நேர்ல வந்து அடிப்பானுங்க.

ராஜா : Blogger Patry னு வைக்கலாம், சுருக்கமா B . P

கருன் : சரி.. நம்ம கட்சியாலா மக்களுக்கு B.P தான் ஏறபோகுது.

நாய்-நக்ஸ் : கட்சி சின்னம் என்ன ?

மனோ : லேப்-டாப் தான் வைக்கனும்.

விக்கி : இல்லை.. விடியோ பெட்டியதான் வைக்கனும்.

சசிகுமார் : அதெல்லாம் முடியாது. கம்பியூட்டர் தான் சின்னமா இருக்கனும்.

ரமேஷ் : டெர்ரரா மண்டை ஓடு படம் தான் இருக்கனும்.

ஆபிசர் எல்லாரையும் பார்த்துகொண்டே பெல்டை உறுவுகின்றார். அனைவரும் அமைதியாகின்றனர்.

மனோ ; சரி .. தேர்தல் வாக்குறுதியாக என்ன குடுக்களாம்?

அபிமன்யு : என்ன வேனாலும் குடுக்கலாம், எந்த அரசியல்வாதி சொன்னத நிறைவேற்றியிருக்கான்?
சி.பி : நாம ஜெயிச்சா வாரன் ஒரு கில்மா படம் ரீலிஸ் செய்யபடும்னு சொல்லலாம்.

பன்னிகுட்டி : வீட்டுக்குவீடு பிரியா பண்னிகுட்டிதரலாம்.

இம்சை அரசன் : எல்லருக்கும் அருவா தரலாம்

தமிழ்வாசி : ஆளுக்கு ஓரு Auto Cad Book freeனு சொல்லலாம்.

கோகுல் : எல்லருக்கும் நமீதா போட்டோ Free

எல்லருக்கும் டீ வந்துகுக்கு கூடவே பிஃஸ்கட்டும் வந்துருக்கு என அறிவிப்பு வர அனைவரும் பிஸியாகிட்டங்க.. அவர்கள் வந்த பின்  தொடரும்…










Tuesday, October 11, 2011

அரசியலில் இறங்கிவிட்டால் இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு , சொரணை எல்லாம் போய்விடுமா?



உள்ளாட்சி தேர்தல் களைகட்ட துவங்கிவிட்டது. வீதிதோறும் பிட் நோட்டீஸ் வினியோகம், வீடு, வீடாக வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு என தூள் பறக்கின்றது.
யார் எந்த கட்சி, எந்த சின்னம் என்ன பதவி என்று தெரிந்துகொள்ளுவதற்குள் தேர்தல் முடிந்துவிடும் போலஉள்ளது.

கடந்த தேர்தலில் எங்கள் தெருவில் உள்ள ஒருவர் கவுன்சிலர்க்கு நின்றார். அவர் நின்ற கட்சியே எனக்கு பிடிக்காது. இருந்தாலும் நம்ம தெருவை சார்ந்தவர், ஐய்யப்ப பக்தர் , அமைதியானவர் என்ற (தவறான)எண்ணத்தில் அவருக்கு ஒட்டு போட்டேன், மற்றவர்களையும் போட சொன்னேன். நல்ல ஒட்டு வித்தியாசத்தில் ஜெயித்தார்.

சில நாட்களில் அவர் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. ஒரு முறை என் தம்பிக்கும், ஊரில் உள்ள சில இளைஞ்சர்களுக்கும் சண்டை. இருவர்மீதுமே தவறுஉள்ளது. சண்டை பெரிதாக மாறுவது போல் இருந்ததால் அவரிடம் சென்று “நீங்கள் சொன்னால் அவர்கள் கேட்பார்கள், நீங்கள் வந்து சமாதானம் செய்யுங்கள் “ என்றேன்.

அதற்க்கு அவர் “முடியாது” என்றோ , “ என் பேச்சை கேட்க்கமாட்டார்கள் “ என்றோ சொல்லியிருந்தால் பரவாயில்லை. அவறோ “ நீ வேற சாதிகாரன், அவர்கள் என் சாதிகாரன். அவர்கள் சொல்லுவதை நீ கேளு, உன் பேச்சை நான் கேட்க்கமுடியாது” என்று. ஓட்டு கேட்க்கும் போது வராத சாதி, சண்டை என்றதும் வருகிறது.

இப்போது மீண்டும் அவர் தேர்தலில் நிற்க்கின்றார். நேற்று வீட்டுக்கு வந்து ஒரு துண்டு போட்டு “தம்பி மறக்காம ஓட்டுபோடுங்க, நாமலாம் ஒரே தெரு, ஒன்னுகுள்ள ஒன்னு” என சொல்கிறார். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் காலில் விழுகின்றார்.

அன்று வந்த சாதி , தேர்தல் வந்ததும் எங்கே போனது ? என் சாதிகாரன் ஓட்டு மட்டும் போதும் என சொல்ல வக்கில்லை, இவர்கள் ஜெய்யித்து இன்ன கிழிக்க போகின்றார்கள். அரசியலில் இறங்கிவிட்டால் இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு , சொரணை எல்லாம் போய்விடுமா?