> என் ராஜபாட்டை : Mobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..

.....

.

Friday, July 6, 2012

Mobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..




சில நாட்களுக்கு முன் என் தோழி ஒருவருக்கு நடந்த நிகழ்ச்சி இது . அவர் வைத்திருக்கும் மொபைல்க்கு தேவை இல்லாத SMS மற்றும் தவறான கால்கள் வந்துள்ளது. இவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வந்துள்ளது. வீட்டில் சொன்னால் நீ இனி மொபைல் பயன்படுத்தாதே என சொல்லி விடுவார்கள் என பயந்து இவர் வேறு என் மாற்றி விட்டார் . ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே என்னில் இருந்து பிரச்னை.நம்பர் மாற்றியும் எப்படி இதுபோல கால் , SMS வருகிறது என குழம்பி போனார். என்னிடம் வந்து என்ன செய்யலாம் என கேட்டார் . அவருக்காக எனது நண்பர்கள் துணையுடன் விசாரித்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

இவர் வழக்கமாக ரீ- சார்ஸ் செய்யும் இடத்தில் இவர் நம்பரை குடுத்து விட்டு E.C பண்ண சொல்லிவிட்டு போய் விடுவார் . இந்த நம்பரை வைத்து அங்கு உள்ள சிலர் செய்த செயல்தான் இது .இதுபோல ஆபத்தில் நீங்கள் மாட்டாமல் இருக்க சில வழிமுறைகள் .

  1. முடிந்த வரை ரீ சார்ஸ் கார்ட் வாங்கி ரீ சார்ஸ் செய்யுங்கள் .
  2. E.C செய்யவேண்டிய நிலை வந்தால் முடிந்த வரை நன்றாக தெரிந்த கடையில் மட்டும் செய்யவும் .
  3. இல்லை என்றால் உங்கள் சகோதரர்களை அல்லது ஆண் நண்பர்களை விட்டு செய்ய சொல்லவும்
  4. பேருந்தில் அல்லது கூட்டமாக உள்ள இடத்தில் சத்தமாக உங்கள் நம்பரை சொல்லாதிர்கள் .
  5. தெரியாத நபர்களிடம் நம்பர் தராத்திர்கள் .
  6. உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் நண்பர்கள் உங்கள் நம்பரை யாரிடமும் குடுக்க கூடாது என சொல்லுங்கள் .
  7. தவறான SMS வந்தால் யார் என கேட்டு பதில் அனுப்பாதிர்கள் . அப்படி அனுப்பினால் அதுமுலமாக உங்களிடம் தொடர்ந்து தொடர்பு கொள்ள பார்ப்பார்கள் .
  8. WRONG CALL வந்தால் உடனடியான துண்டித்து விடுங்கள் . அடிகடி வந்தால் வீட்டில் உள்ளவர்களை அல்லது உங்களுக்கு நம்பிக்கையான ஆண்களை பேச சொல்லுங்கள்
  9. பேருந்தில் அமர்ந்து SMS அனுப்பினால் சுற்றுபுறம் பார்த்து அனுப்புங்கள் . நீங்கள் அனுப்பும் செய்தியை அடுத்தவர்கள் படிக்க வாய்ப்புள்ளது .
  10. மொபைல்லை பழுது பார்க்க கொடுத்தால் அதில் உள்ள SIM CARD மற்றும்  Memory Card இரண்டையும் கழட்டிவிட்டு கொடுக்கவும்.
  11. மெமெரி கார்ட்களில் பாடல் பதிவு செய்ய கொடுப்பதாக இருந்தால் நன்றாக தெரிந்த இடத்தில் மட்டும் கொடுக்கவும் . இல்லை எனில் நீங்கள் அழித்த புகைப்படங்கள் , வீடியோக்கள் அனைத்தையும் திருப்ப எடுத்துவிடுவார்கள் .


இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும் .
 பட உதவி : கூகிள் 
 


இதையும் படிக்கலாமே :

வாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்

 

உங்களுக்கு வயதாகிவிட்டதா ? ஒரு டெஸ்ட்.

 

உங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா ? அப்ப இது உங்களுக்கு தான்

 

 

27 comments:

  1. நல்ல கருத்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு

    ReplyDelete
  3. பிரயோசனமான தகவல் பாஸ்...பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. அனைவருக்கும் அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டிய
    விஷயங்களைச் சொல்லும் அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்ல கருத்துக்கள்

    ReplyDelete
  6. நல்ல கருத்துக்கள்

    ReplyDelete
  7. mmm !

    nalla thaan irukku yosanai!

    ReplyDelete
  8. எல்லோருக்குமே உபயோகமான தகவல்தான்.

    ReplyDelete
  9. நல்ல விஷயம் சொ்லலியிருக்கீங்க...

    நல்லது மக்களே பார்த்து நடந்துக்கங்கோ...

    ReplyDelete
  10. வாத்தியின் அட்வைஸ் மிகவும் உபயோகமானது...! மிக்க நன்றி....

    ReplyDelete
  11. பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள் சொந்தமே.
    ஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம். ..!!!!

    ReplyDelete
  12. நீங்கள் கூறியதும் நடக்கிறது இதற்கு மேலேயும் நடக்கிறது. என்ன செய்ய அறிவியலுக்கு இரண்டு பக்கம் மனித மனதிற்கு பல பக்கங்கள்

    படித்துப் பாருங்கள்

    சென்னையின் சாலை வலிகள்

    http://seenuguru.blogspot.com/2012/07/blog-post.html

    ReplyDelete
  13. அருமையான விழிப்புணர்வு தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  14. நல்ல விழிப்புணர்வு தகவல்

    நன்றி-ன்னே

    ReplyDelete
  15. விழிப்புணர்வு பதிவு அன்பரே

    ReplyDelete
  16. இன்றைய சூழ்நிலைக்கு அவசியமான பதிவு. நன்றி சகோ..,

    ReplyDelete
  17. கட்டாயம் அனைவரும் அறிய வேண்டிய பதிவுதான் சகோ...

    ReplyDelete
  18. நன்றி வாத்தியாரே

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. sir its a gud information...it vill b a vry useful info for all girls...

    ReplyDelete
  21. நல்ல கருத்துக்கள் சார்...
    அப்படியே இதையும் பாருங்க:-www.naveensite.blogspot.com

    ReplyDelete
  22. விழிப்புணர்வு விடயம் பகிர்ந்ததற்கு நன்றி

    ReplyDelete
  23. நல்ல விழிப்புணர்வு பதிவு...

    தற்போது பல வங்கிகளின் மொபைல் பேங்கிங் (Mobile Banking) மூலம் உங்கள் அலைபேசியில் இருந்தே ரீசார்ஜ் செய்யும் வசதி உள்ளது..
    நண்பர்கள் அதைப் பயன்படுத்தலாமே!!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...