சில தினங்களுக்கு முன்பு பேருந்தில் ஒரு பழைய நண்பரை பார்க்க நேர்ந்தது , அவர் இப்போது ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றார். நீ என்ன செய்கிறாய் என கேட்டார் . நான் கணினி ஆசிரியர் என சொன்னேன். எந்த பள்ளி என கேட்டார் . பள்ளியின் பெயரை கேட்டதும் “ஒ மெட்ரிக் பள்ளியா?” என கேட்டுவிட்டு இப்ப கல்வித்தரம் குறைய இதுபோல உள்ள தனியார் பள்ளிதான் காரணம் என பேச ஆரம்பித்துவிட்டார் .அவருடன் விவாதம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை காரணம் அவர் மெரிட்டில் வேலைக்கு சேரவில்லை பணம் குடுத்து சேர்ந்தார். இவரை போல பலர் தனியார் பள்ளி ஆசிரியர் என்றால் மட்டமாக பார்க்கின்றனர் . அவர்கள்ளிடம் சில கேள்விகள் ..
- இரண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்தால் எப்பொழுதாவது மாணவர்கள் படிப்பை பற்றி பேசி பார்த்து இருகின்றிகளா ? அரியர்ஸ் , முன்பணம் , சம்பளம் பற்றி மட்டும்தான் இருக்கும் .ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சந்தித்தால் அதில் கண்டிப்பாக மாணவர்களை பற்றி பேச்சு இருக்கும்
- 1500 முதல் சம்பளம் வாங்கும் ஆசிரியர் கூட மாணவன் மேல் காட்டும் அக்கறையை 30000 சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர் காட்டுவதில்லை .
- எந்த தனியார் பள்ளி ஆசிரியரும் 10 அல்லது 12 வகுப்பு போது தேர்வு விடைத்தாள் திருத்தும் இடங்களில் போராட்டம் நடத்துவதில்லை .
- இதுவரை மாணவர்கள் நலனுக்காக ஏதாவது போராட்டம் நடத்தி உள்ளார்களா ?
- எங்களிடம் படிக்கும் அனைத்து மாணவர்களின் குடும்ப விவரம் முதற்கொண்டு எங்களுக்கு தெரியும் . தன்னிடம் படிக்கும் அனைத்து மாணவனின் பெயர்களும் பல ஆசிரியர்களுக்கு தெரியாது .
- தனியார் பள்ளி ஆசிரியர் மாணவர்களிடம் தவறாக நடந்தால் அவரை வேலையை விட்டு நீங்க முடியும் ஆனால் அரசு பள்ளியில் அவருக்கு இடம் மாற்றம் மட்டுமே , இங்கு செய்த தவறை வேறு இடத்தில் தொடரபோகிறார் .
- பல வருடங்களுக்கு முன் படித்த மாணவன் கூட எங்களிடம் தொடர்பில் இருப்பான் , கல்லூரியில் நடக்கும் பாடத்தில் வரும் சந்தேகங்களை கூட போனில் கேட்பான் . அரசு பள்ளியில் இதற்க்கு வாய்ப்பில்லை .
- மாணவன் வீட்டில் நடக்கும் சுக துக்கங்களில் நாங்கள் கலந்து கொள்வோம் . ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் தகுதி பார்ப்பார்கள் .
- TET (ஆசிரியர் தகுதி தேர்வு ) க்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் . காரணம் பணம் கொடுத்து வேலை வாங்கிவிட்டோம் இனி எப்படி தேர்வு எழுதுவது என .
- 5 வருடத்திற்கு ஒருமுறை அனைத்து ஆசிரியர்களுக்கு ஒரு தகுதி தேர்வு வைத்து அதில் வெற்றி பெற்றால்தான் ஆசிரியர் பணியில் தொடரலாம் என ஒரு சட்டம் வந்தால் இங்கு உள்ள ஆசிரியர்களில் 90 % அதை எதிர்ப்பார்கள் .
டிஸ்கி : இது பெரும்பாலான அரசு ஆசிரியர்களுக்கு பொருந்தும் . இதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன. பல ஆசிரியர்கள் உண்மையில் அர்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்
டிஸ்கி : இதில் ஏதேனும் தவறு இருந்தால் அல்லது வேறு கருத்து இருந்தால் பின்னுட்டத்தில் சொல்லுங்கள்
இதையும் படிக்கலாமே :
வாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்
எனக்கு ஒரு சந்தேகம் ...
நான் அழகா பொறந்தது என் தப்பா ?
Tweet |
niyayamana karuthukkal sir
ReplyDeleteநன்றி நண்பா
Deleteசார்வாள், ரொம்ப சூடா இருக்கீங்க.
ReplyDeleteசூட்டிலும் நியாயம் இருக்குவோய்
நாம என்றுமே கூல் தான் தல
Deleteஅத்தனையும் உண்மைகள் நண்பரே...
ReplyDeleteஎன்ன பொங்கிட்டீங்க....சார்....
ReplyDeleteஉண்மையான கருத்துக்கள்
ReplyDeletecorrect maapla.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteம் ம் ம்!
ReplyDeleteநியாயமான கேள்விகள்தான்.
ReplyDeleteஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றால் எப்போதும் தினமலருக்கு மட்டும்தான் இளக்காரம் என்று நினைத்திருந்தேன். இப்போது அதில் நம் இனமும் என்று என்னும்போது சற்று நெருடுகிறது. நானும் கணினி ஆசிரியர்தான் 1994ல் பி.எஸ்.சி கணினி அறிவியல் பட்டம் பெற்றபின் மெட்ரிக் பள்ளியில் ரூ 400க்கு பணியாற்றியவன்தான். அதன் பிறகு எல்காட் காண்ட்ராக்டில் (2000 முதல் 2008 வரை மாதம் ரூ. 2000 சம்பளத்தில்) பணியாற்றி தற்போது அரசுப்பள்ளியில் வேலை.
ReplyDeleteஎங்களுக்கும் கஷ்டம் நஷ்டம் உண்டு என்பது உங்களுக்கு தெரியாதா? அரசுப் பள்ளியின் மாணவர்கள் அதிலும் மேல்நிலை மாணவர்கள் ஆசிரியர்களை எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியாதா? விடலை பருவத்தை தொட்ட மாணவர்களை எப்படி கண்டிப்பது என்றே தெரியவில்லை. அரசுப்பள்ளி மாணவர்கள் யார் தெரியுமா? பிற பள்ளிகளினால் ஒதுக்கப்பட்டு (மதிப்பெண் குறைவு அல்லது ஒழுக்கக் கேடு) டிசி கொடுக்கப்பட்டவர்கள்தான். அவர்களை அடிக்கக்கூடாது, திட்டக்கூட உரிமை இல்லை, ஒழுங்காக படிக்காவிட்டாலோ அல்லது ஒழுக்கக்கேடாக நடந்தாலோ? பெற்றோரை வரச்சொல்லி பாருங்கள், பக்கத்து வீட்டுக்காரர், ஏரியா கவுன்சிலர், அல்லது ஏதாவது ஒருவர் வருவார். எப்படி திருத்துவது, மேல் நடவடிக்கை எடுக்க முயற்சித்தால் பெட்டிசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு போகும்.
ஆனால் உங்கள் நிலையை என்னிப்பாருங்கள். உங்கள் வகுப்பறை சூழலை என்னிப்பாருங்கள், சம்பளம் என்பது நாங்கள் முப்பது வாங்கினால் நீங்கள் ஐந்து வாங்குகிறீர்கள், உங்களுக்கு வரவேண்டியது உங்கள் முதலாளி சாப்பிடுகிறார். அரசு பள்ளி ஆசிரியர்களை குறை கூறாதீர் நண்பரே, யாரும் ஓப்பி அடித்து சம்பளம் பெறவேண்டும் என்ற நோக்கோடு பள்ளி வருவதில்லை. நன்கு கற்பிக்க வேண்டும் என்ற நோக்கோடுதான் வருகிறோம். ஒத்துழைப்பு ‘ஜீரோ’ வானால் நாங்கள் எப்படி நடத்த முடியும். நாளை நீங்கள் அரசுப்பள்ளிக்கு வந்தாலும் இதை கருத்தை ஆமோதிக்கக்கூடும் நண்பரே.
உங்களின் கோபமும் ஆதங்கமும் புரிகிறது... ! நியாயமான கருத்தையும் உண்மையும் சொல்லி உள்ளீர்கள் ! நன்றி !
ReplyDeleteஅவுங்க பிள்ளைங்களையே பெரும்பாலும் தனியார் பள்ளிகள்லதான் படிக்க வைக்கிறாங்க...பின்ன தனியார் பள்ளிகளை குறை சொல்றதுக்கு இவுங்களுக்கு என்ன யோக்யத இருக்குன்னேன் ...
ReplyDeleteஉண்மையான கருத்து நல்ல பகிர்வு...
ReplyDeleteஆமாய்யா யோக்கியன் வந்துட்டான் சொம்பை தூக்கி உள்ளே வையின்னுட்டு மூஞ்சியில நாலு அப்பு அப்புறதை விட்டுட்டு...போங்க வாத்தி...!
ReplyDeleteஅன்புள்ள ராஜா..
ReplyDeleteஉங்கள் கோபம் நியாயமானதே. ஆனாலும் சரியாகக் கடமையாற்றும் உங்களைப்போன்றோர் இதுபோன்ற மட்டமான விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றவேண்டியதில்லை.
தனியார் பள்ளியாக இருந்தாலும் அரசுப் பள்ளியாக இருந்தாலும் எங்கும் குறைகளும் உண்டு நிறைகளும் உண்டு. விதிவிலக்குகளும் உண்டு. எனவே இதனைப் பெரிதுபடுத்தவேண்டாம்.
அடிப்படையில் ஆசிரியர் தொழில் என்பது தவம் போல. மனசாட்சிக்குட்பட்டு பாடம் நடத்தினால்போதும். நம்முடைய வழியில் நேர்மையும் ஒழுக்கமும் கற்பித்தலில் தரமும் இருந்தால் போதும். தானாக மாணவர்கள் நம்மை எங்கு கண்டாலும் அடையாளப்படுத்துவார்கள்.
ஆசிரியர் என்கிற பணிநிலையைத் தாண்டி அசோசியேஷனில் பங்கெடுக்கிறேன் என்கிற பெயரில் பணியைவிட்டு விலகியிருப்பது (இவர்கள் ஒழுங்காகப் பணயாற்றும் சங்க நிருவாகிகளையும் கெடுத்துவிடுவார்கள்) மனைவி பெயரில் எதாவது ஏஜெண்ட எடுத்து அதனைப் பள்ளி நேரத்தில் பயன்படுத்துவது.. பல புராடக்ட்களை எடுத்து விற்பனை செய்வது... தரகு வேலை பார்ப்பது.. சாதி சங்கம் என்று அலைவது எனப பல வேலைகளை முதன்மையாகவும் ஆசிரியர் பணியை இரண்டாம் நிலையிலும் செய்கிறார்கள். இது இரு தரப்பு பள்ளி ஆசிரியர்களிடத்தும் நிலவுகிறது. இவர்களை அடையாளம் கண்டு அரசும் சரி தனியார் நிருவாகமும் சரி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் பல ஆசிரியர்களக்கு முறையான கற்பித்தல் பயிற்சி இல்லை. வெறும் பட்டங்கள் மட்டும் போதாது. இவர்களுக்கு அடிக்கடி பயிற்சி கொடுத்து கற்பித்தல் தரத்தை மேம்படுத்தவேண்டும்.
எனவே பல கருத்தாக்கங்கள் உள்ளன. எனவே ராஜா அவர்களே இதுபற்றி கவலை கொள்ளவேண்டாம். விமர்சனங்களைத் தள்ளி வையுங்கள். நம்மை நம்பி அனுப்பும் பெற்றோர்களுக்கு அவர்கள் பெருமைகொள்ளத்தக்கவகையில் மாணவர்களை உருவாக்குங்கள். உருவாக்குவோம்.
கோபம் தணிக.