> என் ராஜபாட்டை : சினிமா ........சினிமா ....

.....

.

Wednesday, July 25, 2012

சினிமா ........சினிமா ....


 
தன் கேரியரையே புரட்டிப் போட்ட படம் என்று கமல்ஹாசன் சொன்ன அபூர்வ சகோதரர்கள் படத்தில் - அவருக்கு அம்மாவாக முதலில் நடித்தது காந்திமதிதான். அவருடன் ஒரு பாடல் காட்சியே ஷூட் செய்த பிறகு திரைக்கதையை மாற்றிய கமல், காந்திமதிக்கு பதில் மனோரமாவை அம்மாவாக மாற்றினார்.

கமல்
இதற்காக காந்திமதியிடம் பகிரங்கமாய் மன்னிப்பு கேட்டார். ஆனால் காந்திமதி இதற்கெல்லாம் வருத்தப்படவில்லை. அவர் இறக்கும் வரை, கமல் தன்னுடைய மகன் போல என்றே சொல்லி வந்தார். எல்லா சினிமா பிரமுகர்களிடமும் அன்பாய் நேசிக்கும் வெகுளி மனசு அவருக்கு என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்
 
"வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படம் வெளியாகும் வரை, நாடகமாக மட்டும் 100 முறை மிகமிக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திரைப்படம் வெளிவந்து ஓடிமுடிந்தபின்பும் ஒரு 12 முறை நடத்தப்பட்டது.

இந்த
112 முறையில், இந்நாடகத்தின் அபார வசூல் மூலம் நடிகர் திலகம் பல்வேறு ஸ்தாபனங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மற்றும் பல்வேறு நற்செயல்களுக்கும் அள்ளி அளித்துள்ள நன்கொடை மட்டும் ரூபாய் முப்பத்து இரண்டு லட்சம். இத்தொகை இன்றைய பொருளாதார மதிப்பீட்டில் பற்பல கோடிகளுக்குச் சமம்.

வீர
பாண்டிய கட்ட பொம்மன் நாடகத்தில் வீர வசனம் பேசும் நடிகர் திலகத்தின் புகைப்படம் உங்களுக்காக மேலே .


"முத்த காட்சிகளை அனுமதிப்பதா வேண்டாமா என்று தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்று நடிகர் திலகத்திடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது 1967 வருடம்.

அதற்க்கு
"முத்தம் கொடுப்பதை காட்டவே கூடாது. ஆனா நாம முத்தம் கொடுத்துகிட்டதா ஜனங்க நினைக்கணும். அந்த மாதிரிதான் நடிக்கணும். மூடி காட்டுவதுதான் கலை. பச்சையா, உள்ளதை அப்படியே காட்டினா அது கலை ஆகாது. அதனால முத்த்ம் கொடுப்பதை எல்லாம் திரையிலே காட்ட கூடாது என்பதுதான் என் தாழ்மையான வேண்டுகோள்" என்று பதில் அளித்திருக்கிறார் நடிகர் திலகம்.

இந்த
கேள்வியை கேட்டவர் யார் தெரியுமா ???? நம்முடைய இப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. 1967-ம் வருட பொம்மை ஆண்டு மலர் பேட்டியில் "பொம்மை" முதலாம் ஆண்டு மலரில் 'நக்ஷத்திரம் கண்ட நக்ஷத்திரம்' என்கிற புதுப் பகுதிக்காக இந்த சிறப்பு நேர்காணல் நடத்த பட்டுள்ளது.


"ஒரு கைதியின் டைரி " படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிக்க "ஆக்ரி ராஸ்தா" என்கிற பெயரில் எடுக்கப்பட்டது. அதன் இயக்குனர் பாக்யராஜ். அப்போது ஒரு காட்சியில், ஒரு முழு நீள வசனத்தை ஆங்கிலத்தில் பேசுமாறு அமிதாபிடம் சொல்லி இருக்கிறார் பாக்யராஜ். ஆனால் அதற்க்கு கடும் மறுப்பு தெரிவித்த அமிதாப், ஆங்கிலத்தில் பேசி நடித்தால் ஹிந்தி ரசிகர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றும் சொல்லி விட்டாராம். இதையடுத்து இருவருக்குமிடயே ஒரு நீண்ட விவாதம் நடந்து , இறுதியில் பாக்யராஜ் சொல்படி ஆங்கிலம் பேசி நடித்துள்ளார் அமிதாப்.

படம்
வெளியாகி அந்த குறிப்பிட்ட காட்சிக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்க, அதிகாலை இரண்டு மணிக்கு பாக்யராஜுக்கு போன் செய்து பாராட்டியிருக்கிறார் அமிதாப். தன்னுடைய படங்களில் இரண்டு வரி கூட ஆங்கிலம் பேசி இராத அமிதாப், ஒரு நீண்ட காட்சியில் ஆங்கிலம் பேசியது உங்களால் மட்டுமே என்று பாக்யராஜை பாராட்டி இருக்கிறார்கள் ஹிந்தி திரையுலகின் பிரபல வசனகர்த்தாக்கள் சலீம் , ஜாவீத் இருவரும்.

ஒரு
இயக்குனராக தான் நினைப்பதை கொண்டு வர வேண்டும் என்பதில் எத்தனை பிடிவாதம் தனக்கு உண்டு என்பதை ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறியுள்ள பாக்யராஜ், இந்த சம்பவத்தையும் தெரிவித்துள்ளார்.

நன்ன கண்ட எல்லி (என் கணவன் எங்கே) என்ற கன்னடப் படத்தில் ஒரே பாடலில் 14 மொழிகளில் பாடியிருக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி.


தகவல் உதவி : Facebook Group   

16 comments:

 1. பல சினிமா தகவல்கள்... அருமை... நன்றி.....

  ReplyDelete
 2. சுவாரிஸ்யமாக இருக்கின்றது சகோ..

  ReplyDelete
 3. நிறைய விஷயங்கள்!

  தல இந்த பேஸ்புக்கை வச்சே பல பதிவு போடுறீங்களே ஹி ஹி ஹி!

  கலக்குங்க :)

  ReplyDelete
 4. அரிய தகவல்கள் பலவற்றை சொல்லி இருக்கிப்ங்க நன்றி சகோ

  ReplyDelete
 5. சிவாஜிகணேசன் உதவிய பல விஷயங்கள் வெளியே தெரியாமல் இருந்துள்ளதாக தெரிகிறது....!!!

  ReplyDelete
 6. பாக்கியராஜ் படங்கள் எல்லாமே ஹிந்தி ரீமேக்கில் சூப்பர் ஹிட்தான்...!

  ReplyDelete
 7. பழைய விசயங்கள் புதுமையாக இருந்தது! அருமை!

  ReplyDelete
 8. மிகவும் அருமையான தகவல்கள்.
  நன்றி.
  சமயம் கிடைக்கும் போது இந்த தம்பியின் ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே...
  http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

  ReplyDelete
 9. அட... நிறைய அரிய தகவல்கள்!!
  பகிர்தலுக்கு நன்றி நண்பரே!!

  ReplyDelete
 10. தகவல் சுவாரசியமாக உள்ளது .பகிர்வுக்கு
  நன்றி சகோ .

  ReplyDelete
 11. எல்லா தகவல்களுமே சுவாரசியமாக இருந்தது. நன்றி

  ReplyDelete
 12. பல சினிமா தகவல்கள் ஒரே தொகுப்பில்..நன்றி.

  ReplyDelete
 13. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...